search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டுவிட்டர்"

    • சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார்
    • வருவாயை பெருக்க எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது

    அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதனை அவர் "எக்ஸ்" என பெயர் மாற்றமும் செய்திருக்கிறார்.

    முகநூல் நிறுவனத்தினரின் "திரெட்ஸ்" எனும் புதிய சமூக வலைதளமும் X-க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    சமீப காலங்களில் எக்ஸின் வருவாய் குறைந்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. கடன் சுமையினாலும், 50% விளம்பர வருவாய் குறைந்திருப்பதனாலும், அதன் வருவாய் மிகவும் பின்னடைந்திருப்பதாக மஸ்க் இம்மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    விலைக்கு வாங்கியதிலிருந்தே தனது நிறுவனத்தை மேம்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மஸ்க், பல பணியாளர்களை நீக்கினார். விளம்பர துறையில் வல்லுனரான லிண்டா எக்கேரினோ என்பவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.

    சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார். மேலும், "இது தற்காலிகமான லோகோதான். இதுவும் விரைவில் மாற்றப்படலாம்" எனவும் அறிவித்தார்.

    இந்நிலையில், X-ன் மாதாந்திர பயனர் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 5.4 கோடி (540 மில்லியன்) என உறுதிப்படுத்தும் விதமாக சில புள்ளி விவரங்களையும், விளக்கப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். வருவாயை பெருக்க மஸ்க் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது.

    மே 2022-ல் டுவிட்டருக்கு சுமார் 2.3 கோடி (229 மில்லியன்) பயனாளிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
    • முன்னதாக டுவிட்டர் நிறுவன லோகோ நீல பறவையில் இருந்து X ஆக மாற்றப்பட்டது.

    உலகின் முன்னணி சமூக வலைதளமாக டுவிட்டர் உள்ளது. எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, தளத்தில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டர் லோகோ மாற்றப்பட்டது. 

    இதன் தொடர்ச்சியாக, டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டுவிட்டர் தளத்தில் அந்நிறுவன அதிகாரப்பூர்வ ஹேன்டில் @X என்று மாற்றப்பட்டுள்ளது. முந்தைய @Twitter ஹேன்டில் தற்போது @X என்ற ஹேன்டிலுக்கு மாற்றி அனுப்பப்படுகிறது.

     

    மற்ற டுவிட்டர் ஹேன்டில்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி டுவிட்டர் என்ற பெயருக்கு மாற்றாக X என்ற வார்த்தை இடம்பெற்று இருக்கிறது. கடந்த செவ்வாய் கிழமை அன்று டுவிட்டர் நிறுவனம் தனது புதிய X லோகோவாவில் சற்று பிரமான்ட கோடுகளை சேர்த்தது. பிறகு அது நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய லோகோ காலப்போக்கில் மாற்றம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இதுதவிர டுவிட்டர்சப்போர்ட், டுவிட்டர்டெவ், டுவிட்டர்ஏபிஐ உள்ளிட்டவை @Xசப்போர்ட், @Xடெவலப்பர்ஸ், @API என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தின் ப்ரோபைல் படங்கள் X லோகோ மாற்றப்பட்டு இருக்கிறது. டுவிட்டரின் சந்தா முறை சேவையான டுவிட்டர்புளூ, @Xபுளூ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    • புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    • மெட்டா நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டது.

    டுவிட்டர் லோகோவை நீல பறவையில் இருந்து X ஆக மாற்றுவதற்கான காரணத்தை எலான் மஸ்க் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது என பரவலான தளமாக மாற்ற எலான் மஸ்க் முடிவு செய்து இருக்கிறார். இதையே அவர் எல்லாவற்றுக்குமான செயலி என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    "நிறுவனம் பெயரை மாற்றிக் கொண்டு, அதே பணிகளை மீண்டும் தொடரும் செயல் இது கிடையாது. 140 வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் செய்த காலத்தில் டுவிட்டர் என்ற பெயர் அர்த்தமுள்ளதாக இருந்து வந்தது," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    புதிய X சேவையில் பேமன்ட் மற்றும் பேங்கிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி லின்டா யாக்கரினோ தெரிவித்து இருக்கிறார். எலான் மஸ்க் டுவிட்டரில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தையும் கடந்து, விளம்பரதாரர்கள் மற்றும் பயனர்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை லின்டா யாக்கரினோ ஏற்றிருக்கிறார்.

