search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி பாலியல் வன்கொடுமை"

    • இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேரும் சிறையில் இருந்து போலீஸ் வேன் மூலம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
    • நீதிபதி எம்.ராஜலட்சுமி திடீரென விடுப்பு எடுத்ததன் காரணமாக நேற்று அவர் கோர்ட்டுக்கு வரவில்லை.

    சென்னை:

    சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அவரது உறவினர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் தாயார் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர்கள், சிறுமியை சீரழித்த எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரன் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டு, இன்ஸ்பெக்டர் புகழேந்தி உள்பட 21 பேரும் குற்றவாளிகள் என கடந்த 15-ந் தேதி அறிவித்தது.

    மேலும் இவர்களுக்கான தண்டனை விவரம் 19-ந் தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக நேற்று அந்த வழக்கு நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் பட்டியலிடப்பட்டது.

    இதற்காக இன்ஸ்பெக்டர் உள்பட 21 பேரும் சிறையில் இருந்து போலீஸ் வேன் மூலம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    ஆனால் நீதிபதி எம்.ராஜலட்சுமி திடீரென விடுப்பு எடுத்ததன் காரணமாக நேற்று அவர் கோர்ட்டுக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் குற்றவாளிகள் 21 பேருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

    சென்னை அயனாவரத்தில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 17 பேரையும் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் சரமாரியாக தாக்கினர். #SaveGirlChildren
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமி, அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஊழியர்கள், காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என பலரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். 

    ஏழு மாத காலமாக நீடித்த இந்த கொடுமை சமீபத்தில் தெரியவந்ததும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அயனாவரம் போலீசார் மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தி 17 பேரை கைது செய்தனர். 

    அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்று சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் வரும் 31-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். 

    கோர்ட் வளாகத்தில் இருந்து அவர்கள் 17 பேரையும் போலீசார் அழைத்து வரும் போது, ஆத்திரமடைந்த பல வழக்கறிஞர்கள் அவர்களை கடுமையாக தாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
    ×