என் மலர்tooltip icon

    இந்தியா

    பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. தாத்தா கைது
    X

    பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. தாத்தா கைது

    • சாலையோரத்தில் பாட்டியுடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.
    • கால்வாயில் சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று அதிகாலை,மேற்கு வங்கத்தின் தாராகேஷ்வரர் ரெயில் நிலையத்தின் அருகே சாலையோரத்தில் கொசு வலைக்குள் பாட்டியுடன் சிறுமி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் வலையை அறுத்து சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

    சிறிது நேரம் கழித்து அருகில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என அருகிலிருந்தவர்கள் தேடியுள்ளனர். அப்போது அருகேயிருந்த வாய்க்காலில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது.

    அங்கு சென்று பார்த்தபோது சிறுமி ஆடைகளின்றி நிர்வாண நிலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்துள்ளார். சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்தது.

    சிறுமியின் கன்னத்தில் கடித்த காயங்கள் காணப்பட்டது. ரத்தப் போக்கு தொடர்ந்த நிலையில் சிறுமி மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    போக்ஸோ வழக்குப்பதிந்த போலீசார் குற்றவாளியை தேடி வந்த நிலையில் சிறுமியின் தாத்தாவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×