search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஎஸ்இ"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2022-2023-ம் கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் அமலானது.
    • இந்த வருடம் (2023-2024) 9-ம் வகுப்பு வரையிலும் 2024-25-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது.

    சென்னை:

    சி.பி.எஸ்.சி. உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.

    தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துறை இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் அமலில் உள்ளது. இதன்படி 2015-16-ம் ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1-ம் வகுப்பில் தமிழ் கட்டாய பாடமானது. அதற்கு அடுத்த ஆண்டில் (2016-2017) 2-ம் வகுப்புக்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2017-2018) 3-ம் வகுப்புக்கும் என ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்பாக தமிழ் படிப்பு படிப்படியாக அமலானது.

    கடந்த 2022-2023-ம் கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் அமலானது. இந்த வருடம் (2023-2024) 9-ம் வகுப்பு வரையிலும் 2024-25-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு வரையிலும் தமிழ் கட்டாயமாகிறது.

    மாநில பாடத்திட்ட பள்ளிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் செயல்படும் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 2024-25-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.

    இந்த மாணவர்கள் பொது தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக எழுத வேண்டியது கட்டாயம். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும்.

    அதற்கேற்ப அனைத்து தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத்தர வேண்டும்.

    தமிழ் கட்டாய பாடமுறை குறித்த அறிவிப்பை தனியார் பள்ளிகள் கடைப்பிடிப்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.
    • 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்தில் உள்ளது.

    சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தற்போது சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும்,

    99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3வது இடத்திலும் உள்ளது.

    • 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி நடைபெற்றது.
    • அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நாடுமுழுவதும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தொடங்கி நடைபெற்றது.

    இந்நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. cbse.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மண்டலத்தில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 97.40 சதவீதமாக உள்ளது.

    அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.
    • இந்த தகவல் தேர்வு முடிவுக்காக காத்திருப்போர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    சிபிஎஸ்இ மாணவர்கலுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் நாளை (மே 11) வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.

     

    இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியானதை அடுத்து சிபிஎஸ்இ சார்பில் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 11 ஆம் தேதி வெளியாகும் என்று கூறி வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையும் போலியானது என்று தெரிவித்துள்ளது.

    சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து வெளியான போலி தகவல் காரணமாக தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    • எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    5 ஆண்டு கட்டமைப்பு என்ற பெயரில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    புதிய பாடத்திட்டத்தின்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளின் கல்வியை சிறுவயதில் இருந்தே மேம்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்கள் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    • ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மாா்ச் 31-ல் வகுப்புகளை நிறைவு செய்யவேண்டும்.
    • ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் புதிய கல்வியாண்டு வகுப்பை தொடங்கக்கூடாது என சிபிஎஸ்இ அறிவுறுத்தியது.

    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சில பள்ளிகள் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. குறிப்பிட்ட கால வரையறைக்குள்ளாக ஒட்டுமொத்த பாடங்களையும் நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளிகள் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள், அதிக சுமை மற்றும் மனச்சோா்வு போன்ற பாதிப்புகளை மாணவா்கள் சந்திக்கும் நிலையை உருவாக்கும். அதோடு, வாழ்க்கைத் திறன், நன்னெறி கல்வி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, பணித்திறன் மேம்பாட்டு கல்வி, சமூக சேவை போன்ற பாடம் சாராத நடவடிக்கைகளில் மாணவா்கள் ஈடுபட முடியாத நிலையும், அதற்கு போதிய அவகாசம் கிடைக்காத நிலையும் உருவாகும்.

    இந்த பாடம் சாராத நடவடிக்கைகளும் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமானவையாகும். எனவே, வகுப்புகளை முன்கூட்டியே தொடங்குவதை பள்ளி முதல்வா்கள் தவிா்க்க வேண்டும். வகுப்புகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி மாா்ச் 31-ல் நிறைவு செய்யவேண்டும் என்ற நடைமுறையை அனைத்துப் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என தெரிவித்துள்ளது.

    • செய்திகள் பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
    • தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசாரிடம் சி.பி.எஸ்.இ. புகார் அளித்திருக்கிறது.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதியுடன் தேர்வு நிறைவு பெற உள்ளது. இதில் நேற்று நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

    இதையடுத்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம், 'இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வாரியத்தேர்வுகளை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கு இடையூறு விளைவிக்கும் எந்த செயல்களிலும் ஈடுபட வேண்டாம்' என்றும் மாணவர்கள், பெற்றோருக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் கூறும்போது, 'யூ-டியூப், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிந்துவிட்டதாகவும், வினாத்தாள்கள் தேவைப்படுபவர்கள் அணுகுவது தொடர்பாக தவறானத்தகவல்களை தொடர்ந்து வதந்திகளை பரப்பி வருவது சி.பி.எஸ்.இ. கவனத்துக்கு வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர்களின் குழுக்கள் மற்றும் ஏஜென்சிகள் மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து இதன் மூலம் பணத்தை பெற்று ஏமாற்ற நினைக்கின்றனர். இது மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற செய்திகள் பரப்புபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது' என்றனர்.

