search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூர்வாரும் பணி"

    • கீழ்பவானி வாய்க்காலில் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது.
    • வாய்க்காலில் தூர் வாரும் பணிக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    காங்கயம் :

    நீர்வள துறையில், கோவை மண்டலத்தில் கீழ்பவானி வடிநிலை கோட்டத்தில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் அமைந்துள்ளது. இதில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

    இந்த வாய்க்காலில் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதில் 1.03 லட்சம் ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த வாய்க்காலில் தூர் வாரும் பணிக்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மறவபாளையம் முதல் மங்கலப்பட்டி கிராமம் வரை உள்ள வாய்க்கால் 39 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.இப்பணியை கலெக்டர் வினீத் நேரில் சென்று பார்வையிட்டார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, உதவி பொறியாளர்கள் சபரிநாதன், குமரேசன் மற்றும் பாசன உதவியாளர்கள் ஆய்வின் போதுஉடன் இருந்தனர்.

    • குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • விரைவில் குந்தா அணை முழுமையாக தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டி 

    நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின் உற்பத்திக்குபின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.

    பின்னர், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 ெமகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கெத்தை மின்நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களின் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணையை தூர் வாராததால் அணையில் பெருமளவு சேறு, சகதிகள் தேங்கியுள்ளன. 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளன. குறைந்தபட்ச மழை பெய்தாலே அணை நிரம்பி விடும். மேலும் சேறு, சகதிகளால் அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.

    இந்த அடைப்பால் கெத்தை மின்நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுக்கு முன் உலக வங்கி நிதியுதவியின் மூலம் குந்தா அணையை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் சேறு, சகதி மற்றும் கழிவுகளை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொட்டுவதற்கு உரிய இடம் தேர்வாகாததாலும், காலதாமதம் ஏற்பட்டதால் குந்தா அணை தூர்வாரும் நடவடிக்கையிலும் தடங்கல் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, தற்போது மின்வாரியம் தரப்பில் குந்தா அணை தூர் வார மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அணைகள் மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூ.40 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்ட மதிப்பீடானது ஒன்றிய நீர்வளத்துறை மற்றும் உலக வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட் டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விரைவில் குந்தா அணை முழுமையாக தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டை கடந்து விட்டன.
    • மின்சாரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயன்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரியில், குந்தா, பைக்காரா மின் வட்டத்தின் கீழ், 13 அணைகள் உள்ளன. பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டு 60 ஆண்டை கடந்து விட்டன.

    நீலகிரி அணைகளில் இருந்து, 833.65 மெகாவாட் நீர்மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

    குந்தா, கெத்தை, பில்லூர் அவலாஞ்சி அணைகளில் தண்ணீரை தேக்கி வைத்து, ராட்சத குழாய்களில் கொண்டு சென்று மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த மின்சாரம் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயன்படுகிறது. சகதி நிறைந்த அணைகள் துார்வாரப் பட்டு, பல ஆண்டுகள் ஆனதால், தண்ணீர் தேக்கி வைப் பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது.

    இதனால், பருவ மழையின் போது, ஏராளமான நீர் வீணாக வெளி யேறுகிறது. சேறும், சகதியுமான அணைகளை உடனடியாக துார்வார வேண்டி இருப்பதால், மின்வாரிய தலைமை அலுவலகம் இதற்கான அறிக்கையை கேட்டுள்ளது. இதுகுறித்து குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில் ராஜன் கூறுகையில், குந்தா, பைக்காரா நீர் மின்திட்டத்தின் கீழ், அதிகளவில் சகதி நிரம்பிய அணைகளை துார்வார மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து வாரியத்துக்கு விரைவில் அனுப்பப்படும்,'' என்றார்.

    • வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார்.
    • வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உர மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

    அதன் பின்னர் அண்ணாதுரை கூறுகையில், தற்போது450 சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.இதன் மூலம் முன்பை விட வாய்க்கால்கள் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் மதியரசன், கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்த், உர கட்டுப்பாட்டு அலுவலர் வருகுனபாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள், ஊழியர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வேளாண் இயக்குனர் அண்ணாதுரை கொள்ளிடம் அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திப்பயிர், நெற்பயிற் உள்ளிட்ட பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • தேனி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • அதன்படி ஜங்கால்பட்டி செட்டிகுளம் தூர்வாரும் பணியை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.

    தேனி:

    தேனி அருகே ஜங்கா ல்பட்டி ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் சுப்பிரமணி செட்டிகுளத்தை ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை ஜே.சி.பி எந்திரத்தை இயக்கி தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து, பூமலைக்குண்டு ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 32 ஆயிரம் மதிப்பீட்டில் செயலற்ற ஆழ்துளை கிணறு அருகில் அமைக்க–ப்பட்டுள்ள செறிவூட்டு குழி பணி, ஜங்கால்பட்டி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கன்னிமார் கோவில் ஓடையில் சிமெண்ட் தடுப்பணை கட்டுமானப்பணி, குப்பி நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் தென்றல் நகரில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை பணி, பிரதமர் மந்திரி குடியிருப்புத்திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டுமானப்பணி, ரூ.1.53 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டு கொட்டகை பணி, அம்பாசமுத்திரம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.15.41 லட்சம் மதிப்பீட்டில் அமை–க்கப்பட்டுள்ள வடிகால் பணி ஆகிய பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    • விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
    • மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவின் முக்கிய வடிகால்களில் ஒன்றாக சுள்ளான் ஆறு விளங்கி வருகிறது. மேலும், சுள்ளான் ஆறு மூலம் அகரமாங்குடி, சித்தர்காடு உள்பட பல கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுள்ளான் ஆற்றில் பாலூர், சந்திராபாடி, புரசக்குடி, வேம்பகுடி, பொன்மான்மேய்ந்தநல்லூர், கருப்பூர், சோலைபூஞ்சேரி, மேலசெம்மங்குடி, மட்டையாண்திடல், கோவிலாம்பூண்டி உள்பட பல கிராமங்கள் வடிகால் வசதி பெறுகின்றன.

