search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்துவரி நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்: மாநகராட்சி எச்சரிக்கை
    X

    சொத்துவரி நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்: மாநகராட்சி எச்சரிக்கை

    • சொத்துவரி செலுத்த தவறுவோரின் சொத்துகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
    • நிலுவைத்தொகையை சிரமமின்றி, எளிதாக செலுத்த கியூ.ஆர்.கோடு வசதி அச்சிடப்பட்டுள்ளது.

    சென்னை :

    சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரியை அதன் உரிமையாளர்கள் செலுத்திட வேண்டும்.

    தற்போது மாநகராட்சிக்கு சொத்துவரி ரூ.50 ஆயிரத்துக்குள் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களின் எண்ணிக்கை சுமார் 5.93 லட்சமாக உள்ளது. அந்தவகையில் நிலுவைத்தொகை ரூ.346.63 கோடி உள்ளது. நிலுவைத்தொகையை செலுத்தக்கோரி தபால் துறை மூலமாக சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அந்த நோட்டீசில் நிலுவைத்தொகையை சிரமமின்றி, எளிதாக செலுத்த கியூ.ஆர்.கோடு வசதி அச்சிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலுவை சொத்துவரியை செலுத்தலாம்.

    மேலும், சொத்துவரியை வரி வசூலிப்பவர், இணையதளம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், கைபேசி செயலி மற்றும் ஆன்-லைன் பணபரிவர்த்தனைகள் மூலமாகவும் செலுத்தலாம். சொத்துவரி செலுத்த தவறுவோரின் சொத்துகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    எனவே, நடப்பு நிதி ஆண்டு முடிவடைய 2 மாதங்களே உள்ள நிலையில், சொத்துவரி நிலுவை வைத்துள்ள உரிமையாளர்கள் நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.

    மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×