    டுவிட்டரின் விளம்பர வருவாய் பாதியாக குறைந்து இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். டுவிட்டரின் நேரடி போட்டியாளரான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்க் நிறுவனம் சமீபத்தில் தான் திரெட்ஸ் பெயரில் புதிய செயலியை வெளியிட்டு இருக்கிறது. வெளியானதில் இருந்து அதிக பிரபலமாக இருந்துவந்த திரெட்ஸ் ஆப் டவுன்லோட்களில் பல சாதனைகளை படைத்தது.

    இந்த நிலையில், டுவிட்டர் தளத்தை ரிபிரான்டு செய்யும் நடவடிக்கை காரணமாக, டுவிட்டர் தளம் மீதான கவனம் தற்போது  அதிகரித்து இருக்கிறது. எனினும், இந்த நடவடிக்கை காரணமாக டுவிட்டர் நிறுவனத்தின் பிரான்டு மதிப்பில் பல பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஏராளமான சீனர்கள் பயன்படுத்தி வரும் விசாட் ஆப் பற்றி எலான் மஸ்க் பேசி இருக்கிறார். டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் உருவாக்கி இருக்கும் விசாட் ஆப் மெசேஜிங், ஆன்லைன் நிதி சேவைகள் மற்றும் நுகர்வோர் கடன் என எல்லாவற்றுக்குமான செயலியாக இருந்து வருகிறது. எனினும், எலான் மஸ்க் X செயலியை எப்படி உருவாக்க நினைத்திருக்கிறார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

    • டுவிட்டரில் புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
    • டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.

    உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரிபிரான்டு செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரிபிரான்டு செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

     

    இதைத் தொடர்ந்து X.com என்ற வலைதள முகவரியை க்ளிக் செய்தால், தற்போது டுவிட்டர் தளம் தான் திறக்கிறது. twitter.com வலைதள முகவரியும் x.com என்று மாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதோடு டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவில் எலான் மஸ்க் புதிய டுவிட்டர் லோகோவை வெளியிட்டுள்ளார்.

    எலான் மஸ்க் மட்டுமின்றி டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோவும், X பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். மேலும் X லோகோவை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது..,

    "வாழ்க்கையோ அல்லது வியாபாரமோ, பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான காரியம் ஆகும். ஒருமுறை டுவிட்டர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்ற முறையை அடியோடு மாற்றியது. தற்போது X இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும். கடந்த 8 மாதங்களாக X வடிவம் பெற்று வருகிறது, ஆனால் இது வெறும் துவக்கம் மட்டும் தான்," என்று தெரிவித்தார்.

    இதோடு X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். X-ஐ உலகிற்கு கொண்டுவருவதற்கான பணிகளில் டுவிட்டர் பணியாற்றி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • புது வசதியின் மூலம் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை இந்த பயோ பகுதிக்கு கீழே கொடுக்க முடியும்.
    • கடந்த மே மாதமே இந்த வசதியை டுவிட்டரில் கொண்டு வர ஆலோசிப்பதாக சூசகமாக அறிவித்திருந்தார் எலான் மஸ்க்.

    மந்தமாகும் உலக பொருளாதார சூழலில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் வருமானத்தை தக்க வைத்துக்கொள்ள பல முயற்சிகளை செய்து வருகிறது.

    வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை இணையதள வாயிலாக தேடுபவர்கள் பெரும்பாலும் லிங்க்ட்-இன் (LinkedIn) தளத்தைத்தான் பயன்படுத்துகின்றனர். இதற்கு போட்டியாக டுவிட்டர் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் "உறுதி செய்யப்பட்ட கணக்கு" (Verified Accounts) எனும் அந்தஸ்தை பெற்ற நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளுக்கு ஒரு புது வசதியை கொண்டு வருகிறது.

