என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாகர்கோவிலில் விபத்தில் தொழில் அதிபர் பலி
  X

  நாகர்கோவிலில் விபத்தில் தொழில் அதிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.
  • நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் பார்வதிபுரம் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 36), தொழிலதிபர். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டார். ஸ்காட் கல்லூரி அருகே உள்ள சாலையில் சென்ற போது அந்த சாலையில் மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது.

  எதிர்பாராதவிதமாக அந்த மோட்டார் சைக்கிள், பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×