search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்து வரி"

    • சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
    • பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளலாம்.

    தென்காசி:

    நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் அறிவுறுத்துதலின்படி கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கீழப்பாவூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்கள் தங்களது நிகர சொத்துவரி தொகையில் 5 சதவீத ஊக்கத்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி தங்களின் சொத்து வரிகளை பேரூராட்சியில் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையினை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சனி - ஞாயிறு விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும்.
    • சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகர பொதுமக்கள் காங்கயம் நகராட்சிக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான செலுத்த வேண்டிய சொத்து வரியை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தினால் சொத்து வரித் தொகையில் 5 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் பொதுமக்கள் மேற்கண்ட சொத்து வரியை செலுத்துவதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வரி வசூல் மையம் செயல்படும். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு காங்கயம் நகராட்சிப் பகுதி மக்கள் சொத்து வரியை வரும் 30 -ந் தேதிக்குள் செலுத்தி பயனடையவும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் நகராட்சியில் 30-ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவித்தார்
    • டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அரியலூர் நகராட்சியில் 2023-2024-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை வரும் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். சொத்து உரிமையாளர்கள், சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    எனவே அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெறலாம். இதன் மூலம் நகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.


    • மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • சொத்துவரி செலுத்துவோர் தங்கள் அரையாண்டு கணக்குகளை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கட்டினால் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    மறைமலைநகர் நகராட்சியில் சொத்துவரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சொத்துவரி செலுத்துவோர் தங்கள் அரையாண்டு கணக்குகளை ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கட்டினால் அவர்களுக்கு 5 சதவீதம் முதல் ரூ.5ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    • மேலூர் நகராட்சியில் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
    • நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேலூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நடப்பு சொத்து வரிகளை நகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மூலம் மற்றும் நகராட்சி வசூல் மையம் மூலமாகவோ, காசோலை மற்றும் மின்னணு டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவோ ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு ஊக்கத் தொகையாக 5 சதவீதம், அதாவது அதிகபட்சமாக ரூ.5000 வரை அளிக்கப்படும். எனவே நகராட்சிக்கு சொத்து வரி செலுத்தும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் தங்கள் சொத்து வரிகளை செலுத்தி அதற்கான ஊக்கத்தொகையை பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இணையதளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையாகவும் செலுத்தலாம்.
    • 4 லட்சத்து 89 ஆயிரத்து 794 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.

    சென்னை :

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு 15 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும்.

    அதன்படி, ஏப்ரல் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 4 லட்சத்து 89 ஆயிரத்து 794 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர். மேற்படி காலத்தில் ரூ.290.62 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட திருத்தத்தின்படி 2023-24-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள்.

    உரிமையாளர்கள் சொத்துவரியை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம்.

    நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையாகவும் செலுத்தலாம்.

    எனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்தி ஊக்க தொகையை பெற்றிடுமாறும், சென்னை மாநகரத்துக்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசாணையில் குறிப்பிடப்பட்டது போல் சொத்துவரி உயர்த்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர்.
    • சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு வாடகையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் 20 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் கடந்த 1998-ம் ஆண்டு கடைசியாக சொத்துவரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு சொத்துவரி உயர்த்தப்படவில்லை.

    இந்நிலையில் விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொது மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரித்தல் போன்றவற்றுக்கு கூடுதல் செலவானது. இதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு சொத்துவரி சீராய்வு செய்யப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. 25 சதவீதம், 50 சதவீதம், 75 சத வீதம், 100 சதவீதம் என 4 வகைகளாக சொத்துவரி உயர்த்தப்பட்டது. காலி மனைக்கு சொத்துவரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டது.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கி உள்ள நிலையில் சொத்துவரி 6 சதவீதம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி பொது மக்களிடம் எழுந்துள்ளது. அரசாணையில் குறிப்பிடப்பட்டது போல் சொத்துவரி உயர்த்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

    கடந்த ஆண்டு சொத்து வரி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் உடனே சொத்து வரியை உயர்த்தக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    மேலும் மின்கட்டண உயர்வும் பொதுமக்களை பாதித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் சொத்து வரி உயர்வு என்றால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்று பொதுமக்கள் கூறுகிறார்கள். சொத்துவரியை உயர்த்தினால் வீட்டு வாடகையையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்.

    எனவே அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சொத்துவரி உயர்வை இந்த ஆண்டு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    • நடப்பு அரை நிதி ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்.15-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த அரை நிதியாண்டில் (அக்.1 முதல் அக்.15) வரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 127 பேர் சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்று உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919-ன்படி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால், அரையாண்டுக்கு ஒரு முறை முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இதில் தவறாமல் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, நடப்பு அரை நிதி ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்.15-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த அரை நிதியாண்டில் (அக்.1 முதல் அக்.15) வரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 127 பேர் சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்று உள்ளனர். நிகழ் அரை நிதியாண்டில் ஏப்.6-ந் தேதி வரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 662 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற்றுள்ளனர்.

    இதை ஊக்குவிக்கும் வகையில் பெரும்பான்மையான சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரியினை எளிதாக செலுத்த மாநகராட்சி சார்பில் சொத்துவரி வசூல் சிறப்பு முகாம்கள் வார இறுதி நாள்களில் நடத்தப்பட உள்ளது.

    இதனை முன்னிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.8, 9) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 15 மண்டலங்களில் 200 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் சொத்து உரிமையாளர்கள் காசோலை மூலமும் கடன் மற்றும் பற்று அட்டை மூலமும் சொத்து வரி செலுத்தலாம்.

