search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிளக்கு பூஜை"

    • வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக தாமரை வடிவில் யாக குண்டம் அமைத்து உலக நன்மை வேண்டி லலிதா சகஸ்ஸர நாம யாகம் நடந்தது.
    • தொடர்ந்து மாலை வேதநாயகி சன்னதி முன்பாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    சங்கமேஸ்வரர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக தாமரை வடிவில் யாக குண்டம் அமைத்து உலக நன்மை வேண்டி லலிதா சகஸ்ஸர நாம யாகம் நடந்தது. சங்கமேஸ்வரர் கோவில் பாலாஜி சிவம் சிவாச்சாரியார் தலைமை யில் குழுவினர் மூலம் யாகம் நடை பெற்றது.

    இதனைத் தொடர்ந்து வேதநாயகி அம்மன் கோவிலில் உள்ள மூலவர் வேதநாயகி அம்மனுக்கு பெண்கள் 1008 பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால்குட அபி ஷேகம் நடைபெற்றது.

    இதில் பவானி, காளிங்க ராயன் பாளையம், குமார பாளையம் உள்பட பலேவறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேதநாயகி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து மாலை வேதநாயகி சன்னதி முன்பாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆடி கடைசி வெள்ளி விழா குழுவினர் செய்திருந்தனர்

    • 108 பெண்கள் கலந்து கொண்டனர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதைதொடர்ந்து சுமங்கலி பெண்களை வரிசையாக அமர வைத்து வேதம் மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுமங்கலி பெண்கள் திருவிளக்கிற்கு குங்கும் அர்ச்சனை செய்தனர்.

    இதையடுத்து மங்கள மேல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த திருவிளக்கு பூஜையை காண திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காமாட்சி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    • அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டியும், இயற்கை வளங்கள் பெறவும், மழைவளம் வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.

    காலையில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலையில், உப்பு மற்றும் கலர் பவுடர்களால் ஸ்ரீகுபேர சக்கரம் வரையப்பட்டு, அதில் குத்து விளக்குவைத்தும், 450 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.

    திருவண்ணாமலை ஜி.ஆர்.டி.தங்கமாளிகை மேலாளர் மூர்த்தி, சென்னை ஸ்டடி சென்டர் தமிழ்வேந்தன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து, விழாவை தொடங்கி வைத்தனர்.

    ஆரிய வைசிய சமாஜ சங்க துணை தலைவர் கே.என்.பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் என்.ரமேஷ், ஏழுமலை, செல்வன், சண்முகம், காஞ்சிபுரம் சுந்தர், திருவண்ணாமலை சிவா, விழுப்புரம் அரவிந்தன், செய்யாறு ஜெயவேலு, செஞ்சி விஜயகுமார், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கவிதா ஏழுமலை, பாக்யராஜ், கே.பி.மணி, ஆதிபராசக்தி மன்ற செவ்வாடை தொண்டர்கள் பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது
    • ரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 6-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் தினமும் மண்டலபூஜை உபயதாரர்கள் சார்பில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஆடி மாத மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திரௌபதி அம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    ரந்தினி டத்தோ. எஸ்.பிரகதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 108 பெண்கள் குத்து விளக்குடன் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு மந்திரங்கள் உச்சரித்து வழிபாடு நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக தீபாரதனை காட்டப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்த திருவிளக்கு பூஜையில் பூலாம்பாடியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி அருகே திருவிளக்கு பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

    சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இந்த கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இல்லாத வாழ்க்கை நிலைக்க கோரியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், விநாயகர் மந்திரம், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆரத்தியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • தொண்டி அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
    • இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருவெற்றியூரில் உலக அமைதிக்காகவும், கொரோனா வைரஸ் முற்றிலும் அழிய வேண்டியும், இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நிறுவன தலைவர் இளையராஜா தலைமையில் நடந்தது.

    சாராதா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுந்தரி விளக்கு பூஜையை தொடங்கிவைத்தார். கல்லூரி மாணவிகள் மந்திரங்கள் ஓதினர்.பா.ஜ.க.மாவட்ட தலைவர் கதிரவன், மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், துரைப்பாண்டி, இந்து ஜனநாயகப் பேரவை நிறுவன தலைவர் அண்ணாத்துரை, மணிகண்ட குருக்கள், முன்னிலை வகித்தனர்.

    பாகம்பிரியாள் அம்மன் கோவில் முன்பு நடந்த இந்த திருவிளக்கு வழிபாட்டில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    ×