search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivasakthi"

    • கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர்.
    • அதனால்தான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.

    பாற்கடலில் பள்ளிக்கொண்டிருந்த விஷ்ணு, சிவனின் தாருகாவனத்து சிவத்தாண்டவத்தை நினைத்து ஒருநாள் மகிழ்ந்திருந்தார்.

    விஷ்ணுவின் மகிழ்ச்சியை கவனித்த ஆதிசேஷன் என்னவென்று விசாரிக்க, அந்த அற்புதத்தை விஷ்ணு விவரிக்க,

    அதைக்கேட்ட, ஆதிசேஷனுக்கும் அந்த நடனத்தைகாண ஆவல் ஏற்பட்டு, இடுப்புக்கு மேலான உடல் மனிதனாகவும்,

    இடுப்புக்கு கீழான உடல் பாம்பாகவும் மாறி, பதஞ்சலி என்ற பெயர்கொண்டு பூலோகம் வந்து கடும்தவம் செய்தார்.

    தவத்தை மெச்சிய சிவன், பதஞ்சலி உன்னைப் போன்றே வியாக்ரபாதனும் என் ஆடலைக் காண ஆவல் கொண்டுள்ளான்.

    நீங்கள் இருவரும் தில்லைவனம் என்ற சிதம்பரத்திற்கு வாருங்கள் அங்கே உங்கள் ஆவல் நிறைவேறும் என்றுக்கூறி மறைந்தார்.

    மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று வானில் முழு நிலவு பிரகாசிக்கும் நான்னாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் தில்லையில் ஆடிக்காட்டினார்.

    அந்த ஆனந்த நடனத்தினை உலக மக்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்திருவுருவை பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதனும் சிலையாக வடித்தனர்.

    கைலாயத்தில் இருப்பதாலும், கங்கை, சந்திரனை சடாமுடியில் சூடி இருப்பதால் சிவப்பெருமான் குளிர்ச்சி பிரியர்.

    அதனால்தான் அவரை குளிர்விக்க 32 பொருட்களால் அபிசேகம் செய்விப்பர்.

    அடர்பனிக்காலமான மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் மேலும் அவரை குளிர்விக்கும் பொருட்டு அதிகாலையிலேயே எல்லா சிவன்கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.

    • சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர்.
    • அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க.

    சிவன் ஆடிய நடனங்கள் மொத்தமும் 108.

    இதில் அவர் தனியாய் நடனம் புரிந்தது மொத்தமும் 48.

    ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன.

    மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன.

    இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை.

    மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும்.

    ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    இதில் முக்கியமானதுதான் திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆடிய, ஆனந்த தாண்டவ நடனம்.

    இந்த ஆனந்த தாண்டவ தரிசனத்தை காண்பது பெரும் பேறாகும்.

    சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்திநிலையை அடைவர்.

    அதனாலதான், சிதம்பரத்தை தரிசித்தா முக்தின்னு சொல்றாங்க.

    அதுக்காக, கோவிலுக்கு போய் சும்மா நின்னு கும்பிட்டு வரக்கூடாது, உள்ளன்போடு, கிட்டத்தட்ட, நம்மோட ஆன்மாவை பார்வதிதேவியாக்கி இறைவனை வழிப்படனும். அப்பொழுதுதான் முக்தி கிடைக்கும்.

    இந்நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூசி. சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்கனும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையை பார்க்கனும்.

    சுவாமிக்கு திருவாதிரை களியோடு, ஏழு வகை கறிகாய்களை சமைத்து நிவேதானம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கனும்.

    ஆருத்ரா தரிசன நாளன்று பகலில் சாப்பிடக்கூடாது. சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.

    இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

    இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று செய்யலாம்.

    இப்படி ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்கிறது பெரிய புராணம். 

    • ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்கள்.
    • சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள் மஹா உத்ஸவத்தின் உச்சகட்ட நிகழ்வு

    ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான்.

    சிதம்பரத்தின் மஹோத்ஸவங்களில் மிக முக்கியமானதும், மணி மகுடம் போன்றதும் விளங்குவது மார்கழி ஆருத்ரா தரிசனம்.

