search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொமேட்டோ"

    • அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது
    • சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5 ஆக உயர்த்துகிறது

    ஆன்லைன் உணவு நிறுவனமான சோமேட்டோ, கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

    இதற்கான சோதனை முயற்சியில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த சோதனை முயற்சி நடைபெறவுள்ளது.

    மேலும், சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளது, இதன்படி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த மாற்றம் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் தற்போது அமலாகியுள்ளது.

    பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமாகும். 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்ட பிளாட்பாரம் கட்டணம் தற்போது 5 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    • உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்
    • முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன

    சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

    வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த சைவ டெலிவரி அணிக்கு பச்சை நிறத்தில் பேக், சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன. செயலியில் Pure Veg Mode மூலம் இதனைப் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளைக் கூட, இந்த சைவ அணி டெலிவரி செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை தனது எக்ஸ் பக்கத்தில் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

    அந்த பதிவில், உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, மற்றும் அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    சொமேட்டோவின் இந்த புதிய நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோ நிறுவனத்தை பலரும் புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன. குறிப்பாக எங்கள் உணவு தீட்டு பட்டு விட்டது என்று அவர்கள் அதற்கு காரணம் கூறினார்கள்.

    இத்தகைய பிரச்சினைகளை களைவதற்கு முயற்சி எடுக்காமல், ஏற்கனவே இருக்கும் பாகுபாடுகளை அதிகரிக்கும் வேலைகளை சொமேட்டோ செய்து வருகிறது என்று நெட்டிசன்கள் இந்த புதிய நடவடிக்கையை விமர்சித்தனர்.

    இந்நிலையில், சைவ உணவு பிரிவுக்கான பச்சை நிற உடை நடைமுறை படுத்தப்படாது, அதற்கு பதிலாக அனைவரும் இனி சிவப்பு நிற சீருடையே அணிவார்கள் என நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

    ஆனால், சைவ உணவுகள் தனியாகவே டெலிவரி செய்யப்படும் எனவும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

    மேலும், சிவப்பு, பச்சை ஆகிய இருவேறு நிற உடையால் சில குடியிருப்புவாசிகள் அவர்களது உரிமையாளர்களின் அதிருப்திக்கு உள்ளாகலாம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதை நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களால் யாருக்கும் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தீபிந்தர் கோயல் கூறியுள்ளார்.

    • சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்
    • இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன

    சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

    வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த சைவ டெலிவரி அணிக்கு பச்சை நிறத்தில் பேக், சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன. செயலியில் Pure Veg Mode மூலம் இதனைப் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளைக் கூட, இந்த சைவ அணி டெலிவரி செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை தனது எக்ஸ் பக்கத்தில் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

    அந்த பதிவில், உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, மற்றும் அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    சொமேட்டோவின் இந்த புதிய நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோ நிறுவனத்தை பலரும் புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன. குறிப்பாக எங்கள் உணவு தீட்டு பட்டு விட்டது என்று அவர்கள் அதற்கு காரணம் கூறினார்கள்.

    இத்தகைய பிரச்சினைகளை களைவதற்கு முயற்சி எடுக்காமல், ஏற்கனவே இருக்கும் பாகுபாடுகளை அதிகரிக்கும் வேலைகளை சொமேட்டோ செய்து வருகிறது என்று நெட்டிசன்கள் இந்த புதிய நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.

    சொமேட்டோவின் இந்த புதிய முன்னெடுப்பை இந்த பார்வையில் தான் நாம் பார்க்க வேண்டுமா?

    சொமேட்டோவின் இந்த புதிய சைவ அணி அறிவிப்பில் என்ன பிரச்சனை உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு, சைவ உணவு மட்டும் தயாரிக்கப்படும் உணவகங்களில் இருந்தும் சைவ உணவை மட்டும் டெலிவரி செய்யும் ஊழியர்களிடம் இருந்தும் வாங்க விரும்புவதால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே எனறு ஒரு தரப்பினர் வாதம் முன்வைக்கின்றனர்.

    ஆனால், ஏற்கனவே சொமேட்டோ ஆப்-இல் எந்த உணவகங்களில் இருந்து நமக்கு எந்த உணவு வேண்டும் என்பதை ஆர்டர் செய்யும் வசதி உள்ளது. ஆகவே இந்த புதிய நடவடிக்கையால் சைவ உணவு டெலிவரி செய்யும் ஊழியர் சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்வார். அசைவ உணவுகளை டெலிவரி செய்யமாட்டார் என்பது மட்டுமே இதில் புதிய அம்சம்.

