search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிரோன்கள் தடை"

    • பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளார்.
    • திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13ந்தேதி) சனிக்கிழமை திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம், வேலூர் கிராமத்தில் நடக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள திருப்பூர் வருகை தர உள்ளார்.

    எனவே முதலமைச்சரின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை 13-ந்தேதி எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
    • சென்னை விமான நிலையம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை மாலை 5 மணியளவில் இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    சென்னை விமான நிலையம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் வருகையையொட்டி சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், குற்றவியல் முறை சட்ட பிரிவு 144-ன் கீழ் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் வருகிற 29-ந்தேதி வரை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • பல்வேறு நாட்டு ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், கோவளம் சாலையில் உள்ள "ரேடிசன் புளூபே" ரிசார்ட்டில் நாளை ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு அங்கமான, டபிள்யூ-20 மாநாடு தொடங்குகிறது. இதில் பல்வேறு நாட்டு பெண் மருத்துவ பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பெண்களின் மகப்பேறு, மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கருத்துக்கள், அறிவியல் வளர்ச்சி, மருத்துவ பாதுகாப்பு குறித்து விவாதிக்கபட உள்ளது. மேலும், பல்வேறு நாட்டு ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    இந்த மாநாட்டில் பங்கேற்கும் பிரதிகள் சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வரை நடக்கும் இந்த மாநாட்டின் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம், சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வெளி மாவட்ட போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் வந்துள்ளனர். அவர்கள் முக்கிய சாலைகள் மற்றும் புராதன சின்னங்கள் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரண்டு நாள் மாநாட்டிற்கு வரும் பிரதிநிதிகள் 17-ந் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில், அர்சுணன்தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் ஆகிய புராதன சின்னங்களை சுற்றி பார்க்கிறார்கள்.

    இதைத்தொடர்ந்து 18, 19-ந் தேதிகளில், தொல்லியல்துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மாநாட்டு குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

    இதையடுத்து இன்று முதல் மாமல்லபுரத்தில் டிரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் தடை விதித்து உள்ளனர். இன்று இரவுக்குள் அனைத்து பிரதிநிதிகளும் ஹோட்டல்களில் வந்து தங்க இருப்பதால் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சாய் பிரணீத் உத்தரவின் படி ஓட்டல்களி துப்பாக்கிஏந்திய போலீஸ் பாதுகாப்பும், வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    • ஜி-20 நாடுகள் அமைப்பிற்கு இந்தியா தற்போது தலைமை ஏற்றுள்ளது.
    • இன்று முதல், 17-ந் தேதி வரை 4 நாட்கள் மேற்கண்ட தடை அமலில் இருக்கும்.

    சென்னை:

    ஜி-20 நாடுகள் அமைப்பிற்கு இந்தியா தற்போது தலைமை ஏற்றுள்ளது. அந்த அமைப்பின் பெண்கள் பிரதிநிதிகள் மாநாடு, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையொட்டி டிரோன்கள் மற்றும் இதர ஆள் இல்லா வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    இன்று (புதன்கிழமை) முதல், 17-ந் தேதி வரை 4 நாட்கள் மேற்கண்ட தடை அமலில் இருக்கும். ஜி-20 நாடுகளின் பெண்கள் பிரதிநிதி மாநாட்டில் கலந்து கொள்பவர்கள் சென்னையில் தங்கும் இடங்கள், அவர்கள் செல்லும் வழித்தட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×