search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் பழுதான தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும் - ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக விஜய் வசந்த் எம்.பி. தகவல்
    X

    குமரி மாவட்டத்தில் பழுதான தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி விரைவில் தொடங்கும் - ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக விஜய் வசந்த் எம்.பி. தகவல்

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் பேசி 14.99 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    • கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரை சந்தித்து மீண்டும் இது குறித்து கோரிக்கை விடுத்தேன்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட மக்கள் பயன்படுத்தி வரும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்து மக்கள் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் . குறிப்பாக குழித்துறை களியக்காவிளை இடையேயான சாலை மிக அதிக அளவில் சேதமடைந்து மிக ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த சாலை செப்பனிடுவ தற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் பேசி 14.99 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வைத்தேன்.

    எனினும் பல்வேறு காரணங்களுக்காக பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் அதிகாரிகளிடம் இடை விடாது தொடர்பு கொண்டு வலியுறுத்தி வந்தேன்.

    கடந்த மாதம் 28-ம் தேதி மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரை சந்தித்து மீண்டும் இது குறித்து கோரிக்கை விடுத்தேன். தொடர் முயற்சிகளின் பலனாக இந்த பணிக்கான ஒப்பந்தம் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

    மிக விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். பணிகளை விரைந்து முடிப்பதற்கு நெடுஞ்சாலை துறை மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் மக்களின் சிரமம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கி றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×