search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவபெருமான்"

    • கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர்.
    • அதனால்தான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.

    பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத்தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார்.

    விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க,

    அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தைகாண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும்,

    இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர்கொண்டு பூலோகம் வந்து கடும்தவம் செய்தார்.

    தவத்தை மெச்சிய சிவன், பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான்.

    நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார்.

    மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார்.

    அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.

    கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர்.

    அதனால்தான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.

    அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன்கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.

    • சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர்.
    • அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க.

    சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108.

    இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48.

    ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன.

    மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன.

    இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை.

    மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும்.

    ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம்.

    இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும்.

    சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர்.

    அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க.

    அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதிதேவியாக்கி இறைவனை வழிப்படனும். அப்பொழுதுதான் முக்தி கிடைக்கும்.

    இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி. சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கனும்.

    சுவாமிக்கு திருவாதிரை களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கனும்.

    ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.

    இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

    இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று செய்யலாம்.

    இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம். 

    • ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்கள்.
    • சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள் மஹா உத்ஸவத்தின் உச்சகட்ட நிகழ்வு

    ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான்.

    சிதம்பரத்தின் மஹோத்ஸவங்களில் மிக முக்கியமானதும், மணி மகுடம் போன்றதும் விளங்குவது மார்கழி ஆருத்ரா தரிசனம்.

    கைலாய மலை பனி படர்ந்தது.

    அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உகந்த, பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில்,

    சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள் மஹா உத்ஸவத்தின் உச்சகட்ட நிகழ்வு

    மார்கழி ஆருத்ரா தரிசன தினத்தின் மதியப் பொழுதில் (ஸ்ரீ நடராஜ ராஜர் - பகல் வேளையில் தான் தன் கணங்கள் அனைத்தோடும் வந்திறங்கினார்) சித்ஸபா பிரவேசம் எனும் பொன்னம்பலம் புக்கும் காட்சியே - பெரும் புண்யங்களை அளிக்க வல்லது.

    மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (காலை 6.30-க்கு மேல் 7.15 மணிக்குள்)

    அதை தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து,

    ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி,

    ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - நாதஸ்வர இசை முழங்க, வேத பாராயணம் முழங்கிட

    வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள்.

    ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்கள்.

    • சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
    • சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.

    ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது.

    அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.

    ஆனால், திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

    திரேதாயுகா அலறித் துடித்து பார்வதி தேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

    அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள்.

    அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார்.

    இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

    அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசன காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

    இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.

    இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது

    சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

    ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம் சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.

    சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.

    சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.

    • மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
    • பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே?

    பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்குஉரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி?

    தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர்.

    இதுவே ஆருத்ரா எனப்படுகிறது.

    மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

    பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே?

    பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது.

    சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராண செய்திகள் உள்ளன.

    சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது.

    இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

    • அசுரர்களை அழிக்க வேண்டுமானால் இறைவன் தவக்கோலத்திலிருந்து மீள வேண்டும்.
    • இதற்காகப் பிரம்மா, விஷ்ணு தேவர்கள் அனைவரும் மன்மதனின் உதவியை நாடினர்.

    அசுரர்களை அழிக்க வேண்டுமானால் இறைவன் தவக்கோலத்திலிருந்து மீள வேண்டும்.

    இதற்காகப் பிரம்மா, விஷ்ணு தேவர்கள் அனைவரும் மன்மதனின் உதவியை நாடினர்.

    இவர்களின் விருப்பப்படியே மன்மதன் தன் பானத்தை மகேஸ்வரன்மேல் தொடுத்தான்.

    இச்செயலால் கோபம் கொண்ட ருத்ரன் தன் நெற்றிக்கண்ணால் அவனை எரித்தார்.

