search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saravanapoigai"

    • கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.
    • விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

    கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி

    ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.

    சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார்

    அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய் ஆறுமுகக் குழந்தையாய்

    தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது.

    அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.

    சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி உங்களுக்கு மங்களம் உண்டாகுக உங்களால் வளர்க்கப்பட்ட

    இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம்.

    உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு

    அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக என்று திருவாய் மலர்ந்தருளினார்.

    இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும்,                                                               அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.

    வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகின்றனர்.

    அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்த்துவது போலாகும்.

    பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.

    எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று அனந்தனைப் பணிந்து கேட்டான்.

    திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில் 'கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார்.

    ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடனும் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார்

    என்றும், அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி

    விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது.

    இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம்,

    பழனி, திருச்செந்தூர் முதலிய கோவில்களில் திருவண்ணாமலைக் கோவிலைப் போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

    சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள். வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள்.

    • கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை கரைப்பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
    • இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் முதல் படை வீடாக போற்றப்ப டும் திருப்பரங்குன்றம் சுப் பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை பகுதியில் அமாவாசை மற்றும் முக்கிய நாட்களில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பது மற்றும் சிறப்பு யாக வேள்வி நடத்துவது வழக்கம். அமாவாசை தோறும் இங்கு திருப்பரங்குன்றம் மட்டுமல்லாது மதுரை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

    ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் ஏராளமா னோர் தங்களது மூதாதை யரின் நினைவாக தர்ப்ப ணம் கொடுத்து சரவணப் பொய்கையில் புனித நீராடி வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கடும் வெயில் மற்றும் மழையில் அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

    இது குறித்து பக்தர்கள் கோரிக்கையின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் சரவணப் பொய்கை கரைப் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இதன் காரணமாக மழை மற்றும் வெயில் காலங்களில் பக்தர்கள் தங்களது முன் னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை யும், சிறப்பு யாக கேள்விக ளையும் தடையின்றி செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ×