search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து வரி"

    • இதுவரையில் 7 லட்சம் உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்தி உள்ளனர்.
    • சொத்து வரி இலக்கு ரூ.1,500 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரையில் ரூ.1,300 கோடி வசூலாகி உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வீடுகள், வணிக நிறுவனங்களிடம் இருந்து ஆண்டு தோறும் 2 முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு சுமார் ரூ.500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

    சென்னையில் 13 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள். நடப்பு நிதியாண்டு முடிவதற்கு ஒரு மாதம் உள்ள நிலையில் சொத்து வரி வசூலை வருவாய் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதுவரையில் 7 லட்சம் உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்தி உள்ளனர். சொத்து வரி இலக்கு ரூ.1,500 கோடி நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரையில் ரூ.1,300 கோடி வசூலாகி உள்ளது. இன்னும் ரூ.200 கோடியை வசூலிக்க எஸ்.எம்.எஸ்., வாய்ஸ் தகவல் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, நாளை 1-ந்தேதி முதல் சொத்து வரி வசூல் மேலும் தீவிரப்படுத்தப்படும். சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும்.

    இந்த ஒரு மாதத்திற்கு இலக்கை அடைய தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றனர் அதிகாரிகள்.

    • சொத்துவரி செலுத்த தவறுவோரின் சொத்துகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • நிலுவைத்தொகையை சிரமமின்றி, எளிதாக செலுத்த கியூ.ஆர்.கோடு வசதி அச்சிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரியை அதன் உரிமையாளர்கள் செலுத்திட வேண்டும்.

    தற்போது மாநகராட்சிக்கு சொத்துவரி ரூ.50 ஆயிரத்துக்குள் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களின் எண்ணிக்கை சுமார் 5.93 லட்சமாக உள்ளது. அந்தவகையில் நிலுவைத்தொகை ரூ.346.63 கோடி உள்ளது. நிலுவைத்தொகையை செலுத்தக்கோரி தபால் துறை மூலமாக சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அந்த நோட்டீசில் நிலுவைத்தொகையை சிரமமின்றி, எளிதாக செலுத்த கியூ.ஆர்.கோடு வசதி அச்சிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவை சொத்துவரியை செலுத்தலாம்.

    மேலும், சொத்துவரியை வரி வசூலிப்பவர், இணையதளம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், கைபேசி செயலி மற்றும் ஆன்-லைன் பணபரிவர்த்தனைகள் மூலமாகவும் செலுத்தலாம். சொத்துவரி செலுத்த தவறுவோரின் சொத்துகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    எனவே, நடப்பு நிதி ஆண்டு முடிவடைய 2 மாதங்களே உள்ள நிலையில், சொத்துவரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்கள் நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.

    மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிவகாசி பகுதியில் வருகிற 28-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.

    சிவகாசி

    நகராட்சியாக இருந்த சிவகாசி 2021-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து சொத்து வரி உயா்வு, நகராட்சி கணக்குகளை இணைத்தல், மறு சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளுக்கான வரி வசூலில் காலதாமதம் ஏற்பட்டது.

    சிவகாசி, திருத்தங்கல் ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் வரி இனங்கள் மறு சீரமைப்புக்கு பின் கடந்த செப்டம்பா் மாதம் வரி வசூல் தொடங்கியது. உயா்த்தப்பட்ட சொத்துவரி மூலம் மாநகராட்சியின் வருமானம் ரூ. 21 கோடியாக உயா்ந்தது.

    2021-22-ம் நிதி ஆண்டுக்கான வரி செலுத்தும் காலம் முடிவடைந்த நிலை யில் அந்த ஆண்டு வரி வசூல் நிலுவை ரூ.7.70 கோடி உள்ளது. மேலும் 2022-23 நிதியாண்டிற்கான வரி வசூல் தற்போது வரை சுமாா் 30 சதவீதம் மட்டுமே வசூலாகி உள்ளது. இதனால் மாநகராட்சியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சிவகாசி மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை வருகிற 28-ந் தேதிக்குள் செலுத்தா விட்டால், சம்பந்தப்பட்ட வீட்டின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மக்கள் வரி செலுத்தாமல் உள்ளதால் மாநகராட்சிப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் தாமதமாகி வருவதாகவும், நடப்பு நிதியாண்டில் வருகிற மாா்ச் இறுதிக்குள் 100 சதவீத% வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்தார்.

    • சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்கள் எளிதில் சொத்து வரியினை செலுத்தும் வகையில் பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது.
    • கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தவணை முறை திட்டத்துக்கு தகுதியானவர்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் வரும் வருவாய் மிகவும் முக்கியமானது. இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயில் சென்னை நகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள், சாலைகளை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு போன்ற அத்தியாவசியமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    முந்தைய சென்னை மாநகராட்சி பகுதிகளில் 24 ஆண்டுகளுக்கு பிறகும், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகும் சொத்து வரி பொது சீராய்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 2022-23ம் நிதியாண்டில் சென்னையில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் சொத்து வரி செலுத்தி உள்ளனர். அதே நேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர்.

    இந்த நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சொத்து வரியை அதன் உரிமையாளர்கள் ஒவ்வொரு அரையாண்டுகளின் தொடக்கத்தில் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சொத்துவரி வசூல் ரூ.1500 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    சொத்து வரி உயர்த்தப்பட்டதால் வட்டி இல்லாமல் 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

    இதுவரை 7 லட்சம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1213 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 5 லட்சம் பேரிடம் இருந்து ரூ.287 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது. இந்த நிதியாண்டு வருகிற மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் சொத்து வரி செலுத்தாதவர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை உடனடியாக செலுத்த வேண்டும்.

    சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு கட்டிடம் சீல் வைக்கப்படும். அதேபோல் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டுதல், அருகில் பேனர் வைத்தல், பொருட்கள் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    மேலும் அதிக தொகை பாக்கி வைத்திருப்பவர்கள் பட்டியல் மாநகராட்சி இணையதளத்திலும் வெளியிடப்படும். ஏற்கனவே சொத்து வரி செலுத்தாத 499 நிறுவனங்கள் மற்றும் தனிநபர் குறித்த பட்டியல் மாநகராட்சி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்கள் எளிதில் சொத்து வரியினை செலுத்தும் வகையில் பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் தபால் துறை ஊழியர்கள், வரி வசூலிப்பாளர்களிடம் காசோலை, வரைவோலை, கடன் மற்றும் பற்று அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.

    மேலும் இ-சேவை மையங்கள், சென்னை மாநகராட்சி இணையதளம், பே.டி.எம்., நம்ம சென்னை ஆகிய செல்போன் செயலிகள் மூலம் பரிமாற்ற கட்டணம் இல்லாமல் செலுத்தலாம். 'பாரத் பில் பேமண்ட் சிஸ்டம்' மூலமாகவும் சொத்து வரியை எளிதாக செலுத்த முடியும்.

    மேலும் தவணை முறை அடிப்படையிலும் சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. தவணை முறை திட்டத்தை எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.

    இதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 சதவீதம் முதல் 8.6 சதவீதம் வரைக்கும் இருக்கும். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தவணை முறை திட்டத்துக்கு தகுதியானவர்கள் ஆவர்.

    குறைந்த வட்டி விகிதத்தில் தவணை முறை திட்டத்தை செயல்படுத்த வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ரூ.6 லட்சம் அளவில் கடன் வைத்திருப்பவர்கள் தவணை முறையை பயன்படுத்தி வரி செலுத்த முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • வரி பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • வரிபாக்கி உள்ள தனியார் நிறுவனத்தின் கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்தனர்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் நகராட்சி பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் பெருகி வருகின்றன.

    இந்தநிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி பாக்கி அதிக அளவில் உள்ளது. அதனை வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    வரி பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் வரி பாக்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இதற்கிடையே ரூ.1 கோடியே 10 லட்சம் வரி பாக்கி உள்ள தனியார் ஓட்டல் மற்றும் ரூ.21 லட்சம் வரிபாக்கி உள்ள கல்வி நிறுவனத்தின் கட்டிடம் ரூ.19 லட்சம் வரிபாக்கி உள்ள தனியார் நிறுவனத்தின் கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்தனர். இதற்கான அறிவிப்பு நோட்டீசும் அங்கு ஒட்டப்பட்டது.

    வரி பாக்கி வைத்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் லட்சுமி எச்சரித்து உள்ளார்.

    • மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
    • கொரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்துக்கான மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி மற்றும் கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கேள்வி நேரத்தின் போது 10 உறுப்பினர்களும், நேரமில்லா நேரத்தில் 14 உறுப்பினர்களும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் 80 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த தீர்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டன.

    சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பணிகள் துறைக்கு நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யவும், கட்டணங்கள் மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சாலையில் வணிக விற்பனையகம் நிகழ்ச்சிகள் ( கமர்ஷியல் ஷாப்பிங் நிகழ்வுகள்) மாநகராட்சியின் சாலை பகுதிகளில் நடத்த கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்கப்பட உள்ளது.

    கொரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.

    மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நலமிகு சென்னை மற்றும் நட்புமிகு சென்னை என்ற அடிப்படையில் தனியார் நிகழ்வுகள் நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது.

    சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 1 லட்சத்து 77 ஆயிரம் தெருவிளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 உயர் கோபுர மின் விளக்குகளை பராமரிக்க ஒரு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

    கொசஸ்தலை ஆற்றில் கட்டமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடையாத காரணத்தினால் அதன் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

    பெருங்குடி குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும் போது சுற்றுச்சூழல் பூங்கா, சி.என்.ஜி. பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஏற்ப தயார்படுத்த முடிவு செய்யப்பட்டன என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை.
    • கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 30-தேதி சென்னை மாநகராட்சி, சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது.

    இந்த அரசாணையையும், மாநகராட்சி தீர்மானத்தையும் எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, "மக்கள் நலத்திட்டங்களுக்கு தேவையான நிதியையும், அரசின் செலவினங்களுக்காகவும் வருவாயை திரட்டுவதும், வரி விதிப்பால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் சமன்படுத்துவதும் ஒரு மக்கள் நல அரசுக்கு அவசியமாகிறது என்பதால் வரி விதிப்பை வெளிப்படைத் தன்மையுடனும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டும் மேற்கொள்ள வேண்டும்.

    நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை. சொத்து வரியை உயர்த்துவது குறித்த அரசாணை என்பது ஆலோசனையாக உள்ளதே தவிர, உத்தரவாக இல்லை.

    இந்த அரசாணையின் அடிப்படையில், கடந்த 30 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சொத்து வரி இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.

    சொத்து வரி அரசாணையும், மாநகராட்சி தீர்மானங்களும் செல்லும். அதேசமயம், சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை சொத்துவரி செலுத்தும் 15 லட்சம் பேரில், 30 பேர் தெரிவித்த ஆட்சேபங்களை முறையாக பரிசீலித்து பதிலளித்திருந்தால் இந்த வழக்குகள் ஐகோர்ட்டுக்கு வந்திருக்காது. அதேபோல வரி உயர்வுக்கு பொதுமக்கள்  ஆட்சேபங்கள் தெரிவிக்கும் விதமாக முறையாக அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

    மேலும், சொத்து வரியை நிர்ணயிக்க பின்பற்றப்படும் நடைமுறையை குறை கூற முடியாது. 2022-23ம் ஆண்டுக்கான இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தக் கூறி மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக்கூடும். 2023-24ம் ஆண்டின் முதல் அரையாண்டு முதல், அதாவது வரும் ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த வேண்டும். 

    சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் பெற ஏதுவாக மாநகராட்சிகள், தங்கள் இணையதளங்களை மேம்படுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
    • முதல் கட்டமாக ரூ.25 லட்சத்துக்குமேல் சொத்து வரி செலுத்தாத 38 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் 13 லட்சம் பேரிடம் இருந்து அரையாண்டுக்கு தலா ரூ.700 கோடி என ஆண்டுக்கு ரூ.1400 கோடி வரை சென்னை மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கிறது.