    நிறுவனங்களின் டுவிட்டர் பக்கத்தில் "பயோ" (Bio) எனும் அவர்களை குறித்த சுயவிவரங்கள் இடம் பெறும். புது வசதியின் மூலம் நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வேலைவாய்ப்பு விவரங்களை இந்த பயோ பகுதிக்கு கீழே கொடுக்க முடியும். இதன் மூலம் வேலை தேடி வரும் விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களின் இணையதளத்தை அடைந்து அந்தந்த நிறுவனங்களில் உள்ள வேலைகளை குறித்து விவரமாக அறியவும், சுலபமாக விண்ணப்பிக்கவும் முடியும்.

    @டுவிட்டர்ஹயரிங் என்ற பெயரில் வேலைவாய்ப்புகள் குறித்த செய்திகளுக்காகவே ஒரு கணக்கை டுவிட்டர் தொடங்கி இருக்கிறது.

    நிமா ஓஜி எனும் செயலி ஆராய்ச்சியாளர் இது குறித்து ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதிலிருந்து இந்த வசதி குறித்து கீழ்காணும் விவரங்கள் தெரிய வருகின்றன.

    டுவிட்டர் ஹயரிங் (Twitter Hiring) எனப்படும் இந்த வசதி மூலம் வெரிஃபைடு கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் 5 எண்ணிக்கை வரை தங்களிடம் உள்ள வேலைவாய்ப்புகளை குறித்த தகவல்களை பதிவு செய்யலாம். தங்களிடம் காலியிடங்கள் உருவாகும் போதெல்லாம் அது குறித்த விவரங்கள் சில நிமிடங்களுக்குள்ளாகவே டுவிட்டரில் வெளிப்படும் வகையில் ஒரு மென்பொருள் கட்டமைப்பை நிறுவனங்கள் உருவாக்க வேண்டும். வேலை வாய்ப்பை தேடுவோர்கள் இதன் மூலம் நிறுவனங்களின் இணையதளங்களுக்கு சென்று மேல்விவரங்களை அறியவும், விருப்பமிருந்தால் விண்ணப்பிக்கவும் முடியும்.

    கடந்த மே மாதமே வேலைவாய்ப்பு தகவல் பரிமாற்ற வசதியை டுவிட்டரில் கொண்டு வர ஆலோசிப்பதாக சூசகமாக அறிவித்திருந்தார் டுவிட்டர் நிறுவன அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க்.

    அவர் முன்பே அறிவித்திருந்தபடி, டுவிட்டர் செயலியை "எல்லாவற்றிற்குமான செயலி"யாக மாற்றும் முயற்சியில் ஒன்றாக இந்த வசதியும் பார்க்கப்படுகிறது.

    வெரிஃபைடு பயனர் அந்தஸ்து பெற்ற நிறுவனங்களுக்கு இலவச சேவையாக இந்த வசதியை டுவிட்டர் வழங்கும் என தெரிகிறது.

    • நாங்கள் நேர்மறையான பணப்புழக்கத்தை அடைய வேண்டும்
    • டுவிட்டரில் லாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் லாபத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் மூலம் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்தள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம். விளம்பர வரவால் 50 சதவீதம் குறைந்துள்ளது. அதிக கடன் சுமையும் உள்ளது. இதனால் டுவிட்டர் இன்னும் பணத்தை இழக்கிறது. நாங்கள் நேர்மறையான பணப்புழக்கத்தை அடைய வேண்டும் என்றார்.

    • தேர்வு செய்யப்பட்ட சிறிய குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளது.
    • விளம்பர வருவாய் பங்கீடு திட்ட விண்ணப்ப முறை, இதர விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படுகிறது.

