search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
    X

    கோப்பு படம்

    மண்டைக்காடு அருகே தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் 2 பேர் கைது

    • கடந்த மாதம் 25-ந் தேதி இரவு 2 பெட்ரோல் வெடி குண்டுகள் வீச்சு
    • மண்டைக்காடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்த வர் தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது55). கடந்த மாதம் 25-ந் தேதி இரவு இவரது வீட்டுமுன்பு பைக்கில் வந்த 2 நபர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் 2 பெட்ரோல் வெடி குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர்.

    இதில் வீட்டின் முன் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. ஜன்னல் அருகே போடப்பட்டிருந்த சோபா செட்டின் பிளாஸ்டிக் கவர் எரிந்து கருகியது.ஜன்னல் கீழ் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் எரிந்து சேதம டைந்தது. வீட்டு முன் நிறுத்தப்பட்ட காரின் முன் பகுதியில் பெட்ரோல் கறை படிந்திருந்தது. குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மண்டைக்காடு போலீ சார் பெட்ரோல் குண்டு வீசியதில் உடைந்து சிதறிய கண்ணாடி துண்டுகளை சேகரித்து எடுத்து சென்ற னர். இந்த சம்பவம் குறித்து கல்யாணசுந்தரம் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.இந்த சம்பவத்தில் தொடர்புடை யதாக குளச்சல் இலப்பை விளை பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்ற ஷமில்கான் (27) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்டுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கோர்ட் அனுமதி பெற்று நேற்று முன்தினம் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இலப்பைவிளையில் உள்ள முஸ்ஸாமில் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி னர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் போலீசார் அவரது வீட்டிலிருந்து ஒரு லேப்டாப் மற்றும் செல்போன் சிம் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து சென்றனர்.சோதனையின்போது குளச்சல் வருவாய் ஆய்வா ளர் முத்து பாண்டி, மண வாளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராஜஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.சோதனைகள் அனைத்தும் வீடியோவில் பதிவுச்செய்யப்பட்டது.இந்நிலையில்இந்த வழக்கில் தொடர்புடையதாக மணவா ளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்த அல்ரசிம் (22), சாலத்திவிளையை சேர்ந்த ரிஸ்வான் (27) ஆகியோரை மண்டைக்காடு போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இவ்வழக்கில் தலைமறைவாகி உள்ள ஆறான்விளை முகம்மது ராபின், ஆண்டார்விளை ஆதிலிமான் ஆகியோரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×