search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரமைப்பு பணி"

    • மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணியை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் பெண் சமூகச் சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வெண்கலச் சிலை அமைய உள்ள இடத்தில் சிலைவைக்க பீடம் அமைக்கும் பணி மற்றும் தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு சிலை மற்றும் அரங்கம் அமைய உள்ள இடம், சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், பதினெட்டாம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர் மற்றும் தில்லைவிடங்கள் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2010ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.

    இந்த மணிமண்டபம் கடந்த காலங்களில் சரிவர பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு வரப்பெற்றது. இதணை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்ப்பதற்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டு ரூ47,02,500க்கு நிதியொப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம். முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) சரவணன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகர் மன்றத் தலைவர் செல்வராஜ், சீர்காழி நகர் மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பாலரவிக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ராமர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியின் அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது. பூண்டி ஏரியில் தேங்கும் தண்ணீர் அங்குள்ள கிணறு மதகு வழியாக நீரியல் ஆய்வு கூடத்துக்கு செல்வது வழக்கம்.

    கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. அப்போது தண்ணீரின் அழுத்தத்தால் ஏரியின் அருகே உள்ள மதகு சேதமடைந்து நீரியல் ஆய்வுக்கூ டத்துக்குள் வெள்ளம் பாய்ந்தது.

    இந்த நிலையில் சேதமடைந்த கிணறு மதகு அகற்றப்பட்டு புதிதாக 3 கிணறு மதகுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரிவரை உள்ள கால்வாயிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு கரைகள் சீரமைக்கப்படுகின்றன.

    இதற்காக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு விட்டது. தற்போது பூண்டி ஏரியில் 609 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதற்கிடையே பூண்டி கால்வாய் சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.

    தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளதால் கால்வாய் வழியாக வரும் மழை நீரை பூண்டி ஏரியில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே பருவமழை தீவிரம் அடைவதற்குள் கால்வாய் சீரமைப்பு பணிகளை முழுவதும் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் வாய்க்கால்களை தூர்வாரி தருமாறு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • தூர்வாரும் பணிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்தி மரப்பட்டி விவசாய சங்கத்தினர் ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் விவசாய வாய்க்களை தூர்வாரி தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து உடனடியாக வாய்க்காலை தூர்வாரி தருவதற்கு ஸ்பிக் நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஸ்பிக் நிறுவன துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன் உத்தரவின் பேரில்,ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.இந்த நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன நிர்வாக முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் மக்கள் தொடர்பு துணை மேலாளர் அம்ரிதா கவுரி, மக்கள் தொடர்பு அலுவலர் குணசேகர், விவசாய சங்கத்தின் சார்பில் முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத் தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி என்ற சின்னராஜா, கிருபானந்தம் மற்றும் உப்பாற்று ஓடை ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பணிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதன்மூலம் மழைக்காலத்தில் விவசாய விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவது குறையும், மழைநீர் தேங்கி நிற்பதும் தடுக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். மேலும் ஸ்பிக் நிறுவனத்திற்கு விவசாயிகள் சங்கத்தினரும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • தற்பொழுது ஒரு லேயர் மட்டுமே மாநகராட்சி மூலம் போடப்படுகிறது.

    நாகர்கோவில்:

    கோட்டார் சவேரியார் ஆலயத்திலிருந்து ஈத்தாமொழி விலக்கு வரையுள்ள சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக பைப் லைன்கள் அமைக்கப்பட்டது.

    பைப் லைன்கள் அமைக்கப்பட்ட பிறகு சாலை சீரமைக்கப்படவில்லை.இதனால் சாலை குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்தது. இந்த சாலையில் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மேயர் மகேஷ் நடவடிக்கை மேற்கொண்டார்.

    சாலையின் ஓரத்தில் உள்ள கழிவு நீர் ஓடைகளை சீரமைத்தவுடன் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்தில் உள்ள கழிவுநீருடன் இணைக்கும் வகையில் ராட்சத பைப் அமைக்கப்பட்டது. இதையடுத்து சாலை அமைக்கும் பணி இன்று நடந்தது.மேயர் மகேஷ் இந்த பணியை தொடங்கி வைத்தார்‌.

    இது குறித்து மேயர் மகேஷ் கூறுகையில் இந்த சாலை ரூ.35 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. மாநகராட்சி மூலமாக பணி மேற்கொள்ளப்படுகிறது.