    டுவிட்டர் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு விளம்பர தொகையில் ஒரு பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பயனர்கள் டுவிட் செய்வதற்கு பணம் பெற துவங்கி உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வருமானம் பெறுவதற்கு பயனர்கள், தொழில்முறை கிரியேட்டர்கள் டுவிட்டரில் உள்ள விளம்பர வருவாய் பங்கீடு (Ads Revenue Sharing) அல்லது கிரியேட்டர் சந்தா முறை (Creator Subscriptions) திட்டங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பயனர்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புதிய திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் பே-அவுட் சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளதாக டுவிட்டர் தெரிவித்து உள்ளது. அதன்படி தற்போதைக்கு இந்திய பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

     

    பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் டுவிட்டர் விளம்பர வருவாய் பங்கீடு மூலம் 25 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 லட்சம் வரை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல பயனர்கள் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலான தொகையை டுவிட்டரிடம் இருந்து வருவாயாக பெற்றுள்ளனர்.

    முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளதாக அந்நிறுவம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து வருவாய் ஈட்ட, பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவில் இணைந்திருக்கவோ அல்லது வெரிஃபைடு நிறுவனங்களாகவோ இருப்பது அவசியம் ஆகும்.

    இத்துடன் கடந்த மூன்று மாதங்களில் குறைந்த பட்சமாக, டுவீட்களுக்கு சுமார் 50 லட்சம் பதிவுகளை (impression) பெற்று இருப்பது அவசியம் ஆகும். இது மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனத்தின் கிரியேட்டர் மானிடைசேஷன் தரக்கட்டுப்பாடுகளை பயனர்கள் அல்லது கிரியேட்டர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதும் அவசியம் ஆகும்.

    விளம்பர வருவாய் பங்கீடு திட்டத்திற்கான விண்ணப்ப முறை மற்றும் விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. டுவிட்டர் தளத்தில் வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டம் பற்றிய தகவலை கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். தற்போது டுவிட்டரில் வருவாய் பங்கீடு பெற்றவர்கள், தங்களது வருவாய் விவரங்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டுவிட்டரில் ஏற்கனவே வேலைப் பார்த்தவர்களை பணியமர்த்தியதாக குற்றச்சாட்டு
    • அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக மெட்டா மீது குற்றம்சாட்டுகிறது டுவிட்டர்

    உலகின் முன்னணி இணையதள சமூக வலைதளமாக விளங்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக 'திரெட்ஸ்' எனும் வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. துவங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது 7 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் அதனுடன் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    'திரெட்ஸ்' செயலியின் வடிவமைப்பு அம்சங்கள் குறித்து ஒரு பயனர் அது டுவிட்டரின் பிரதி என்று பதிவிட்டிருந்தார். அதனை ஆமோதிப்பதுபோல், எலான் மஸ்க் ஒரு சிரிக்கும் முக எமோடிகான் பதிவிட்டிருந்தார்.

    தற்போது 3 கோடிக்கும் அதிகமான பயனர்களை பெற்றுள்ள நிலையில், டுவிட்டரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கை எதிர்நோக்குகிறது.

    "டுவிட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் பிற அறிவுசார் சொத்துக்களை சட்டவிரோதமாக மெட்டா பயன்படுத்தியிருக்கிறது. இது ஒரு குற்றச்செயல். டுவிட்டரின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் ரகசியமான உயர் தகவல்களை அறிந்த மற்றும் அணுகக்கூடிய பல முன்னாள் டுவிட்டர் ஊழியர்களையும் மெட்டா பணியமர்த்தியிருக்கிறது.

    டுவிட்டர் தனது அறிவுசார் சொத்துரிமைகளை கண்டிப்பாக அமல்படுத்த விரும்புகிறது. டுவிட்டர் வலைதளத்தின் வர்த்தக ரகசியங்கள் மற்றும் ரகசியமான உயர் தகவல்களைப் பயன்படுத்துவதை நிறுத்த மெட்டா உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எலான் மஸ்க்கின் வழக்கறிஞர் அலெக்ஸ் ஸ்பிரோ, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க்கிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    எலோன் மஸ்க், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, "போட்டி நல்லது ஆனால் ஏமாற்றுவது நல்லதல்ல" என ஒரு பதிவிட்டுள்ளார்.