    இறைவனின் கோபத்தைத் தணிக்கும் பொருட்டு வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் பந்தநல்லூரக்கும் இடையே உள்ள

    திருவாளப்புத்தூருக்குத் தென் கிழக்கே உள்ள வரதம்பட்டு என்ற தலத்தில் குடிகொண்டிருக்கும்

    மன்மத பரமேஸ்வர லிங்கத்திற்குப் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும்.

    • தாயும், தந்தையுமாக மட்டுமல்ல குருவாகவும் இறைவன் இருக்கின்றார் என்பது இதன் மூலம் விளக்கப்படுகின்றது.
    • குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் தோற்றமும் இதுவாகவே அமைந்துள்ளது.

    ஆதியிலே குறிப்பிட்ட சனகர், சனா தனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய முனிவர்களுக்கு ஞானோபதேசம் வழங்கிய நாளே ஆடி மாதப் பவுர்ணமி நாளாகும்.

    ஞானவடிவினராகக் கைலாச மலையில் கல்லால மரத்தின் நிழலிலே தென்திசை நோக்கி அமர்ந்திருந்த சிவபிரானிடம் மேற்படி முனிவர்கள் நால்வரும் தாம்பல வேதாகமங்களைக் கற்றும் தமக்கு அவற்றிலே மயக்க நிலை இருப்பதாகவும், அவற்றைப் போக்கியருள வேண்டும் என்றும் தொழுது நின்றனர்.

    சிவபிரான் அம்முனிவர்களுக்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய ஆகமப் பொருள் விளக்கத்தை விளக்கியதுடன் வலக்கையைச் சின் முத்திரையாகப் பிடித்து மார்பிலே வைத்து யோக சமாதியடைந்து ஞானத்தின் தத்துவத்தையும் விளக்கியருளினார்.

    அத்துடன் சின் முத்திரை மூலம் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் இயல்பு நிலைகளையும் அவர்களுக்குத் தெளிவு படுத்தினார். அறிவூட்டி அருள் செய்தார்.

    தாயும், தந்தையுமாக மட்டுமல்ல குருவாகவும் இறைவன் இருக்கின்றார் என்பது இதன் மூலம் விளக்கப்படுகின்றது.

    குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் தோற்றமும் இதுவாகவே அமைந்துள்ளது.

    குருவின் முக்கியத்துவம் இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. தெளிவுறுத்தப்படுகின்றது.

    எத்தனை கற்றறிந்தவர்களாக இருந்தாலும் சிறந்த வழிகாட்டுதல் தேவை.

    தெளிவுறுத்தல்கள் தேவை என்பது இதன் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

    இதனால் தான் இந்து அரச குமாரர்களும் குருகுலத்திற்குச் சென்று குருவுக்குப் பணிவிடை செய்து பக்குவப் பட்ட மனநிலையில் தமக்குரிய கல்வியைக் கற்க வேண்டும் என்ற விதியிலிருந்தது.

    சமுதாயத்தில் அன்று அரசர்களுக்கும் மேலாக, மேன்மை கொண்டவர்களாகக் குருவுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது.

    இன்று உலகிலே ஆசிரிய தினமென்று ஆண்டிலே ஒருநாள் அண்மைக் காலகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    ஆசிரியரின் அதாவது குருவின் பெருமையை உணர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆனால் இந்துக்களோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குருவின் பெருமையையும், தேவையையும் மேன்மையையும் போற்றுவதை ஒரு சமயம் சார்ந்த பண்பாக, மரபாக, வழி பாடாகக் கொண்டுள்ளனர்.

    குரு பவுர்ணமி அதாவது ஆடிப் பவுர்ணமி தினத்தில் சிவபெருமானைக் குருவாகக் கொண்டு வணங்கி, வழிபாடுகள் செய்யப்படுகின்றது.

    அதாவது ஆசிரியர் பெருமை போற்ற இது ஒரு வழிபாட்டு நாளாயமைகின்றது.

    சமயக்குரவர்களுக்கும், சந்தான குரவர் களுக்கும், நாயன்மார்களுக்கும், ஆழ்வார் களுக்கும் ஏனைய பெரியார்களுக்கும் வழிபாட்டுடன் கொண்டாடப்படும் குரு பூசைகள், இந்துக்களின் வழிகாட்டி நெறிப்படுத்திய ஆசிரியர்களான குருக்களுக்குச் செய்யும் நன்றியுணர்வுடன் கூடிய வழிபாடாகும்.

    குருவை நன்றியுணர்வுடன் போற்றும் பாரம்பரிய இந்துக்களின் ஆசிரிய தினமுமாகும்.

    குரு பவுர்ணமி நன்னாளில் உலகிலே அறநெறிகள் பெருகி அன்பும், பண்பும் கொண்ட மனிதகுலம் உருவாக உறுதியுற குருவாக இருந்து அருள்செய்யும் அருளாளன் எம்பெருமான் சிவபிரானைத் தொழுது அவனது கருணை பெருகி நலம் கொழிக்க வழிபடுவோம்.

    • உடனே சிவபெருமான், அக்னி தேவன் முன் தோன்றி இங்குள்ள தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு உன் பெயரை இடு!
    • இந்தத் திருத்தலத்தில் இறைவனுக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.

    முன்னொரு காலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் இந்த தலத்திற்கு வந்து அக்னி கடவுளையும், சவுந்தர நாயகியையும் வணங்கினார்கள்.

    அப்பொழுது அக்னி தேவன் தொட்டப் பொருட்கள் சுட்டெரிக்கப்பட்டு நாச மானது அந்தப் பழியிலிருந்து விடுபட வழி இல்லையா என்று அக்னிதேவன் வேண்டினான்.

    உடனே சிவபெருமான், அக்னி தேவன் முன் தோன்றி இங்குள்ள தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு உன் பெயரை இடு!

    அந்தக் குளத்து நீரைக்கொண்டு வந்து எனக்கு அபிஷேகம் செய்து என்னை வழி பட்டால் உனக்கு அந்தப் பழிதீரும்.

    அதில் நீராடும் மக்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கும் என்று அருளினார்.

    அப்படிப்பட்ட அக்னி தேவனால் உண்டாக்கப்பட்ட மகிமை பெற்ற குளம் கொண்ட தலம் திருக்காட்டுப்பள்ளி.

    இங்கு திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வந்து சன்னதியின் முன் அமர்ந்து பதிகங்கள் பாடியிருக்கிறார்கள்.

    அவர்களின் பக்திப் பாடல்கள் பிரகாரச் சுவர்களில் பொறிக்கப்பட்டு உள்ளன.

    இந்தத் திருத்தலத்தில் இறைவனுக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.

    பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் இது.

    அவர் இங்கு வந்து தனக்கும் மும்மூர்த்திகளில் ஒருவர் என்னும் அங்கீகாரம் தரப்படவேண்டும் என்று பிரார்த்தனை செய்யவே அப்படியே சிவன் கூற அவருக்கு தனி இடம் தந்து தங்க அனுமதித்தார்.

    பிரம்மாவிற்கு தமிழ்நாட்டில் முதல் தனி சன்னதி அமைந்த இடம் திருக்காட்டுப்பள்ளியே ஆகும்.

    • வேறு எந்த தெய்வத்தைக் காட்டிலும் சிவனை வழிபடுதல் எளியது.
    • சிவ நாமத்தை உச்சாரணம் செய்யும் அந்த கணமே பாபங்கள் எல்லாம் போய்விடும்.

    நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். பஞ்சாட்சர மந்திரத்தைப்பற்றி கூறுங்கால் வித்தைகளில் சுருதியும் அதைவிட ஸ்ரீ ருத்ரமும் அதைவிட பஞ்சாட்சரமும் சிறந்தது என ஆகமங்கள் கூறுகின்றன. இந்த பஞ்சாட்சர மந்திரம் யஜுர் வேத சம்ஹிதையின் இருதயபீடமாக அமைந்து விளங்குகிறது.

    எல்லாப் பாவங்களையும் போக்கவல்ல சிவ என்ற இரண்டெழுத்துக்களைக் கொண்டது இந்த ஐந்தெழுத்து மந்திரம். இம்மந்திரத்தை தேவதையின் சரீரமென்று சொல்வதால் இதில் உள்ள ஒவ்வொரு அட்சரமும் சிவனுடைய ரூபமாகக் கொள்ளலாம். வேறு எந்த தெய்வத்தைக் காட்டிலும் சிவனை வழிபடுதல் எளியது. அவருக்கு பூஜைக்குரிய பொருள்களோ எளிதில் கிடைக்கும்.

    எருக்கம்பூ, தும்பைப்பூ என்ற இலைகளால் பூஜித்தாலும் சாந்தம் அடைகிறார் சிவபெருமான். எவ்வொருவனுக்கு வாக்கு சுத்தம் வேண்டுமோ, எவனொருவனுக்கு மனத்தூய்மை வேண்டுமோ அவர்கள் நமசிவாய என சிவ நாமத்தை சொல்லி எளிதில் அதைப் பெற்று விடலாம்.

    நமச்சிவாய என்று சொல்லக்கூட இக்காலத்தில் மக்களுக்கு முடியாவிட்டால் சிவ சிவ என்று பக்திபூர்வமாகச் சொன்னாலே போதும். இதை சொல்வதற்கு எந்த குறிப்பிட்ட காலவரையும் கிடையாது. சிவ நாமத்தை உச்சாரணம் செய்யும் அந்த கணமே பாபங்கள் எல்லாம் போய்விடும்.

    சிவபெருமானை பற்றி மார்க்கண்டேயர் கூறுகையில், சந்திரனைத் தனது தலையில் அணிந்துள்ள சிவபிரானை உறுதுணையாக கொண்ட என்னை எமன் என்ன செய்வான் என்று குறிப்பிடுகிறார்.

    சிவபெருமானின் அரிய பல செயல்கள் பல உண்டு என்றாலும் ஆலாலம் என்ற கொடிய நஞ்சை தேவர்களை காத்தருள வேண்டுமென்பதற்காக ஈசன் உண்டதுதான் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் இருந்து அவருக்கு நீலகண்டன் என பெயர் வந்தது.

    எனவே எச்சமயத்திலும் நமக்கு அருள்புரிய காத்திருக்கும் சிவபெருமானை பக்தியுடன் தியானம் செய்து வழிபட வேண்டும். அதோடு ஆலயங்களுக்கு நேரில் சென்று அல்லது தரிசனம் செய்தோ அவசியம் வழிபட வேண்டும்.

    நாம சங்கீர்த்தனம் செய்தோ அல்லது துதி செய்தோ வந்தாலும் சகல பாபங்களும் பஸ்பமாக்கப் படுகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வருகிற 8-ந் தேதி சிவராத்திரி தினத்திலாவது மேற்குறிப்பிட்டவைகளில் ஏதேனும் ஒன்றின்மூலம் சிவனை வழிபட்டு நற்கதி அடைவோமாக.

    • ஐப்பசியில் தும்பையினால் அர்ச்சனை செய்யலாம்.
    • ஐப்பசியில் அன்னத்தினால் சிவபூஜை செய்திட நன்மை பெருகும்

    சித்திரை - பலாசம்,

    வைகாசி- புன்னை,

    ஆனி- வெள்ளெருக்கு,

    ஆடி- அரளி,

    ஆவணி- செண்பகம்,

    புரட்டாசி- கொன்றை,

    ஐப்பசி- தும்பை,

    கார்த்திகை- கத்திரி,

    மார்கழி-பட்டி,

    தை-தாமரை,

    மாசி-நீலோத்பலம்,

    பங்குனி- மல்லிகை.

    மாதப் பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்பவன் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடைவான்.