    எதற்காக இந்த புதிய அம்சம் தேவைப்படுகிறது?. ஒருவேளை சொமேட்டோ டெலிவரி ஊழியரின் உணவு பையில், ஒரு தயிர் சாதமும், பிரியாணியும் டெலிவரிக்காக உள்ளது. இதில் பிரியாணி சாப்பிடுபவர் அதன் பக்கத்தில் எந்த உணவு உள்ளது, அது தயிர் சாதமா இல்லையா என்று கவலைப்படுவதில்லை.

    ஆனால், அதே சமயம் சைவ உணவு மட்டும் உண்பவர் தனது உணவுக்கு பக்கத்தில் ஒரு அசைவ உணவு இருந்து விடுமோ, அதனால் தனது சைவ உணவு தீட்டு பட்டு விடுமோ என்ற அச்சம் தான் இந்த புதிய அறிவிப்பிற்கு வழிவகுத்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

    ஏன் அந்த அச்சம் ஏற்படுகிறது? சாம்பார் சாதம் பக்கத்தில் மீன் குழம்பு இருந்தால் என்ன? ரயிலில் தியேட்டரில் நமக்கு பக்கத்தில் இருப்பவர் யார் என்று பார்த்து பார்த்து தான் நாம் உட்காருகிறோமா? சைவ உணவு சாப்பிடும் ஒருவர் பக்கத்தில் அசைவ உணவு சாப்பிடும் ஒருவர்  உட்கார கூடாதா? அப்படி யாராவது சொன்னால் அதற்கு தீண்டாமை என்று பெயர்.

    அப்படிப்பட்ட தீண்டாமையை தான் சொமேட்டோ ஊக்குவிக்கிறதா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஆகவே உணவில் தீண்டாமையை ஊக்குவிக்கும் வேலையைதான், சொமேட்டோவின் இந்த புதிய Pure Veg Mode உருவாக்க வாய்ப்புள்ளது.

    இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், பழங்குடிகள், இஸ்லாமியர்கள் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் 19% மக்கள் மட்டும்தான் சைவ உணவுகளை உண்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர்
    • சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, தனது பெண் ஊழியர்களுக்கு டீ சர்ட்டுக்கு பதிலாக, சுடிதாரை சீருடையாக மாற்றி அமைத்துள்ளது.

    சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கு இந்த புதிய சீருடையை சொமேட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் பல பெண்களுக்கு டீ சர்ட் அணிவது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக எங்களிடம் தெரிவித்தனர். ஆதலால் தான் நாங்கள் பெண்களுக்கான சீருடையை மாற்றுள்ளோம் என்று சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சொமேட்டோவின் சுடிதார் சீருடையை அணிந்த பெண்களின் வீடியோவை அந்நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    • முந்தைய மூன்று நாட்களின் விற்பனையைப் பொறுத்து பரிமாற்றங்கள் தினமும் தீர்க்கப்படும்.
    • தினசரியாக மாற்றுவது என்பதை சொமேட்டோ பிசினஸ் பார்ட்னர் ஆப் மூலம் நிறைவேற்றலாம்.

    உணவு விநியோக செயலியான சொமேட்டோ, தனது வலைத்தளத்தில், சிறிய உணவகங்களின் வணிகங்களுக்கான தினசரி கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

    இந்த திட்டம் உணவகங்கள் தங்கள் வாராந்திர கட்டண திட்டத்தால் வரும் நிதி சிக்கல்களை சமாளிக்க மற்றும் வருவாயை அடிக்கடி பெற உதவி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் சிறிய அளவிலான உணவகங்களுக்கானது மற்றும் ஒரு உணவகத்திற்கு மாதத்திற்கு 100 ஆர்டர்கள் இருந்தால், அது தினசரி கட்டண திட்டத்துக்கு மாற்றப்படும். வாரந்தோறும் அல்லது தினசரியாக மாற்றுவது என்பதை சொமேட்டோ பிசினஸ் பார்ட்னர் ஆப் மூலம் நிறைவேற்றலாம். மாறுவதற்கு கூடுதல் கட்டணங்கள் எதுவும் இல்லை.