    ஆனால், இதற்கு பதிலளிக்கும்விதமாக மெட்டா செய்தித்தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் ஒரு திரெட்ஸ் பதிவில்

    "திரெட்ஸ் வலைதளத்திற்காக பணியாற்றும் பொறியியல் குழுவில் எவரும் முன்னாள் டுவிட்டர் ஊழியர் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

    பல சிக்கல்களுக்கிடையில் டுவிட்டர் நிறுவனம் போராடி வந்தாலும், மிகப்பெரிய சமூகவலைதளங்களில் நம்பர் ஒன் இடத்தை இதுவரை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு, பல போட்டியாளர்கள் உருவானாலும் எவரும் டுவிட்டரை வெல்ல முடியவில்லை.

    இந்த பின்னணியில், மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ், டுவிட்டருக்கு மிகப்பெரிய புதிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திரெட்ஸ் வலைதளத்தில், பயனர்கள் தங்கள் உரை மற்றும் இணைப்புகளை பதிவிடலாம். மேலும் மற்றவர்களிடமிருந்து வரும் செய்திகளுக்கு பதிலும் அளிக்கலாம், மறுபதிவும் செய்யலாம். இந்த வசதிகள் டுவிட்டரில் இருப்பதை போன்றே பயனர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    முகநூலின் ரீல்ஸ் எனப்படும் அம்சம், டிக்டாக் எனப்படும் மற்றொரு இணையதள செயலியின் வைரல் வீடியோ பயன்பாட்டை அப்படியே நகலெடுத்து உருவாக்கப்பட்டது.

    மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் ஆகிய இரண்டும் பிற உயர்தர அறிமுக இணைய போட்டியாளர்களின் தயாரிப்புகளை (ரீல்ஸ்) அப்படியே காப்பியடித்து தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டதாக ஏற்கனவே விமர்சனம் உள்ளது.

    • பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
    • மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் அடிப்படையிலானது என ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.

    மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர்.

    தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம். மக்கள் தங்களின் தகவல் மற்றும் லிங்க் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவிடலாம். பிறரிடமிருந்து வரும் தகவல்களுக்கு பதிலளிக்கலாம் அல்லது மறுபதிவு செய்யலாம்.

    திரெட்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட 7 மணி நேரத்தில் அதில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்தது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜூக்கர்பர்க் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

    இந்நிலையில், திரெட்ஸ் சேவை தொடர்பாக டுவிட்டர் தளத்திலும் பயனர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். பயனர்களுடன் இணைந்து டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டிருக்கிறார். ஒரு டுவிட்டர் பயனர் திரெட்ஸ் செயலியை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தார். மெட்டாவின் புதிய செயலி முற்றிலும் இந்த கீபோர்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்த அந்த பயனர், கீபோர்டு போன்ற ஒரு படத்தையும் பதிவிட்டிருந்தார். அதில் கன்ட்ரோல், காப்பி, பேஸ்ட் பட்டன்கள் மட்டுமே இருந்தன.

    இந்த பதிவை பார்த்த மஸ்க், சிரிக்கும் முகத்தின் எமோடிகானை பதிவிட்டு பதில் அளித்துள்ளார். இவ்வாறு மகிழ்ச்சியுடன் மஸ்க் தனது முதல் பதிலை வெளியிட்டதன்மூலம், திரெட்ஸ் செயலியானது, டுவிட்டரின் பிரதி என்று கூறுவதுபோல் தெரிகிறது. 

    • அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும்.