    கைலாய மலை பனி படர்ந்தது.

    அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உகந்த, பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில்,

    சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள் மஹா உத்ஸவத்தின் உச்சகட்ட நிகழ்வு

    மார்கழி ஆருத்ரா தரிசன தினத்தின் மதியப் பொழுதில் (ஸ்ரீ நடராஜ ராஜர் - பகல் வேளையில் தான் தன் கணங்கள் அனைத்தோடும் வந்திறங்கினார்) சித்ஸபா பிரவேசம் எனும் பொன்னம்பலம் புக்கும் காட்சியே - பெரும் புண்யங்களை அளிக்க வல்லது.

    மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (காலை 6.30-க்கு மேல் 7.15 மணிக்குள்)

    அதை தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து,

    ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி,

    ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - நாதஸ்வர இசை முழங்க, வேத பாராயணம் முழங்கிட

    வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள்.

    ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்கள்.

    • சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
    • சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.

    ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது.

    அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில் தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.

    ஆனால், திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

    திரேதாயுகா அலறித் துடித்து பார்வதி தேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

    அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி, திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள்.

    அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார்.

    இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

    அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசன காட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்.

    இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.

    இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது

    சேந்தனாருக்கும் திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

    ஆருத்ரா தரிசனம் பற்றி தெரிந்து கொள்வோம் சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.

    சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.

    சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.

    • மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
    • பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே?

    பிறப்பே எடுக்காத (ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்குஉரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி?

    தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர்.

    இதுவே ஆருத்ரா எனப்படுகிறது.

    மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

    பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே?

    பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன் என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது.

    சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராண செய்திகள் உள்ளன.

    சேந்தனார் வீட்டுக்கு களியுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது.

    இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

    • சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது.
    • பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.

    சிவன் வடிவில் அம்பாள்; அம்பாள் வடிவில் சிவன்: பிரம்மா, ஒருமுறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார்.

    இதனால் அவருக்கு "ஸ்திரீ தோஷம்" உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார்.

    அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள்.

    சிவன் அவளிடம், பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார்.

    ஆனால், அம்பிகை சிவனிடம், "நான் உங்களது வேடத்தில் வருகிறேன், நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்!" என்றாள்.

    சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறுவேடத்தில் சென்றனர்.

    சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது.

    பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர்.

    இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின்போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி, பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர்.

    பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால், அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

    • சிவமும் சக்தியும் சேர்ந்ததுதான் உலகம் என்பார்கள்.
    • திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதும் பெண்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

    சிவமும் சக்தியும் சேர்ந்ததுதான் உலகம் என்பார்கள்.

    சக்தி தவமிருந்து சிவத்துடன் ஒடுங்கிய நாள் ஆருத்ரா தரிசன நாளாக போற்றப்படுகிறது.

    திருவண்ணாமலையில் மகாதீபமாக சிவன் தோன்றிய நாளில் இருந்து சக்தி, ஜோதியை நோக்கி தவமிருந்து சிவனிடம் இடப்பாகம் பெற்று அவருடன் ஒடுங்கும் நாள்ஆருத்ரா தரிசன நாளாகும்.

    அன்றுதான் உலகில் உயிர்கள் தோன்றி பிரபஞ்சமானது. ஆண், பெண் என உயிரினங்கள் தோன்றி உலகம் செயல்பட தொடங்கியது என்பது ஐதீகம்.

    திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதும் பெண்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

    ஆருத்ரா தரிசனம் வரை இந்த நோன்பை கடைபிடிப்பார்கள்.

    பெண்கள் நோன்பு இருப்பதை தெரிவிக்கும் வகையில் தான் திருவெம்பாவை பாடல்களை மாணிக்கவாசகர்.

    திருப்பள்ளி யெழுச்சி என்றழைக்கப்படும் அந்த பாடல்கள் அடி அண்ணாமலை பகுதியிலிருந்து மாணிக்கவாசகர் இயற்றியவையாகும்.