    முந்தைய மூன்று நாட்களின் விற்பனையைப் பொறுத்து பரிமாற்றங்கள் தினமும் தீர்க்கப்படும். உணவக உரிமையாளர்கள் தங்கள் செயல்பாடுகளை வளர்த்துக் கொள்ளும்போதும், பிரபலமான நிறுவனங்களைக் கையாளும் போதும் உணவு விநியோகத்தின் போட்டித் துறையில் பல தடைகளை எதிர்கொள்கின்றனர்.

    "செயல்திறன் மூலதனம் மற்றும் நிலையான பணப்புழக்கம் ஆகியவை அவர்களின் வெற்றிக்கான மிக முக்கியமான இரண்டு கூறுகள்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இச்சேவையில் முன்னணியில் உள்ளன
    • இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை போட்டியின் போது மிக அதிகளவில் ஆர்டர்கள் செய்துள்ளனர்

    கடந்த சில வருடங்களாக உணவிற்காக வசிப்பிடத்தை விட்டு வெளியே சென்று உணவகங்களை தேடுவதற்கு பதிலாக இணையதளத்தில் உள்ள செயலிகளின் மூலம் விருப்பமான உணவகங்களிலிருந்து விலைகளை ஒப்பிட்டு பார்த்து தங்களுக்கு பிடித்தமான உணவுகளை இருக்கும் இடத்திற்கே தருவிப்பது இந்தியர்களிடையே பிரபலமாகி வருகிறது.

    சொமேட்டோ (Zomato), ஸ்விக்கி (Swiggy) உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையில் முன்னணியில் உள்ளன.

    ஆண்டுதோறும், ஸ்விக்கி நிறுவனம் தங்கள் செயலியின் மூலம் பெரும்பான்மையானோர் தருவிக்கும் உணவு வகைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

    இதில் தொடர்ச்சியாக 8-வது ஆண்டாக முதலிடத்தை "பிரியாணி" பிடித்துள்ளது.


    இந்த தரவுகளின்படி ஒவ்வொரு 2.5 வினாடிகளில் இந்தியர்களால் ஒரு பிரியாணி ஆர்டர் செய்யப்படுகிறது. அதிலும் சைவ பிரியாணியோடு ஒப்பிட்டால் சிக்கன் பிரியாணியின் விகிதாசாரம் 1 : 5.5 எனும் அளவில் உள்ளது.

    ஸ்விக்கி செயலியின் தளத்தில் 40,30,827 முறை "பிரியாணி" அதிகம் தேடப்பட்ட சொல்லாக உள்ளது. ஐதராபாத் நகரில்தான் பிரியாணி ஆர்டர்கள் அதிகளவில் செய்யப்பட்டுள்ளது. அந்நகரத்தில் ஒரே நபர் இந்த ஒரே வருடத்தில் 1633 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளார்.

    ஐசிசி 2023 ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது சண்டிகர் நகரில் ஒரு குடும்பம் ஒரே முறையில் 70 பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளது. விறுவிறுப்பான அப்போட்டி நடைபெற்ற தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 250 ஆர்டர்கள் எனும் விகிதத்தில் மக்கள் ஸ்விக்கியில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர்.

    ஸ்விக்கியின் தரவுகளின்படி கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரூ மக்கள்தான் அதிகளவில் கேக் ஆர்டர் செய்துள்ளனர். 8.5 மில்லியன் ஆர்டர்கள் செய்ததால் இந்நகர் "கேக் தலைநகரம்" (cake capital) என அழைக்கப்படுகிறது.

    பிப்ரவரி 14, வேலண்டைன் தினத்தன்று ஒரு நிமிடத்திற்கு 271 கேக்குகள் எனும் விகிதத்தில் ஆர்டர்கள் குவிந்தன. நாக்பூர் நகரில் ஒரு உணவு விரும்பி, ஒரே நாளில் 92 கேக்குகளை ஆர்டர் செய்துள்ளார்.


    பிரியாணியையும், கேக்குகளையும் தவிர, மும்பை நகரை சேர்ந்த ஒருவர் 42.3 லட்சம் பெருமான உணவு ஆர்டர்களை செய்திருந்தது இந்த தரவுகளில் உள்ள வியக்க வைக்கும் மற்றொரு தகவல்.

    அதே போல் ஒடிஸா மாநில தலைநகர் புபனேஸ்வரில் ஒரு வீட்டில் ஒரே நாளில் 207 பீஸாக்களை ஆர்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×