    பாலூரில் இருந்து ஆவூர் வரையில் சுள்ளான் ஆறு முழுவதையும் ஆகாயதாமரைச்செடிகள் மற்றும் வெங்காய செடிகள் பெருமளவில் மண்டியநிலையில் காணப்படுவதால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல பெருந்தடையாக இருந்து வந்தது. அதனால் ஆண்டுதோறும் விவசாய நிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது வழக்கம்.

    அதனால் விவசாயிகள் சுள்ளான் ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். பொதுப்பணிதுறையினர் அவ்வப்போது சுள்ளான் ஆற்றில் வேம்பகுடி, அகரமாங்குடி பகுதியில் மண்டியுள்ள ஆகாயதாமரைச் செடிகளை மட்டும் சுத்தம் செய்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். அடுத்த வருடமும் அதே பகுதியில் ஆகாயதாமரை செடிகள் மண்டி விடும்.

    இந்தாண்டு கடந்த மாதம் சுள்ளான் ஆற்றில் வேம்பகுடியில் இருந்து தூர்வாரும் பணி தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் சுள்ளான் ஆறு தூர்வாரும் பணி முடிவடையாமல் மட்டையாண்திடல் வரையில் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளதால் பாசனத்திற்கு திறந்து விடுவது தாமதம் ஆகி வருகிறது.

    மேலும் மேட்டூர் அணையும் திறக்கப்பட்டு பருவமழையும் தொடங்க உள்ளதால் சுள்ளான் ஆற்றில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இயல்பாக 3.230லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
    • நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும்

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி ஆயத்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பி ல்மகேஷ்பொய்யாமொழி, சக்கரபாணி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் இயல்பாக 3.230லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4964 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே 24-ந் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை விட குறுவையில் 5.2 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 13.5 லட்சம் ஏக்கரும் சாகுபடி பரப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளும் முன்கூட்டியே தொடங்கப்படுவதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சம்பா பயிர்கள் வெள்ள நீரில் மூழ்காமல் காக்கப்படும். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் உயர்வதால் மாற்று பயிர் வகைகளும் அதிக அளவில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பும் ஏற்படும்.

    வேளாண் பெருமக்களின் நலன் கருதி இந்த ஆண்டும் ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 3 லட்சம் உழவர்கள் பயன்பெறுவர். வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.47 கோடி ஒதுக்கீடு மானிய விலையில் வழங்கப்படும்.

    வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் 2400 மெட்ரிக் டன் நெல் விதைகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ.4 கோடியே 20 லட்சம் வழங்கப்படும். வேளாண் பொறியியல் துறை மூலம் உள்ளிட்ட 237 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் 50 விழுக்காடு மானியத்தில் ரூ. 6 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும். இதன் மூலமாக கடந்த ஆண்டு சாதனை அளவை விட இந்த ஆண்டும் அதிக பரப்பளவில் சாதனை எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு குறுவைப் பருவத்தில் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு குறுவை சாகுபடிக்குத் தேவையான குறுகிய கால நெல் இரக விதைகள், இரசாயன உரங்கள் உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் போன்ற இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்து நெல் நடவு எந்திரங்களை கொண்டு விரைவாக நடவு பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஒட்டுமொத்த டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்கு 7060 மெட்ரிக் டன் நெல் விதைகள் தேவைப்படுகிறது. இதுவரை 3547 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளது. பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில் கடைமடை பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

    விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யாமல் அரசு டெப்போக்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடுதுறை 37, ஏஎஸ்டி 16 ஆகிய நெல் ரகங்கள் அதிக மகசூலை தரக்கூடியது இந்த ரக விதைகள் அதிகளவில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர் கடன் வழங்கி சாகுபடி பணியை தொடங்க கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கடன் பெற ஏதுவாக வருவாய் துறையினரால் வழங்கப்படும் அடங்கல் சான்றிதழ்களை உரிய காலத்தில் வழங்கி விவசாயிகளுக்கு வருவாய் துறையினர் உதவி புரிந்திட வேண்டும். தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேங்காயை மூலப் பொருளாகக் கொண்டு பட்டுக்கோட்டை பகுதியில் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டும்.

    பயிர் காப்பீடு திட்டத்தில் மாநில அரசு தனது பங்களிப்பை அதிகம் செலுத்துகிறது. எனது பிற மாநிலங்களைப் போல் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். 35 சதவீதம் இடுபொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்றவகையில் உற்பத்திப் பொருளுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    இனி வரும் காலங்களில் தூர்வாரும் பணியை மார்ச் மாதங்களிலேயே தொடங்கிட வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் எஸ். எஸ். பழனிமாணிக்கம், ராமலிங்கம், எஸ். கல்யாணசுந்தரம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, அசோக்குமார்,பூண்டி கலைவாணன், பன்னீர்செ ல்வம், அண்ணாதுரை, மேயர்கள் சண்.ராமநாதன், சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

    ×