search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்பிக் நிறுவனம்"

    • ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் வாய்க்கால்களை தூர்வாரி தருமாறு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
    • தூர்வாரும் பணிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்தி மரப்பட்டி விவசாய சங்கத்தினர் ஸ்பிக் நிறுவனத்திடம் மழைக்காலத்திற்கு முன் விவசாய வாய்க்களை தூர்வாரி தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து உடனடியாக வாய்க்காலை தூர்வாரி தருவதற்கு ஸ்பிக் நிறுவனத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஸ்பிக் நிறுவன துணைத் தலைவர் கோபால கிருஷ்ணன் உத்தரவின் பேரில்,ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் தொடங்கியது.இந்த நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன நிர்வாக முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் மக்கள் தொடர்பு துணை மேலாளர் அம்ரிதா கவுரி, மக்கள் தொடர்பு அலுவலர் குணசேகர், விவசாய சங்கத்தின் சார்பில் முள்ளக்காடு, முத்தையாபுரம், அத்திமரப்பட்டி விவசாய சங்கத் தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி என்ற சின்னராஜா, கிருபானந்தம் மற்றும் உப்பாற்று ஓடை ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பணிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதன்மூலம் மழைக்காலத்தில் விவசாய விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவது குறையும், மழைநீர் தேங்கி நிற்பதும் தடுக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். மேலும் ஸ்பிக் நிறுவனத்திற்கு விவசாயிகள் சங்கத்தினரும், பொது மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

    ×