search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பணி"

    • கயிலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
    • தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில் அமைந்துள்ளதால் வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றது.

    திருவையாறு:

    திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டது.மாமன்னன் ராஜராஜ சோழனின் மனைவி சோழமாதேவி தமது மன்னனின் வெற்றிகளுக்காகவும் தீர்க்காயுளுக்காகவும் வேண்டி மேற்கொண்ட ஆன்மீகச் சேவைப் பிரார்த்தனையின் பொருட்டு திருவையாறு ஐயாறப்பர் கோவில் வடக்குப் பிரகாரத்தில் கயிலாச நாதர் கோயிலைக் கட்டி, குடமுழுக்கு முதலிய திருப்பணிகளையும் செய்து வைத்துள்ளார். மேலும், பொன், பொருள் மற்றும் நிலம் முதலிய நிவந்தங்களையும் அளித்தார்.

    இதன்பொருட்டு தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா ஐயாறப்பர் கோயில் வடகயிலாயத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    சதயவிழாவை முன்னிட்டு வடகயிலை கயிலாச நாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

    சிவனடியார் பழனிநாதன் தலைமையிலான வடகயிலைச் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் திருவாசகம் முற்றோதல் வழிபாடும், திருமுறைகள் பாடிய அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர் மற்றும் ஞானசம்மந்தர் ஆகிய நான்கு சைவசமயக் குரவர்களின் திருவுருவப்பட வீதிஉலா நடந்தது.

    அப்பர் காட்சி கண்ட தென்கயிலாயத்திற்கு எதிரே வடபுறத்தில்அ மைந்துள்ளதால் இக் கயிலாசநாதர் கோயில் மற்றும் நந்தவனப் பகுதி வடகயிலாயம் என்னும் சிறப்பு பெயர் பெற்றுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் வடகயிலைச் சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் செய்திருந்தார்கள்.

    • இக்கோயில் நீண்ட நாட்களாக சிதலமாகி இருந்த நிலையில் உள்ளூர் மக்களும், பக்கத்து கிராமவாசிகளும், பக்தர்களும் ஒருங்கிணைந்து திருப்பணிகளை மேற்கொண்டனர்.
    • விரைவில் இக்கோவிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோடுகிழி கிராமத்தில் வெட்டாற்றின் வடகரையில் பழமையான முக்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நீண்ட நாட்களாக சிதலமாகி இருந்த நிலையில் உள்ளூர் மக்களும், பக்கத்து கிராமவாசிகளும், பக்தர்களும் ஒருங்கிணைந்து திருப்பணிகளை மேற்கொ ண்டனர்.

    கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திரு கூட்டத்தின் நிறுவனர் திருவடி சுவாமிகள் கோவிலு க்கு வந்து தரிசித்து திருமுறை பாராயணம் செய்து கோயில் திருப்பணியை துவக்கி வைத்தார்.

    சுவாமிக்கு சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.அது சமயம் திருப்பணி குழுவினர், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். விரைவில் இக்கோவிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக திருப்பணி குழுவினர் தெரிவித்தனர்.

    • ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சங்கு சக்ர கதா அபய கஸ்தத்துடன் பிப்பல மகரிஷிக்கு காட்சி.
    • புனிதநீர் கடத்தில் எடுத்து யானை மீது வைத்து ஒட்டகம், குதிரை ஊர்வலத்துடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சோழன்பேட்டை கோழிகுத்தி கிராமத்தில் தயாலட்சுமி சமேத வானமுட்டி பெருமாள் என்கிற சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.

    ஒரே அத்திமரத்தில் 14 அடி உயரத்தில் சங்கு சக்ர கதா அபய கஸ்தத்துடன் பிப்பல மகரிஷிக்கு காட்சி தந்த வண்ணம் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

    இக்கோவிலில் பிதுர்தோஷம், ஹத்திதோ ஷம், சனிதோஷமும் சர்வ வியாதி நிர்வத்தி செய்வதோடு கோடி பாபங்களையும் விமோச னமாக்கும் கோடி ஹத்தி பாபவிமோசனபுரம் என்ற கோழிகுத்தி கிராமத்தில் வைகானச பகவத் சாஸ்திர முறையில் பூஜித்து வருபவரான வானமுட்டி பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இக்கோவல் திருப்பணி வேலைகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனையொட்டி 5ம் தேதி காலை காவிரிக்கரையில் இருந்து யாகசாலைக்காக புனிதநீர் கடத்தில் எடுத்து யானை மீது வைத்து ஒட்டகம், குதிரை ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு பூர்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    6ம் காலயாக சாலை பூஜையின்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு மற்றும் பிரசாதங்கள் யாகசாலையில் பெருமா ளுக்கு சாற்றப்பட்டு பூர்ணா ஹுதி செய்யப்ப ட்டது.