    காசோலை, பணம், ஆன்லைன் என பல்வேறு வகையில் சொத்துவரி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு 5 சதவீதம் அல்லது ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தாமதமாக சொத்துவரி செலுத்துபவர்களுக்கு 2 சதவீத அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிதியாண்டில் சொத்துவரி உயர்த்தப்பட்டதால் அபராத தொகை இல்லாமல் சொத்துவரி செலுத்த வருகிற ஜனவரி 12-ந்தேதி வரை சென்னை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.

    ஆனாலும் பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    இதையடுத்து சொத்து வரி செலுத்தாதவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி http://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.

    முதல் கட்டமாக ரூ.25 லட்சத்துக்குமேல் சொத்து வரி செலுத்தாத 38 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சொத்துவரி செலுத்தாத 321 பேர், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சொத்துவரி செலுத்தாத 140 பேர் என மொத்தம் இதுவரை 499 பேரின் பட்டியலை சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

    அதில் ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாமல் உள்ளனர்.

    சொத்துவரி செலுத்துவதில் அவர்கள் அலட்சியம் காட்டி வருகிறார்கள். எனவே சொத்துவரி செலுத்தாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறோம்.

    தற்போது ரூ.66.37 கோடி வரை சொத்துவரி பாக்கி வைத்துள்ள 499 பேரின் பட்டியலை வெளியிட்டு உள்ளோம். அதன்மூலம் அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    அதன்பிறகும் சொத்து வரி செலுத்தாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நடவடிக்கை மிக தீவிரமாக இருக்கும்.

    எனவே சொத்துவரி செலுத்தாதவர்கள் உடனடியாக சொத்துவரி செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது.
    • 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் ஆதார் எண் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய அடையாளமாகிவிட்டது. ஆரம்பத்தில் அடையாள சான்றாக பயன்படுத்தப்பட்ட ஆதார் அட்டை முதற்கட்டமாக வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடந்தது. அதன் பிறகு வருமானவரி கணக்கு எண்ணுடன் இணைக்க உத்தர விடப்பட்டது.

    கடந்த மாதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் ஒருவருக்கு எத்தனை மின் இணைப்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்பதால் சிலர் ஆதாரை இணைக்க தயக்கம் காட்டி வந்தனர்.

    ஏனென்றால் 100 யூனிட் இலவச மின்சாரம் ஒரு நபருக்கு ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரே வீட்டில் ஒருவர் எத்தனை மின் இணைப்பு வைத்திருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் தருவோம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இது எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்பது போக போகத்தான் தெரிய வரும்.

    இந்த சூழலில் ரேஷன் கார்டுடன் வங்கிக்கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    இப்போது ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்து வரி எண்ணை இணைக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் வீடுவீடாக ரேஷன் கார்டு எண்ணுடன் சொத்துவரி எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதன் மூலம் ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கு என்னென்ன சொத்து உள்ளது. எவ்வளவு வரி கட்டுகிறார்கள். இவர்கள் ஏழையா? வசதி படைத்த வர்களா? என்ற விவரம் துல்லியமாக தெரிந்துவிடும்.

    • 2022 -2023-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் 31.10.2022-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.
    • தவறினால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் லட்சுமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மறைமலைநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி முதல் அரையாண்டுக்கான தொகை ஏப்ரல் 30-ந்தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கான தொகை அக்டோபர் 30-ந்தேதிக்குள்ளும் செலுத்துவதற்கான கடைசி நாள் ஆகும். 2022 -2023-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் 31.10.2022-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.

    எனவே மறைமலைநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை, உள்ளிட்டவற்றை பொதுமக்கள் உடனடியாக நிலுவையின்றி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
    • சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் நாளை (9-ந் தேதி) அன்று பேரூராட்சிகளிலும், 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களிலும் 9.12.2022 அன்று பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகின்ற 16.12.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கழக இடைக்காலப் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் 1.10.22 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

    சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு 15.11.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இதுவரை சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15-ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2 சதவீத தனி வட்டியினை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×