    சித்திரை-மரிக்கொழுந்து, வைகாசி- சந்தனம், ஆனி-முக்கனிகள், ஆடி-பால், ஆவணி- நாட்டுச் சர்க்கரை, புரட்டாசி- அப்பம், ஐப்பசி- அன்னம், கார்த்திகை-தீபவரிசை, மார்கழி- நெய், தை- கருப்பஞ்சாறு, மாசி- நெய்யில் நனைத்த கம்பளம், பங்குனி-கெட்டித் தயிர்.

    • கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
    • தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெருந்தனத்தை அடைவான்.

    கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

    மாதப் பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கலாகாது.

    வில்வத்திற்கு பழைமை தோஷம் கிடையாது.

    முதல் நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் பூஜை செய்யலாம்.

    ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.

    தாமிரப் பாத்திரத்தில் புஷ்பம், சந்தனம் வைக்கக் கூடாது.

    தாமரை, கொன்றை, தும்பை, அத்தி, மல்லிகை, ரோஜா, வில்வம், தர்ப்பை, அருகு, கருஊமத்தை ஏற்றவை.

    தாமரை, வில்வம், சதபத்ரம் ஆகியற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெருந்தனத்தை அடைவான்.

    நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.

    ஊமத்தை விசேஷமாகச் சொல்லப்படுகிறது. ப்ருங்கராஜ பத்திரம் உபயோகிக்கலாம்.

    வெள்ளை நிறப் புஷ்பங்கள் சிலாக்கியமானவை. வில்வம், தாமரை காய்ந்திருந்ததாலும் உபயோகிக்கலாம்.

    தாமரை, பகுளம், சம்பகம், பாடலி, புன்னாகம், மல்லிகை, கரவீரம், கல்காரம் சிரேஷ்டம் என்று சொல்லப்படுகிறது.

    கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் சாரூப பதவியையும், நான்கு மலர்களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர்.

    வில்வ மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் ஸ்வர்ண புஷ்பங்களுக்குச் சமம்.

    இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணத்தால் மகாதேஷங்களும் நீங்கி, சகல சேமங்களும் உண்டாகும்.

    வில்வார்ச்சனை பண்ணும்போது, அதன் பின்பக்க நரம்பு மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டும்.

    அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் செய்கிறார். ஒற்றைப்பட இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு விசேஷம்.

    • நவகிரகங்களை வழிபடும் போது நவகிரக ஸ்தோத்ரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பாகும்.
    • கோவிலை விட்டு வெளிவரும் முன்பு மறுபடியும் சண்டிகேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பு தரும்.

    நவகிரகங்களை வழிபடும் போது நவகிரக ஸ்தோத்ரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பாகும்.

    கோவில் பிரகாரத்தை 3 முறை இடமிருந்து வலமாக சுற்றி வரவும்.

    சுற்றி வந்த பின்பு பிரகார தலத்தில் விழுந்து கும்பிடகூடாது.

    கோவிலில் கொடி கம்பம் இருக்கும் கொடி கம்பத்திற்கு முன்பு தான் விழுந்து கும்பிட வேண்டும்.

    கும்பிடுபவரின் தலை வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.

    உடல் அங்கங்கள் முழுவதும் தரை மீதும் பட வேண்டும்.

    நமஸ்கரித்துவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து வரவேண்டும்.

    கோவிலை விட்டு வெளிவரும் முன்பு மறுபடியும் சண்டிகேஸ்வரரை வணங்கி வருவது சிறப்பு தரும்.

    பிரதட்சணத்தின்போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும்.

    நிலம் அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யக் கூடாது.

    இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் போது பிரட்சண நமஸ்காரங்களைத் தவிர்க்க வேண்டும்.

    ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் நமஸ்கரிக்கக் கூடாது.

    ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும்.

    நல்லெண்ணை ஆரோக்கியத்தை அளிக்கும். தேங்காய் எண்ணை வசீகரத்தை அளிக்கும்.

    இலுப்பெண்ணை சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும். மறுஜென்மத்திலும் நன்மை அளிக்கும்.

    ×