    மெட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சமூக வலைதள சேவையில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் என்று மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சேவை துவங்கிய ஏழு மணி நேரங்களில் இத்தனை பேர் இணைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய டுவிட்டர் தளத்திற்கு நட்பு ரீதியிலான போட்டியாளர் திரெட்ஸ் என்று மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

     

    திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும். இத்துடன் பல்வேறு அம்சங்கள் டுவிட்டர் தளத்தில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நபர்களை பின் தொடர்வதற்காக இன்ஸ்டாகிராம் அல்காரிதம் பயன்படுத்தி குறிப்பிட்ட பதிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

    இத்துடன் பாலோவர்-ஒன்லி ஃபீட் அம்சத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது பயனர்கள் பின்தொடர்வோரின் பதிவுகளை மட்டுமே காண்பிக்கும். திரெட் சேவையில் பயனர்களை ஃபாலோ மற்றும் அன்-ஃபாலோ செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் போன்றே இந்த தளமும், ப்ரோபைலை பிரைவேட் ஆக வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. 

    • ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.
    • திரெட்ஸ் சேவை இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி ஆகும்.

    மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக புதிய சமூக வலைதளம் 'திரெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகம் செய்கிறார். இவரின் இந்த போக்கு, எலான் மஸ்க்-க்கு நேரடி சவால்விடும் வகையில் இருப்பதாக தெரிகிறது. கடந்த காலங்களில் எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜூக்கர்பர்க் இடையே காரசாரமான கருத்து மோதல்கள் இருந்ததே இதற்கு காரணமாகும்.

    டுவிட்டர் போன்ற சமூக வலைதள சேவைக்கு இன்றும் சந்தை இருப்பதாக மார்க் ஜூக்கர்பர்க்-இன் மெட்டா நிறுவனம் நம்புகிறது. திரெட்ஸ் சேவை கடந்த வாரம் அதன் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தில் மூத்த பிராடக்ட் பிரிவு அலுவலராக க்ரிஸ் கோக்ஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

     

    திரெட்ஸ் தொடக்கம்:

    கடந்த ஜனவரியில் இருந்து புதிய தளம் உருவாக்குவது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன. புதிய சேவையை பயன்படுத்துமாறு உலக பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கோக்ஸ் தெரிவித்துள்ளார். பிரபலங்கள் மட்டுமின்றி கிரியேட்டர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    தோற்றத்திலும், பயன்பாடு விஷயத்திலும் டுவிட்டர் போன்றே உருவாகி இருக்கும் திரெட்ஸ் சேவையை மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராம்-இன் டெக்ஸ்ட் சார்ந்த உரையாடல் செயலி என்று தெரிவித்து இருக்கிறது. இந்த தளத்தை பயனர்கள் இன்ஸ்டாகிராம் லாக்-இன் விவரங்களை கொண்டே பதிவு செய்து கொள்ளலாம்.

     

    பாடுபடும் டுவிட்டர்:

    டுவிட்டர் தளத்தினை உலகம் முழுக்க சுமார் 25 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். எலான் மஸ்க் டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து, இந்த தளம் சரிவை சந்தித்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளார். டுவிட்டரை விலைக்கு வாங்கியதும், மூத்த தலைமை அதிகாரியில் இருந்து பலரை அதிரடியாக பணிநீக்கம் செய்தார்.

    இதைத் தொடர்ந்து எலான் மஸ்க் மேற்கொண்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான விளம்பரதாரர்கள் டுவிட்டரை விட்டு வெளியேறினர். இதன் காரணமாக டுவிட்டரின் வருவாய் படிப்படியாக குறைய தொடங்கியது. பிறகு வெரிஃபைடு அந்தஸ்தை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை அறிவிக்கப்பட்டு, தற்போது இது அமலில் இருக்கிறது.

