search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refurbishment work"

    • பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சவரிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.
    • பெரும்பகுதி சீரமைப்பு முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பைக் மற்றும் கார் சென்று வர அனுமதிக்கப்பட்டது.

    பழனி:

    பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் மலைச்சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சவரிக்காடு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களில் வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானலுக்கு சென்று வந்தனர். நீண்டதூரம் சுற்றிச்செல்வது சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும் கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    வழக்கமாக ஓணம் பண்டிகையையொட்டி ஏராளமான கேரள சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம். எனவே சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி அதிகாரிகள் மண்மூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இன்று பெரும்பகுதி முடிந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பைக் மற்றும் கார் சென்று வர அனுமதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஓரளவு சிரமம் குறைந்தது என நிம்மதி அடைந்துள்ளனர்.

    சீரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கனரகவாகனங்கள் செல்ல அனுமதியில்லை. விரைவில் முழுபணிகளும் முடிந்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கொடகை்கானலில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • மணல் மூட்டைகளை அடுக்கி மலைப் பாதை சீரமைக்கும் பணி நடந்தது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடிய ன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    கடந்த 29ம் தேதி அதிகாலை பெய்த கன மழையால் மலைப்பாதையில் உள்ள தாண்டிக்குடி- பட்ட லங்காடு பிரிவு இடையே தடுப்பு சுவர் இடிந்து சேதம் அடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்க ப்பட்டது. இதற்கிடையே மணல் மூட்டைகளை அடுக்கி மலைப் பாதை சீரமைக்கும் பணி நடந்தது.

    ஆத்தூர் நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் பரத், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் மேற்பார்வையில் இந்த பணி நடந்தது. சீரமைப்பு பணி முடிவடை ந்ததையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் இந்த மலைப்பாதையில் போக்குவரத்து தொடங்கி யது. இன்று காலை முதல் வழக்கம் போல் பஸ், கார், லாரி, ஜீப் போன்ற வாக னங்கள் இயக்கப்படுகின்றன. 8 நாட்களுக்கு பிறகு மலைப்பாதையில் போக்கு வரத்து தொடங்கியதால் தாண்டிக்குடி பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×