search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் கடத்தல்"

    • அனுமந்தை டோல்கட்டில் அரசு பஸ்சில் ஏறி போலீசார் சோதனை செய்தனர்.
    • புதுவையில் இருந்து 15 பாக்கெட் கொண்ட பாக்கெட் சாராயத்தை கடத்தி வந்து உள்ளார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் , அனுமந்தை டோல்கட்டில் அரசு பஸ்சில் ஏறி போலீசார்சாசோதனை செய்தனர். அப்போது சாராயம் கடத்தி வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் ஆண்டாள் குப்பம் சித்தூரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) என தெரியவந்தது. இவர் இவர் புதுவையில் இருந்து 15 பாக்கெட் கொண்ட பாக்கெட் சாராயத்தை கடத்தி வந்து உள்ளார். இவரை போலீசார் கைது செய்தனர்.

    • போலீசார் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சேராப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 பேரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் 2 பேரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கல்வராயன்மலை பெருமாநத்தம் பகுதியை சேர்ந்த அருண் (20), வரதராஜ் (26) என்பதும், கல்வராயன்மலை பகுதியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பர்வதம் என்பவரை தேடி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே லாரி டியூப்பில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 500 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலு க்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கி ள்களையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் புதுப்பட்டு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் மூட்டைகளுடன் வந்த 4 வாலிபர்களை போலீசார் வழிமறித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளுடன் மூட்டைகளை போட்டு விட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே அவர்களை விடாமல் போலீசார் துரத்தி சென்றனர். இதில் 2 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சேராப்பட்டு ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த செல்வமணி (வயது 21), விக்னேஷ் (18) என்பதும் தப்பி ஒடியவர்கள் சேராப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த கார்த்திக்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பதும் தெரிய வந்தது. இவர்கள் சேராப்பட்டு பகுதியில் இருந்து லாரி டியூப்களில் சாராயத்தை ஊற்றி பின்னர் அவற்றை சாக்குபையில் மூட்டையாக கட்டி கடத்தி வந்ததுள்ளனர். இதையடுத்து செல்வமணி, விக்னேசை கைது செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட 500 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலு க்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஏழுமலை, கார்த்திக் 2 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் தலைமையில் புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவைப் பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் புதுவையில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையில் கொறத்தி கிராமத்தைச் சேர்ந்தநடராஜன், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் , ஆகியோர் என தெரியவந்தது.இவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 120 பாக்கெட் சாராயங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இரு சக்கர வாகனத்தில் 60 லிட்டர் சாராயம் டியூப்பில் எடுத்து வந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயபாளையம் தனி பிரிவு போலீசார் சின்னசேலம் அருகே மாத்தூரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாத்தூரில் இருந்து பால்ராம் பட்டு ரோடு செல்லும் வழியில் ஏழுமலை என்பவர் இரு சக்கர வாகனத்தில் 60 லிட்டர் சாராயம் டியூப்பில் எடுத்து வந்துள்ளார். அவரை போலீசார் மடக்கி பிடிதது கைது செய்தனர். அதோடு இருசக்கர வாகனத்தையும் 60 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.

    • கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் வானூர் அருகே தைலாபுரம் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளை சோதனை செய்ததில் 100 பாக்கெட்டுகளில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விழுப்புரம்: 

    புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மோட்டார் சைக்கிள், கார்களில் சாராயம் கடத்தப்படுவதாக கிளியனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் வானூர் அருகே தைலாபுரம் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை அங்கேேய போட்டுவிட்டு தலைமறைவானார். உஷாரான போலீசார் உடனே அந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் 100 பாக்கெட்டுகளில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தும் புதுவை மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் யார்? இந்த கடத்தலுக்கு துணையாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விழுப்புரம் அருகே புதுவையில் இருந்து சாராயம் கடத்திய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்தி லிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வழியாகபல்வேறு பகுதிகளுக்கு சாராயம் மற்றும் மது பாட்டில்கள் திருட்டுத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இதனைதடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இதற்குதனிப்படை அமை த்து தீவிர வாகன சோதனை செய்து வருகிறார். இந்நிலையில் புதுவை யில் இருந்து காரில் மது பாட்டில் கடத்துவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு வந்த தகவலின் பெயரில் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனை செய்ய உத்தரவிட்டார்.

    அதனபடி கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் வேல்மணி மற்றும் தலைமை காவலர் பிரபுதாஸ் சுதாகர் மற்றும் போலீசார் கிளியனூர் அருகே கொஞ்சிமங்கலம் பகுதியில் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் 700 சாராய பாக்கெட்டுகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் இந்த சாராய பாக்கெட்டுகளை கடத்தி வந்த சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 22) சூர்யா (23) ரங்கநாதபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (23) இந்த மூவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கல்வராயன் மலை அடிவாரம் அம்மாபேட்டை கிராமம் தண்ணீர் டேங் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • வாலிபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கல்வராயன் மலை அடிவாரம் அம்மாபேட்டை கிராமம் தண்ணீர் டேங் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்தார். வாலிபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். உடனே போலீசார் அந்த மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதில் 60 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகிறார்கள்.

    • கடலூரில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பாலித்தீன் பைகளில் 60 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் கம்மியம்பேட்டை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் அதில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் தூக்கணா ம்பாக்கத்தை சேர்ந்த திருகுமரன் (வயது 24) என்பதும், தப்பி ஓடியது புதுச்சேரி மாநிலம் குருவிநத்தத்தை சேர்ந்த தவமுருகன் என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பாலித்தீன் பைகளில் 60 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரி யவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து திருகுமரனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தவமுருகனை தேடி வருகின்றனர்.

    ×