    மேலும், வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்து உள்ள அரசு இ-சேவை மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், நம்ம சென்னை மற்றும் பேடி எம் செயலி, மாநகராட்சி இணைய தளம் மூலமாக எண்ம (டிஜிட்டல்) பரிவர்த்தனை வாயிலாக சொத்து வரி செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்தி ஏப்.15-ந் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • வரி செலுத்தாத 262 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளின் சொத்துகளை கண்டறிந்து சீல் வைக்கும் பணி நடந்தது.

    வசாய்:

    மிராபயந்தர் மாநகராட்சியில் வரி செலுத்தாத 262 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தானே மாவட்டம் மிராபயந்தர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான சொத்து வரி நகரில் மொத்தம் 3 லட்சத்து 49 ஆயிரத்து 977 பேரிடம் ரூ.227 கோடியே 80 லட்சம் வரையில் இலக்கு நிர்ணயக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் ரூ.155 கோடியே 49 லட்சம் அளவிற்கு வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. மீதி ரூ.72 கோடியே 31 லட்சம் அளவில் பாக்கி உள்ளது. பல ஆண்டுகளாக வரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருபவர்கள் மீது மாநகராட்சி கடந்த 2 நாட்களாக அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    இதன்பேரில் சொத்துவரி செலுத்தாமல் இருந்து வரும் குடியிருப்புவாசிகளின் சொத்துகளை கண்டறிந்து சீல் வைக்கும் பணி நடந்தது. இதன்படி 262 குடியிருப்புவாசிகளின் சொத்துகள் பறிமுதல் செய்து அதற்கு சீல் வைக்கப்பட்டது. பறிமுதல் செய்த சொத்துக்களை ஏலம் விடப்பட்டு வரி வசூலிக்கப்படும். நடப்பு ஆண்டில் வரி வசூல் 68 சதவீதமாகவும், நிலுவை தொகையை வசூலிக்க கமிஷனர் அறிவுறுத்தலின்படி சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக என மாநகராட்சி துணை கமிஷனர் சஞ்சய் ஷிண்டே தெரிவித்து உள்ளார்.

    • சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • சென்னை மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீசு அனுப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி செலுத்தாதவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான சொத்து வரி செலுத்த இன்னும் 1 வார கால அவகாசம் உள்ளது. எனவே அதிகாரிகள் சொத்துவரியை வசூலிக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

    சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 550-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் உள்ள 203 வீடுகள் கடந்த 6 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை. இதன் மூலம் ரூ.31 லட்சம் சொத்துவரி பாக்கி உள்ளது.

    இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பில் பலமுறை நோட்டீசு அனுப்பட்டது. ஆனால் அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து இந்த 203 வீடுகளுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி ராயபுரம் உதவி வருவாய் அலுவலர்கள் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். அங்கு சொத்துவரி செலுத்தாத 203 வீடுகளுக்கும் சீல் வைத்தனர்.

    • சொத்து வரியை குறைக்க கோரி வருகிற 28-ந் தேதி முற்றுகை போராட்டம் நடக்கிறது
    • ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சி வரி உயர்வு எதிர்ப்பு போராட்டக்குழுவின் கூட்டம் மாரியப்பன் தலைமையில் நடந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்கம், அறம் அறக்கட்டளை, முகநூல் நண்பர்கள், தெரசா நற்பணி இயக்கம், தென்னை விவசாயிகள் சங்கம், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் மையம், நேதாஜி ரத்ததான கழகம், தமிழ்ச் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தமிழகத்திலேயே அதிகமாக வரிவிதித்துள்ள (சென்னை 12.40%, ராஜபாளையம் 20.80%) ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை குறைக்க வலியுறுத்தியும், தாமிரபரணி தண்ணீருக்கு 3 மடங்கு (மாதம் ரூ.50 என்பதை 150 ஆக) உயர்த்தப்பட்டுள்ள வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும், ராஜபாளையம் நகரில் 5 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகத்தை வருகிற 28-ந் தேதி முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    • சென்னை நகரம் முழுவதும் பல இடங்களில் புறம்போக்கு இடத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருபவர்கள் பட்டா கேட்டும், சொத்து வரி விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
    • அம்பத்தூர் மண்டலம் பாடி, காமராஜர் நகர் போன்ற பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் பல்வேறு மண்டலங்களில் கிராம நத்தம் போன்ற நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் பல குடும்பங்கள் பட்டா பெற இயலவில்லை என்றும் புறம்போக்கு நிலங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அம்பத்தூர் மண்டலம் பாடி, காமராஜர் நகர் போன்ற பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில் குடியிருப்பவர்கள் பட்டா கேட்டு வருகின்றனர். சொத்துவரி விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் சென்னை நகரம் முழுவதும் பல இடங்களில் புறம்போக்கு இடத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருபவர்கள் பட்டா கேட்டும், சொத்து வரி விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து சென்னை நகரில் புறம்போக்கு நிலத்தில் உள்ள 20 ஆயிரம் கட்டிடங்களுக்கு சொத்துவரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- முந்தைய காலத்தில் கிராமங்களில் பொதுமக்கள் குடியிருப்பதற்காக பொதுவான நிலம் இருந்தது. நத்தம் குடியேற்ற திட்டம் அமல்படுத்தப்பட்டபோது கிராம நத்தம் நிலத்திற்கு பட்டா வழங்கப்பட்டது.

    ஆனாலும் இன்னும் பலர் பட்டா இல்லாமல் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சொத்துவரி விதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் அடிப்படை வசதிகளை பெறுவதில் சவால்களை சந்திக்க நேரிடுகிறது.

    புறம்போக்கு நிலம் அரசு சொத்து என்பதால் இது தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். சொத்து வரி விதிப்பதற்காக சென்னையில் பல்வேறு மண்டலங்களில் சுமார் 20 ஆயிரம் கட்டிடங்களை கொண்ட கிராம நத்தம் வகை நிலங்களை மட்டும் நாங்கள் கணக்கிட்டுள்ளோம். இந்த கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×