search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறுவை தொகுப்பு திட்டப் பணிகளை  மாநில வேளாண் இயக்குனர் ஆய்வு
    X

    உமையாள்பதி கிராமத்தில் பருத்தி பயிரை மாநில வேளாண் இயக்குனர் அண்ணாதுரை பார்வையிட்டார்.

    குறுவை தொகுப்பு திட்டப் பணிகளை மாநில வேளாண் இயக்குனர் ஆய்வு

    • வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார்.
    • வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.

    சீர்காழி:

    கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள உர மூட்டைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.

    அதன் பின்னர் அண்ணாதுரை கூறுகையில், தற்போது450 சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. வாய்க்கால்கள் வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படுவது இதுவே முதன்முறை.இதன் மூலம் முன்பை விட வாய்க்கால்கள் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

    வரும் ஆண்டில் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணி விஸ்தரிக்கப்படும் என்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் மதியரசன், கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அரவிந்த், உர கட்டுப்பாட்டு அலுவலர் வருகுனபாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள், ஊழியர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வேளாண் இயக்குனர் அண்ணாதுரை கொள்ளிடம் அருகே உள்ள உமையாள்பதி கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள பருத்திப்பயிர், நெற்பயிற் உள்ளிட்ட பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×