     

    மார்க் விருப்பம்:

    இதுதவிர ஏராளமான நடவடிக்கைகள் காரணமாக டுவிட்டர் முழுமையாக மாறி போனது. சமீபத்தில் பயனர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்பதை கட்டுப்படுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த எண்ணிக்கை வெரிஃபைடு பெற்றவர்கள், பெறாதவர்கள், புதிய பயனர்கள் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    சமூக வலைதள உலகில் டுவிட்டர் ஏற்படுத்திய தாக்கம், மார்க் ஜூக்கர்பர்க்-ஐ பெரிதும் கவர்ந்தது. 2008-ம் ஆண்டு டுவிட்டரை விலைக்கு வாங்க மார்க் ஜூக்கர்பர்க் விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான், மார்க் தற்போது திரெட்ஸ் தளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சேவையின் முதல் சவால், பயனர்கள் இதில் தங்களின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த விரும்புவார்களா என்பது தான்.

     

    போட்டி நிறுவன சேவைகள்:

    புதிய தளத்தில் அதிக பயனர்களை பெற, திரெட்ஸ் தளம் அவர்களுக்கு ஆரம்பத்தில் பல்வேறு வசதிகளை வழங்க வேண்டும். மற்றொரு பெரிய விஷயம் சமீப காலங்களில் டுவிட்டருக்கு போட்டியாக துவங்கப்பட்ட புளூஸ்கை, கடந்த திங்கள் கிழமை அன்று மட்டும் பயனர்கள் எண்ணிக்கையில் 20 சதவீதம் வளர்ச்சியை பெற்றது.

    எனினும், அதிக பயனர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் புளூஸ்கை இன்வைட் முறையிலேயே இயங்கி வருகிறது. அதன்படி 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். இத்தனை சவால்களை எதிர்கொண்டே மெட்டா நிறுவனத்தின் புதிய திரெட்ஸ் சமூக வலைதளம் பயன்பாட்டுக்கு வருகிறது.

    • வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளை பார்க்க முடியும்.
    • கார்ப்பரேட் விளம்பரதாரர்களின் பக்கங்கள் உட்பட எந்த டுவீட்களையும் பார்க்க முடியவில்லை.

    டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் ஒரு நாளில் எத்தனை ட்விட்களை பார்க்க முடியும் என்பதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. ஏஐ ஸ்டார்ட்அப்-கள் மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் தற்காலிக கட்டுப்பாடு மூலம் பயனர்கள் ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டுவிட்டர் பதிவுகளை பார்க்க முடியும். டுவிட்டரின் இந்த முடிவுக்கு பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதுபற்றிய அறிவிப்பு கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். அதன்படி வெரிஃபைடு பெற்று இருக்கும் டுவிட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6 ஆயிரம் பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும் என்று புதிய கட்டுப்பாடுகள் விதித்தார்.

    பின்னர், எலான் மஸ்க் வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 8 ஆயிரம் பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 400 பதிவுகளையும் பார்க்க முடியும் என்று தெரிவித்தார். இந்த எண்ணிக்கையையும் எலான் மஸ்க் மீண்டும் மாற்றினார். தற்போது வெரிஃபைடு அக்கவுன்ட்கள் தினமும் 10 ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாதவர்கள் தினமும் ஆயிரம் பதிவுகள், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் தினமும் 500 பதிவுகளை பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்காரினோ ஜூலை 1ம் தேதி அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டுக்கு ஆதரவுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " டுவிட்டர் போன்ற ஒரு பணியைக் கொண்டிருக்கும் போது தளத்தை வலுப்படுத்த பெரிய நகர்வுகளை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையானது தரவு ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டம் கையாளுதலின் "தீவிர நிலைகளை" ஊக்கப்படுத்துகிறது.

    எங்கள் பயனர் தளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, எங்கள் தளத்திலிருந்து ஸ்பேம் மற்றும் போட்களை அகற்ற தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

    இருப்பினும், மஸ்க் அறிவித்த சில நாட்களில், டுவிட்டர் பயனர்கள் வரம்பை எட்டிய பிறகு, கார்ப்பரேட் விளம்பரதாரர்களின் பக்கங்கள் உட்பட எந்த டுவீட்களையும் பார்க்க முடியவில்லை என்பதைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டனர். விளம்பரதாரர்களை ஈர்க்கும் யாக்கரினோவின் முயற்சிகளை இது குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று சந்தைப்படுத்தல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

    ×