    7 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. தற்பொழுது ஒரு லேயர் மட்டுமே மாநகராட்சி மூலம் போடப்படுகிறது. உடனடியாக நெடுஞ்சாலை துறை மூலமாக இதற்கு மேல் இன்னொரு லேயர் போடுவதற்கான நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார். சாலை பணி நடைபெற்றதையடுத்து இந்த சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆணையா ளர் ஆனந்தமோகன், என்ஜினீ யர் பாலசுப்ரமணியன், மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி கவுன்சிலர்கள் ரமேஷ் ,பாலசுப்பிரமணியன், அனந்தலட்சுமி, மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கோட்டார் சாலையில் போக்குவரத்து மாற்றம்
    • ரெயில்வே சாலை முதல் ஈத்தாமொழி விலக்கு வரை சாலை சீரமைக்கும் பணி முதல்கட்டமாக நடக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயம் முதல் ஈத்தாமொழி விலக்கு வரையிலான சாலையில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் பதிப்பு போன்ற வற்றுக்காக குழிகள் தோண்டப்பட்டன.

    ஆனால் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் அப்படியே விடப்பட்ட காரணத்தால் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியே வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

    சாலையை சீரமைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சமீபத்தில் மழை பெய்தது. இதனால் சாலை மேலும் மோசமடைந்தது. பல்லாங்குழிகளாக காணப்பட்ட சாலையால் விபத்துக்களும் நடந்து வந்தன.

    இந்த நிலையில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக அந்த பகுதியில் உள்ள வடிகால் ஓடைகள் கட்டும் பணி நடை பெற்றது.நேற்று இரவு முதல் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கின.

    இதற்காக அந்த சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மற்றும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள், ரெயில் நிலைய சாலை வழியாக திருப்பி விடப்ப ட்டன. நேற்று இரவு முதல் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலையும் போக்குவரத்து இதே சாலை வழியாகத் தான் இயக்கப்பட்டது.

    ரெயில்வே சாலை முதல் ஈத்தாமொழி விலக்கு வரை சாலை சீரமைக்கும் பணி முதல்கட்டமாக நடக்கிறது.

    • கொடகை்கானலில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • மணல் மூட்டைகளை அடுக்கி மலைப் பாதை சீரமைக்கும் பணி நடந்தது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடிய ன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    கடந்த 29ம் தேதி அதிகாலை பெய்த கன மழையால் மலைப்பாதையில் உள்ள தாண்டிக்குடி- பட்ட லங்காடு பிரிவு இடையே தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்க ப்பட்டது. இதற்கிடையே மணல் மூட்டைகளை அடுக்கி மலைப் பாதை சீரமைக்கும் பணி நடந்தது.

    ஆத்தூர் நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பரத், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடந்தது. சீரமைப்பு பணி முடிவடை ந்ததையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் இந்த மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கி யது. இன்று காலை முதல் வழக்கம் போல் பஸ், கார், லாரி, ஜீப் போன்ற வாக னங்கள் இயக்கப்படுகின்றன. 8 நாட்களுக்கு பிறகு மலைப்பாதையில் போக்கு வரத்து தொடங்கியதால் தாண்டிக்குடி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் பேசி 14.99 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரை சந்தித்து மீண்டும் இது குறித்து கோரிக்கை விடுத்தேன்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து மக்கள் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் . குறிப்பாக குழித்துறை களியக்காவிளை இடையேயான சாலை மிக அதிக அளவில் சேதமடைந்து மிக ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலை செப்பனிடுவ தற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் பேசி 14.99 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வைத்தேன்.

    எனினும் பல்வேறு காரணங்களுக்காக பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் அதிகாரிகளிடம் இடை விடாது தொடர்பு கொண்டு வலியுறுத்தி வந்தேன்.

    கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரை சந்தித்து மீண்டும் இது குறித்து கோரிக்கை விடுத்தேன். தொடர் முயற்சிகளின் பலனாக இந்த பணிக்கான ஒப்பந்தம் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

    மிக விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். பணிகளை விரைந்து முடிப்பதற்கு நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் மக்களின் சிரமம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கி றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்றன
    • கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக தூரிய நடவடிக்கை எடுக்கும் விதமாக

    8-வது வார்டு ராஜகொல்லை தெருவில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவங்கி வைத்தார்.

    உடன் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி துணைத் தலைவரும், திமுக நகர கழக செயலாளருமான வெ.கொ.கருணாநி, நகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜமாணிக்கம் பிள்ளை, வார்டு கழக செயலாளர் மருதை.விஜயன், வீர.புகழேந்தி வாசு மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    ×