    நேற்றுகாலை 8ம் காலயாகசாலை பூஜைகள் தொடங்கி பூர்ணாஹுதி ஆகி யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமானத்தில் உள்ள கலசத்தில் ஊற்றி மகாகும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் மூலவர் மகாசம்ரோஷணம், திருவாராதனம், சாற்று முறை, இரவு பெருமாள் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை தொழி லதிபர் விஜயகுமார் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.

    • கோவில் திருப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கணபதி, மகாலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்பட பூர்வாங்க பூஜைகள் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அம்மாபேட்டை அருகே உள்ள புத்தூர் கிராமத்தில் உள்ள சியாமளாதேவி, மகா காளியம்மன் கோவில் திருப்பணி கிராமவாசிகள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் நடைபெற்று வந்தது.

    கோயில் திருப்பணி முடிவுற்ற நிலையில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி, மகாலெட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை திருப்பணிகுழுவினர், புத்தூர் கிராம வாசிகள், இளைஞர் மன்றத்தினர் செய்தனர்.

    • சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • கோவிலில் உள்ள ராஜகோபுரம், விமானங்கள், திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலயப் பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் முடிந்தும் கும்பாபிஷேகம் நடைபெறாததால் திருப்பணி வேலைகளை விரைவில் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என ஆன்மீக அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கோவிலில் உள்ள ராஜகோபுரம், விமானங்கள், திருப்பணி வேலைகள் நடைபெறுவதற்கான பாலாலயப் பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது.யாகசாலை அமைக்கப்பட்டு பூர்ணாஹூதி, விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், ரஷாபந்தம், கும்பஅலங்காரம், ராஜகோபுரம், விமானங்கள், கலாகர்ச்சணம், மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலையில் பூஜைகள் மீண்டும் தொடங்கியது.

    யாக சாலையில் மரத்தி–லான ராஜகோபுரம் மாதிரி வடிவத்திற்கு பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த 11 கலசங்கள் நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து கும்ப நீர் மூலஸ்தானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    பாலாலய பூஜைகள் அனைத்தும் அதிகாலை 5.40 மணிக்குள் முடிவுற்றது. இதில் ராஜா எம்.எல்.ஏ., கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் சட்டைநாதர் சாமி தேவஸ்தானத்துடன் இணைந்த சொர்ணாகர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து

    சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன், பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

    விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி மகா தீபாராதணை நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு யாகசாலையை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்து புனித நீர் ஊற்றப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில் திருஞானசம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், தம்பிராயன் சுவாமிகள், சிவசுப்பிரமணியன் நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மன்ற உறுப்பினர்கள் முபாரக், ராஜேஸ், ஜெயந்தி பாபு, டாக்டர்.முத்துகுமார், சுபம் வித்யா மந்திர் பள்ளி செயலர் கியான் சந்த், தாளாளர் சுதேஷ் ரோட்டரி நிர்வாகிகள் சுசீந்திரன், சாமி செழியன், சுடர்.கல்யாணசுந்தரம், முன்னாள் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் திரளான பக்தர்கள் உடனிருந்தனர்.

    • நல்லூர்பாளையம் ஊத்துகாட்டுமாரியம்மன்கோவிலில் மண்டல பூஜை நடந்தது.
    • மண்டல பூஜையில்முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டுசாமி தரிசனம்செய்து பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கினார்.

    கடலூர்:

    பண்ருட்டி, நல்லூர்பாளையத்தில் அமைந்துள்ளது ஊத்துகாட்டு மாரிஅம்மன்கோவில்.இங்குஏராளமானபொருள்செலவில்திருப்பணிசெய்யப்பட்டு மகாகும்பாபிஷேம்நடந்தது.இதனை முன்னிட்டு தினமும்மண்டல பூஜை நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற மண்டல பூஜையில்முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டுசாமி தரிசனம்செய்து பக்தர்களுக்கு அருள்பிரசாதம்வ ழங்கினார்.

    நல்லூர் பாளையம் தங்கராசு, ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன்,மண்டலபூஜை உபயதாரர் தொரப்பாடி பேரூராட்சி முன்னாள்துணை தலைவர் கனகராஜ் பஞ்சாயத்துதலைவர்சிவசந்திரன்,ஆகியோர்வரவேற்றனர்பண்ருட்டி நகர செயலாளர் தாடி முருகன்,பண்ருட்டி நகர துணை செயலாளர் மோகன் பண்ருட்டி (வ)ஒன்றிய செயலாளர்சி வாமற்றும்ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×