    மேலும் இந்த செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது இந்திய அரசியலமைப்பு சட்டம் (ஐ.பி.சி.) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசாரிடம் சி.பி.எஸ்.இ. புகார் அளித்திருக்கிறது.

    • சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர்.
    • இந்த இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம்.

    புதுடெல்லி :

    சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உஷாராக இருக்குமாறு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல https://cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர். சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் செய்யுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு செய்திகளை அனுப்பி அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன' என கூறியுள்ளது.

    இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், மேற்படி இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள சி.பி.எஸ்.இ., ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.

    • தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது.
    • சில பள்ளிகள் 29, 30-ந்தேதி முதல் விடுமுறை அளித்தன.

    சென்னை:

    தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்து வரும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த 30-ந்தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. வருகிற 10-ந்தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படுகின்றன. மத்திய கல்வி வாரியத்தில் படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    சில பள்ளிகள் 29, 30-ந்தேதி முதல் விடுமுறை அளித்தன. ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) வகுப்புகள் தொடங்கி உள்ளன.

    • கேரளாவில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் அதிகரித்து வரும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க கேரள அரசும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாலியல் குற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வே இக்குற்றங்களை குறைக்க உதவும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பள்ளி மாணவிகள், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    குறிப்பாக 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் கர்ப்பம் தரிப்பதும், அதனை வெளியில் கூறாமல் மறைப்பதும், பின்னர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்ற பின்னரே இதுபற்றிய தகவல் வெளியே தெரிவதுமான சம்பவங்களும் நடந்தது.

    இதில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். இது தொடர்பான ஒரு வழக்கில் குற்றவாளி ஒருவர் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, கேரள அரசுக்கும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்திற்கும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்விபரம் வருமாறு:-

    கேரளாவில் சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் அதிகரித்து வரும் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க கேரள அரசும், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைகளை அறிந்து கொள்ளவும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இதனை அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டும்.

    இதற்கான பாடதிட்டங்களை மாணவிகளின் வயதுக்கு ஏற்ற வகையில் தயாரிக்க வேண்டும். இதற்காக நிபுணர் குழு ஒன்றை 2 மாதங்களில் உருவாக்க வேண்டும்.

    பாலியல் குற்றங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வே இக்குற்றங்களை குறைக்க உதவும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

    • ப்ளஸ் 2 தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி.
    • இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

    நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில், 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    www.cbse.results.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு விரைவாக வெளியிடப்பட்டுள்ளது.
    • கல்லூரிகளில் சேர முடியாமல் இருந்து வந்த மாணவ-மாணவிகள் இன்று விண்ணப்பிக்கத் தொடங்கினர்.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தொடங்கி ஜூன் மாதம் 15-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் முடிவுக்காக காத்து இருந்தனர்.

    ஆனால் தேர்வு முடிவு வெளியாவது தாமதம் ஆனது. இதனால் மாணவ-மாணவிகள் பலர் கல்லூரியில் சேருவதில் சிரமம் ஏற்பட்டது.

    பொறியியல் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் இருந்ததால் தங்களுக்கு இடங்கள் கிடைக்குமா? என்ற பதட்டத்தில் இருந்தனர்.

    ஆனால் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு வரும் வரையில் மாணவர் சேர்க்கையை முடிக்கக்கூடாது என அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக்குழு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின. www.cbse.nic.in, cbse.gov.in, DigiLocker ஆகிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.

    இந்த தேர்வில் 92.71 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 91.25 சதவீதமும், மாணவிகள் 93 சதவீதமும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முடிவுகளை இணையதளத்திலும், பள்ளியிலும் நேரில் சென்று முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

    சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென வெளியானதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும் உற்சாகம் அடைந்தனர்.

    கல்லூரிகளில் சேர முடியாமல் இருந்து வந்த மாணவ-மாணவிகள் இன்று விண்ணப்பிக்கத் தொடங்கினர். ஆன்லைன் வழியாக பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தனர்.

    தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து உயர் கல்வியில் சேருவதற்கான அவகாசம் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27-ந்தேதி வரை பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் பதட்டம் அடைய தேவையில்லை என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    `உயர்கல்வியில் சேர முடியாத நிலைமையை எடுத்துக் கூறியதை தொடர்ந்து முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

    பிளஸ்-2 முடிவை தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று பிற்பகல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×