    அவர் தங்கியிருந்த இடத்தில் தற்போது மாணிக்கவாசகர் கோவில் அமைந்துள்ளது.

    சிவ புராணம் உள்ளிட்ட மனதை உருக்கும் பாடல்களைப் பாடியவர் மாணிக்கவாசகர். அவரை திருவாதவூரார் என்று அழைப்பார்கள்.

    மந்திரியாக இருந்த அவர் சிவனால் ஆட்கொள்ளப்பட்டு குதிரை வாங்க கொடுக்கப்பட்ட பொற்காசுகளை அறந்தாங்கி அருகில் உள்ள திருப்பெருந்துறை கோவில் திருப்பணிக்கு செலவு செய்து விடுகிறார்.

    இதனால் அரச தண்டனைக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டபோது சிவன் நரிகளை பரிகளாக்கி திருவிளையாடல் செய்தார்.

    இந்த உண்மைகள் பின்னர் தெரியவந்ததும் அரசன், மாணிக்க வாசகரை மன்னித்து விடுகிறார்.

    அதன் பின்னர் மாணிக்கவாசகர் சிவ பெருமானின் கோவில்களுக்குச் சென்று அவரை பாடி மகிழ்கிறார்.

    அவைகள் திருவாசமாக தொகுக்கப்பட்டு பக்தர்களால் பாடப்பட்டு வருகின்றன.

    மாணிக்கவாசகர் பாடல்களைச் சொல்ல, அவைகளை சிவன் எழுதியதாக வரலாறு உள்ளது.

    திருவாசகம் படிப்பவர் மனதை உருக்கும் ஆற்றல் பெற்றது.

    எனவே திருவாசகத் திற்கு உருகாதார் ஓரு வாசகத்திற்கும் உருகார் என்ற முதுமொழி ஏற்பட்டது.

    திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசனத்திற்கு முந்திய நாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். முன்னதாக மாணிக்க வாசகர் உற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.

    அப்போது மாணிக்க வாசகர் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

    ஆருத்ரா தரிசன தினத்தன்று நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் முடிவடைந்ததும் மாணிக்கவாசகர் பாடல்கள் ஓதுவார்கள் மூலம் பாடப்படும்.

    நடராஜரின் நடன கோலத்தை மாணிக்கவாசகர் கண்டு மகிழ்ந்த படி வருவார்.

    திருவண்ணா மலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் இந்த காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    அதன் பின்னர் நடராஜர் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாடவீதிகளில் உலா வருவார்.

    அவரை ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து மகிழ்வார்கள்.

    அப்போது பக்தர்கள் புத்தாடைகள் வழங்கியும், அர்ச்சனை செய்தும் வழிபடுவார்கள்.

    திருமஞ்சன கோபுரம் தெற்கு வாசல் வழியாக நடராஜர் ஆனி திருமஞ்சனம் மற்றும் திருவாதிரை நாளில் மட்டுமே அந்த வழியாக வருவார்.

    மற்ற திருவிழா நாட்களில் திட்டி வாசல் வழியாகத்தான் வெளியில் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள்.
    • இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் ஈசன், ஈஸ்வரியை பர்வத மகளாகவும், காளியாகவும், போகும்படி சாபம்

    இட்டத்தையும் இத்திருத்தலத்தில் ஈசனோடு ஆடிய நாட்டிய போட்டியில்தான் தோல்வியுற்றதையும் எண்ணி

    மிகுந்த மனவேதனைப்பட்டு தன் கணவர் என்று பாராமல் பார்வதி உத்தரகோசமங்கை திருத்தலத்தில் "தன்னுடைய

    உருவ விக்கரகத்துக்கு பக்தர்கள் தினந்தோறும் பூ, பழம், தேங்காய், மேளதாளங்கள், இசை, சப்தம், ஒலி, ஒளியுடன்

    வழிபட்டு செல்வார்கள் ஆனால் இத்திருத்தலத்தில் ஈசனுடைய உருவ விக்கிரகத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்

    ஆருத்திர தரிசனம் பக்தர்கள் வழிபட்டு செல்ல வேண்டும்.

    எனவே உத்தரகோசமங்கை திருத்தலத்தில் சக்திக்குத்தான் அதிக சக்தியுண்டு" என்று ஈசனுக்கே ஈஸ்வரி சாபம் விடுத்தாளாம்.

    இந்த சாபத்தினால்தான் ஈசனுடைய உருவச்சிலை மரகத கல்லால் அமைந்துள்ளது என்கிறார்கள்.

    இந்த சிலை ஒலி, ஒளி, சப்தம் தாங்காத தன்மை கொண்டது.

    • உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது.
    • என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    உத்தரகோசமங்கை கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி கோவில் உள்ளது.

    இக்கோவிலின் மத்தியில் இராஜகோபுரம் மிக சிறப்பாக அமைந்துள்ளது. இதைச் சுற்றி அகழியுள்ளது.

    அகழியை சுற்றிலும் தீப்பிழம்பை மலைபோல் வளர்த்துக் கொண்டு ஈசன், ஈஸ்வரி அக்கினி கோளத்தில் யாரும் அறியாமல் மூலஸ்தனத்தின் ரகசிய அறைக்குள் முதல் பெண் பார்வதி தேவிக்கு பரத நாட்டிய கலையையும், அந்தரங்க கலை முழுவதையும் கற்றுக் கொடுத்துள்ளார்.

    மற்றும் தேவ ரகசியத்தை தன்னில் பாதியாகக் கொண்ட பார்வதி தேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசித்த இடமாகும்.

    இந்த அந்தரங்க அறையில் அம்பாள் சிலை உள்ளது. இந்த அறைக்கு யாரும் செல்ல மாட்டார்கள்.

    ஆதியில் அந்தரங்க அறையில் ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடியதற்குத்தான் ஆதி சிதம்பரம் என்ற உத்தரகோசமங்கை என்று வழங்கப்படுகிறது.

    முதலில் அறையில் ஆடிய பிறகுதான் பின்பு அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.

    எனவே இந்த மரகத நடராஜர் சன்னதிக்கு தெற்குபுறமாக வாசல் அமைந்துள்ளது.

    ஈசன் ஈஸ்வரி பரதநாட்டியம் ஆடிய மரப்பலகை ஐந்தை இப்பொழுதும் காணலாம்.

    பரத நாட்டியத்தை முதல் முதலில் உத்திரகோசமங்கையில் ஆடல் அரசன் என்ற தெய்வம் சிவபெருமான் தான் அறிமுகம் செய்தார்.

    முதல் நாளில் சிவனும், பார்வதியும் "ஆனந்த தாண்டவம்" ஆடுகின்றார்கள்.

    இரண்டாவது நாள் "சந்தியா தாண்டவம்". மூன்றாவது நாள் "சம்ஹாரத் தாண்டவம்" ஆடுகின்றார்கள்.

    இந்த மூன்று நாட்களும் நடந்த நாட்டியத்திற்கு சிவபெருமான், பார்வதி ஆகியோரின் நடனம் ஒரே மாதிரியாக இருந்ததால் நடுவர்களால் சரியான தீர்ப்பு கூற முடியவில்லை.

    எனவே திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோரிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

    நான்காவது நாள் ஊர்த்துவதாண்டவம் நடந்தது.

    ஆடவல்லான் நடராஜரின் கால் சதங்கை சப்தம் ரம்மியமாய் ஒலித்தது.

    பார்வதி, நடராஜன் ஆடும் சபையை நோக்கி நடந்தாள். நடராஜனின் அருகே சென்றாள்.

    சுவாமி ஆடல், கலை பெண்களுக்கே உரியது.

    நீர் ஆடி ஆட வல்லான் என்று பெயர் பெறுவது நல்லது அல்ல.

    என்னுடன் போட்டி நடனம் ஆடிப்பாரும் என பார்வதி தேவி சவால் விட்டாள்.

    ஈசனும் போட்டி நடனம் ஆட சம்மதித்தார். ஒருபுறம் பார்வதி, இன்னொருபுறம் சிவபெருமானான, நடராஜன் ஆட்டம் தொடங்கியது.

    இந்த போட்டி நடனத்துக்கு நாரதர் யாழை இசைத்தார்.

    மகா விஷ்ணு மத்தளம் கொட்டினார். நந்திய பெருமான் தாளமிட்டார்.

    பிரம்மா ஜதி சொல்லத் தொடங்கினார். ருத்திரன் நாதசுரம் வாசித்தார். சரஸ்வதி வீணையை மீட்டினாள்.

    வெற்றி யாருக்கு எனப் புரியாத நிலையில் திகைத்து இருந்தார்கள் தேவர்கள்.

    இந்த நாட்டியத்தில் பார்வதி சுழன்றாடினாள்.

    வெற்றி யாருக்கு என்று புரியாத நிலையில் அனைவரும் சிவதாண்டவத்தையும், பார்வதி ஆட்டத்தையும் கண்டு களித்தனர்.

    ஆட்டம் சூடு பிடித்தது. இருவரும் சுழன்று சுழன்று ஆடினர். பார்வதியின் கால் சலங்கை கழன்று கீழே விழுந்தது.

    ஆடலரசன் தன் காதிலிருந்த ஒரு குண்டலத்தை கீழே விழச் செய்தார்.

    பார்வதி கால் சதங்கையை சரி செய்து சிவபெருமானின் செயல்களைக் கூர்ந்து கவனித்தார்.

    சக்கரமாய் ஆடிவந்த சிவபெருமானின் ஒரு காலின் விரல்கள் கீழே கிடந்த குண்டலத்தை மெல்லக் கவ்வியது.

    சிவபெருமான் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று புரியாது பார்வதி ஆடிக்கொண்டே நடப்பதைக் கவனித்தாள்.

    கூடி இருந்தவர்களுக்கு ஈசனின் இந்த செய்கை புரியவில்லை.

    புரியாத குழப்பத்திலேயே ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அடுத்த கணம் நடராஜர் தன் இடது காலை அழுந்த ஊன்றி வலது காலை நாட்டியமண்டபத்துக்கு அருகில் மரங்கள் சூழ்ந்த வனம் பகுதியை நோக்கி தில்லையின் எல்லையை நோக்கி நடந்தார்.

    பின்னர் நடராஜன் தன் வலது காலை தூக்கி இடது காதை தொட்டார்.

    ஆனால் அது போன்று பார்வதிதேவி செய்ய முடியவில்லை.

    தள்ளாடி கீழே விழுந்து மயக்கம் நிலையை அடைந்து தோல்வியுற்றாள்.

    இந்த "தலம்" ஊர்த்துவ தாண்டவம் ஆடி தன்னுடன் போட்டி நடனம் ஆடிய பார்வதியை ஈசன் வென்ற "தலம்" தான் உத்திரகோசமங்கை திருத்தலமாகும்.

    இந்தப் போட்டி நடனத்திற்கு திருமால், பிரம்மன், இந்திரன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து பார்வதி தோல்வியுற்றதாகத் தீர்ப்பு வழங்கிய திருத்தலமாகும்.

    • திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர். அதுவே ஆருத்ரா என மாறியது.
    • பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

    திருவாதிரை நட்சத்திரத்துக்கு ஆர்த்ரா என பெயர்.

    அதுவே ஆருத்ரா என மாறியது.

    அறுபத்து நான்கு நாயன்மார்களில் ஒருவரான சேந்தனார் என்பவர் அரசபதவியிலிருந்து சிவனின் திருவிளையாடலால் ஏழையாகினாலும் தன்னுடைய சிவத்தொண்டான அடியவருக்கு உணவளிக்காமல், தான் உண்பதில்லை என்ற கொள்கையிலிருந்து மாறாமல் இருந்தார்.

    கடும் வறுமையில் வாழ்ந்து வந்தபோது, ஒரு மழைநாளில் சமைக்க ஏதுமில்லாதபோதும், கோலமிட வச்சிருந்த பச்சரிசி மாவில், சிறிதளவு வெல்லம் சேர்த்து களியாய் கிளறி அடியவருக்காக காத்திருந்தனர்.

    இரவுப்பொழுது ஆகியும் யாரும் வராததால் பசியோடு உறங்க சென்றனர்.

    இதனால், சிவனே அடியவர் வேடம் போட்டு சேந்தனார் வீட்டு வாயிலில் நின்று பிச்சை கேட்டார்.

    அவருக்கு களி பரிமாறி பசியாத்தினர் சேந்தனார் தம்பதியினர்.

    களி மிக ருசியாயுள்ளது என சொல்லி நாளைக்கும் வேண்டுமென கூறி மிச்சம் மீதி களியையும் பெற்று சென்றார்.

    மறுநாள் கோவிலில் சென்று இறைவனை காணும்போது, கருவறையில், முதல் நாள் அடியவருக்கு கொடுத்தனுப்பிய களி அங்கு சிதறி இருந்தது.

    அப்படி சேந்தனார், களியமுது படைத்திட்ட நாள் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் நாளாகும்.

    அன்றிலிருந்து, ஆருத்ரா தரிசனம் நாளன்று களி சமைத்து படைப்பது வழக்கமாகிவிட்டது.

    களின்ற வார்த்தைக்கு உணவு பண்டம்ன்னு மட்டும் பொருள் இல்லை.

    களின்னா ஆனந்தம்ன்னும் பொருள் தரும்.

    அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும்.

    சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாக வைத்துதான் திருவாதிரைக்களி நிவேதனம் செய்விக்கப்படுகிறது.

    இந்த ஆருத்ரா தரிசன நாளில்தான், மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை எழுதி முடித்தார்.

    கேரளத்தில் இந்நாளை ஈசன் காமனை எரித்த நாளாக கொண்டாடுகின்றனர்.

    பார்வதிதேவியின் தவத்துக்கு மெச்சி அவளை மணப்பதாக வாக்கு கொடுத்தது இந்நாளில்தான்.

    அதனால்தான், இந்நாளில் விரதமிருந்து ஈசனை வழிபட்டால் சிறந்த கணவன் கிடைக்கும், தாலிபலம் கூடும்.

    பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்வர்.

    • இதே போல் பவுர்ணமியிலிருந்து 13-வது நாளன்றும் வரும். இதையும் திரயோதசி நாள் என்பர்.
    • நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.

    1. பிரதோஷ நாள் அமாவாசையிலிருந்து 13-வது நாளன்று வரும். அதை திரயோகதசி நாள் என்பர்.

    இதே போல் பவுர்ணமியிலிருந்து 13-வது நாளன்றும் வரும். இதையும் திரயோதசி நாள் என்பர்.

    அமாவாசையிலிருந்து 13-வது நாளாக வரும் திரயோதசி திதியை வளர்பிறை பிரதோஷம் என்றும், பவுர்ணமியிலிருந்து 13-வது நாளாக வரும் திரயோதசி திதியை "தேய் பிறை பிரதோஷம்" என்றும் அழைப்பர்.

    2. பிரதோஷ நாளன்று உடல் சுத்தம் செய்து கொண்டு ஆலயத்தில் பிரவேசிக்க வேண்டும்.

    முதலில் ரிஷப தேவருக்கு நெய் தீபம் போட்டு அருகம்புல் கொடுத்து வாலைத்தொட்டு வணங்க வேண்டும்.

    பிறகுதான் கணபதியை வணங்க வேண்டும்.

    நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.

    ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மனதால் லிங்கத்தை தியானிக்கலாம்.

    தியானித்து விட்டு அப்பிரதட்சனமாக (வலம் கை ஓரமாக) சண்டகேஸ்வரர் சந்நிதி வரை சென்று சண்டகேஸ்வரரை வணங்கி விட்டு, அப்படியே திரும்பி வந்து முன்பு போல நந்தீஸ்வரர் பின்பு நின்று லிங்கத்தை தியானித்துக் கொண்டு, வழக்கம் போல இடமிருந்து வலமாக பிரதட்சனமாக வர வேண்டும்.

    பிரகாரத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நீர் வருவதற்கு ஒரு தொட்டி அமைந்து இருக்கும். அதை கோமுகி நீர் தொட்டி என்பர். அந்த தொட்டி வரை வரவும்.

    அந்த தொட்டியை கடக்க கூடாது. அப்படியே வந்த வழியே செல்லவும்.

    நந்தியையும், லிங்கத்தையும் தியானிக்கவும். மறுபடியும் அப்பிரதட்சணமாக சென்று சண்டகேஸ்வரரை வணங்கவும்.

    வணங்கிவிட்டு வந்த வழியே வந்து கோமுகி நீர் தொட்டி வரை வரவும்.

    அந்த வழியே திரும்பவும். இவ்வாறு மூன்று முறைகள் செய்து சிவனை வணங்க வேண்டும்.

    இவ்வாறு பிரதோஷ நாளன்று சிவனை வணங்க பாபம் நீங்கி "அஸ்வமேதயாகம்" செய்த பலன் கிடைக்கும்.

    3. பிரதோச நாளன்று நந்தி தேவருக்கு சிவப்பு அரிசியில் வெல்லம் சேர்த்து நைவேத்யம் செய்யலாம்.

    4.பிரதோஷ நாளன்று உபவாசம் இருப்பவர்கள் ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும்.

    5.ஒவ்வொரு மாலை வேளையான 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் தினப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகின்றது. இதில் ஈசனை தரிசனம் செய்ய பாவம் விலகும்.

    6.பிரதோஷ வேளை 4.30 மணிக்கும்மேல் 7 மணிக்குள்.

    7. பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் ஒரு வருடம் ஆலயத்திற்கு சென்று வந்த பலனை பெறுவார்கள்.

    8. சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிக விசேஷமானது. அன்று சனி பகவானின் தோஷத்துக்கு ஆளானவர்கள் ஈசனை வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள்.

    சனி பிரதோஷம் அன்று வழிபட்டவர்கள் ஐந்து வருட காலம் கோவிலுக்கு சென்று வந்த பாக்கியத்தை பெறுவார்கள்.

    9. பிரதோஷ நாளன்று ஈசனுக்கு பால் அபிஷேகத்திற்கு பால் தானம் செய்ய சகல பாவங்களையும் போக்கி கொள்ளலாம்.

    10. பிரதோஷ நாளன்று ரிஷப வாகனத்தில் ஈஸ்வரர் எழுந்தருளி பிரகாரத்தை மும்முறை வலம் வருவார். அப்பொழுது நாமும் அவர் பின்னால் வலம் வர முக்தி கிடைக்கும்.

    ஏனெனில் ஈஸ்வரர் பிரகாரத்தை ஒரு சுற்று வரும்போது வேத பாராயணம் ஓதப்படுகின்றது.

    இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணம் ஓதப்படுகின்றது. மூன்றாவது சுற்றில் நாதங்கள் முழங்கப்படுகின்றன.

    • ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
    • பிரதோஷ நாளில் “சோமசூக்த பிரதட்சன” முறையை கையாள வேண்டும்.

    ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.

    ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.

    பிரதோஷ நாளில் "சோமசூக்த பிரதட்சன" முறையை கையாள வேண்டும்.

    சோமசூக்த பிரதட்சணம் என்றால் என்ன?

    ஆலால விசமானது தேவர்களை துரத்தியது. தேவர்கள் ஈசனை வலமாக ஓடி வந்தனர்.

    ஆலால விசம் இடமாக வந்து எதிர்த்தது. விசம் எதிர்ப்பதை கண்டு தேவர்கள் அப்படியே திரும்பி இடமாக வந்தனர்.

    ஆலாலம் வலமாக வந்து எதிர்த்தது. ஆக ஆலாலம் முன்னும், பின்னும் தேவர்களை எதிர்த்ததால் பிதோஷ நாளன்று ஈஸ்வரனை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தரிசனம் செய்ய வேண்டும்.

    இந்த முறையே "சோம சூக்த பிரதட்சணம்".

    ×