search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை- நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
    X

    மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை- நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

    • 2022 -2023-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் 31.10.2022-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.
    • தவறினால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் லட்சுமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மறைமலைநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி முதல் அரையாண்டுக்கான தொகை ஏப்ரல் 30-ந்தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கான தொகை அக்டோபர் 30-ந்தேதிக்குள்ளும் செலுத்துவதற்கான கடைசி நாள் ஆகும். 2022 -2023-ம் நிதி ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த வேண்டிய காலம் 31.10.2022-ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது.

    எனவே மறைமலைநகர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை, உள்ளிட்டவற்றை பொதுமக்கள் உடனடியாக நிலுவையின்றி செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×