search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபர்"

    • வீட்டின் முன் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது. ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேத மடைந்தது
    • தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.பிரிவு போலீசுக்கு மாற்றப் பட்டுள்ளது. மண்டைக்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீசாரிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு அருகே கருமங்கூடலை சேர்ந்தவர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55).

    கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி இரவு இவரது வீட்டுமுன்பு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் 2 பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இதில் வீட்டின் முன் ஜன்னல் கண்ணாடி உடைந்தது.ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது. ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேத மடைந்தது. வீட்டு முன் நிறுத்தப்பட்ட காரின் முன் பகுதியில் பெட்ரோல் கறை படிந்திருந்தது.

    குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமை யிலான போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மண்டைக்காடு போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய தில் உடைந்து சிதறிய கண்ணாடி துண்டுகளை சேகரித்து எடுத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கல்யாணசுந்தரம் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக குளச்சல் இலப்பைவிளை பகுதியை சேர்ந்த முஸ்ஸா மில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் கோர்ட்டு அனுமதி பெற்று குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இலப்பைவிளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து சென்றனர்.

    இந்த வழக்கில் தொடர்புடையதாக மணவாளக்குறிச்சி ஆறான் விளையை சேர்ந்த அல்ரசிம் (22) என்ற கல்லுரி மாணவரையும், சாலத்திவிளையை சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி ரிஸ்வான் (27) ஆகியோரை மண்டைக்காடு போலீசார் கைது செய்தனர்.மேலும் இவ்வழக்கில் தலை மறைவாகி உள்ள ஆறான் விளை முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலி மான் ஆகியோரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட குளச்சல் வாலிபர் முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் மீது கடந்த மாதம் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் அரவிந்த் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து மண்டைக்காடு போலீசார் முஸ்ஸாமில் மீது தேசிய பாதுகாப்பு சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் முஸ்ஸாமில் நாகர்கோவில் சிறையிலிருந்து பாளை யங்கோட்டை சிறைச்சா லைக்கு மாற்றப்பட்டார்.

    தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.பிரிவு போலீசுக்கு மாற்றப் பட்டுள்ளது. மண்டைக்காடு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் இருந்து டி.எஸ்.பி. வினோதினி தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் குமரி மாவட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக இங்கேயே முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். இன்று கருமன்கூடல் பகுதியில் விசாரணை நடத்தினார்கள்.

    • கடந்த மாதம் 25-ந் தேதி இரவு 2 பெட்ரோல் வெடி குண்டுகள் வீச்சு
    • மண்டைக்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்த வர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது55). கடந்த மாதம் 25-ந் தேதி இரவு இவரது வீட்டுமுன்பு பைக்கில் வந்த 2 நபர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் 2 பெட்ரோல் வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

    இதில் வீட்டின் முன் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது.ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேதம டைந்தது. வீட்டு முன் நிறுத்தப்பட்ட காரின் முன் பகுதியில் பெட்ரோல் கறை படிந்திருந்தது. குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மண்டைக்காடு போலீ சார் பெட்ரோல் குண்டு வீசியதில் உடைந்து சிதறிய கண்ணாடி துண்டுகளை சேகரித்து எடுத்து சென்ற னர். இந்த சம்பவம் குறித்து கல்யாணசுந்தரம் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.இந்த சம்பவத்தில் தொடர்புடை யதாக குளச்சல் இலப்பை விளை பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்டுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கோர்ட் அனுமதி பெற்று நேற்று முன்தினம் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இலப்பைவிளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி னர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து சென்றனர்.சோதனையின்போது குளச்சல் வருவாய் ஆய்வா ளர் முத்து பாண்டி, மண வாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.சோதனைகள் அனைத்தும் வீடியோவில் பதிவுச்செய்யப்பட்டது.இந்நிலையில்இந்த வழக்கில் தொடர்புடையதாக மணவா ளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்த அல்ரசிம் (22), சாலத்திவிளையை சேர்ந்த ரிஸ்வான் (27) ஆகியோரை மண்டைக்காடு போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இவ்வழக்கில் தலைமறைவாகி உள்ள ஆறான்விளை முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலிமான் ஆகியோரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • மேலும் 2 பேருக்கு தொடர்பு
    • கைதான வாலிபரிடம் விசாரணை

    நாகர்கோவில்:

    கோவை, மதுரை, சேலத்தில் பாரதிய ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டது.

    இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா ஆதரவா ளர் மண்டைக்காடு கருமன் கூடல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம் (வயது 55) என்பவரது வீட்டில் கடந்த 24-ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதை யடுத்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்களை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் பெட்ரோல் குண்டு வீசுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் தொழில் அதிபர் கல்யாண சுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குளச்சல் பகுதியைச் சேர்ந்த முஸ்ஸா மில் என்ற ஷமில் கான் (25) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.போலீசார் தேடுவது அறிந்த அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    குமரி மாவட்டத்தில் இன்று 3-வது நாளாகவும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் இரவு நேரங்களில் இரண்டு ஷிப்டுகளாக ரோந்து சுற்றி வந்தனர். முக்கியமான சந்திப்புகள் சோதனை சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் வாகன சோதனையும் நடத் தப்பட்டு வருகிறது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலை மையில் பாதுகாப்பு பணி யில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • சதீஷ்குமார் புதுவையில் இருந்து சென்னைக்கு வேலை காரணமாக காரில் சென்றுள்ளார்.
    • காரில் இருந்த 5000 ரூபாய் பணம் 55 ஆயிரம் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் திருடு போனது.

    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 41). தொழில் அதிபர்.இவர் புதுவையில் இருந்து சென்னைக்கு வேலை காரணமாக காரில் சென்றுள்ளார். திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆர்யாஸ் உணவகத்தில் சாப்பிடுவதற்காக இரவு தன் காரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் காரில் இருந்த 5000 ரூபாய் பணம் 55 ஆயிரம் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் திருடு போனது தெரியவந்தது. திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகாரின் பெயரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்துசிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்திமர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.
    • நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 36), தொழிலதிபர். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார். ஸ்காட் கல்லூரி அருகே உள்ள சாலையில் சென்ற போது அந்த சாலையில் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.

    எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தொழில் அதிபர், அவரது மனைவி ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
    • கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

    கோவை,

    கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன் (வயது 50). தொழில் அதிபரான இவர் கோவை மற்றும் ஈரோட்டில் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் உள்ள நிறுவனத்தில் பவானியைச் சேர்ந்த 37 வயது பெண் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதனின் வீட்டுக்கு வந்தார். அதன்பின் தீக்காயங்களுடன் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நவநீதன் வீட்டுக்கு சென்ற அந்த பெண் மருத்துவச் செலவுக்கு அந்த பெண் பணம் கேட்டதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அந்த பெண் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த தன்னை தொழில் அதிபர் நவநீதன் ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் தொடர்ந்து 6 முறை கர்ப்பம் ஆனேன். 6 முறையும் மிரட்டியே எனது கர்ப்பத்தை கலைக்கச் செய்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நான் மருத்துவ உதவிக்காக பணம் கேட்டுச் சென்றேன். அங்கு நவநீதனும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து என் மீது தீவைத்து எரித்தனர் என கூறியிருந்தார். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதைத்தொடர்ந்து தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் தேடுவதை அறிந்து நவநீதன், கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க ஆர்.எஸ்.புரம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நவநீதனின் மனைவி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பெண் ஊழியர் கொலை வழக்கை விசாரித்து வரும் 3 தனிப்படை போலீசார் நவநீதன் மனைவியை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் பெறும் முயற்சியில் அகிலா ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர் வக்கீல்கள் மூலம் கோவை கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வர உள்ளது. 

    ×