search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சொன்னதை செய்த எலான் மஸ்க் - பயனர்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கொடுக்கும் டுவிட்டர்!
    X

    சொன்னதை செய்த எலான் மஸ்க் - பயனர்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கொடுக்கும் டுவிட்டர்!

    • தேர்வு செய்யப்பட்ட சிறிய குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளது.
    • விளம்பர வருவாய் பங்கீடு திட்ட விண்ணப்ப முறை, இதர விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படுகிறது.

    டுவிட்டர் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு விளம்பர தொகையில் ஒரு பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பயனர்கள் டுவிட் செய்வதற்கு பணம் பெற துவங்கி உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வருமானம் பெறுவதற்கு பயனர்கள், தொழில்முறை கிரியேட்டர்கள் டுவிட்டரில் உள்ள விளம்பர வருவாய் பங்கீடு (Ads Revenue Sharing) அல்லது கிரியேட்டர் சந்தா முறை (Creator Subscriptions) திட்டங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பயனர்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புதிய திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் பே-அவுட் சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளதாக டுவிட்டர் தெரிவித்து உள்ளது. அதன்படி தற்போதைக்கு இந்திய பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

    பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் டுவிட்டர் விளம்பர வருவாய் பங்கீடு மூலம் 25 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 லட்சம் வரை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல பயனர்கள் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலான தொகையை டுவிட்டரிடம் இருந்து வருவாயாக பெற்றுள்ளனர்.

    முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளதாக அந்நிறுவம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து வருவாய் ஈட்ட, பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவில் இணைந்திருக்கவோ அல்லது வெரிஃபைடு நிறுவனங்களாகவோ இருப்பது அவசியம் ஆகும்.

    இத்துடன் கடந்த மூன்று மாதங்களில் குறைந்த பட்சமாக, டுவீட்களுக்கு சுமார் 50 லட்சம் பதிவுகளை (impression) பெற்று இருப்பது அவசியம் ஆகும். இது மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனத்தின் கிரியேட்டர் மானிடைசேஷன் தரக்கட்டுப்பாடுகளை பயனர்கள் அல்லது கிரியேட்டர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதும் அவசியம் ஆகும்.

    விளம்பர வருவாய் பங்கீடு திட்டத்திற்கான விண்ணப்ப முறை மற்றும் விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. டுவிட்டர் தளத்தில் வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டம் பற்றிய தகவலை கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். தற்போது டுவிட்டரில் வருவாய் பங்கீடு பெற்றவர்கள், தங்களது வருவாய் விவரங்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×