என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராயம் கடத்திய வாலிபரையும், மடக்கிபிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.
கடலூரில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் கைது
- கடலூரில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பாலித்தீன் பைகளில் 60 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் கம்மியம்பேட்டை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் அதில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் தூக்கணா ம்பாக்கத்தை சேர்ந்த திருகுமரன் (வயது 24) என்பதும், தப்பி ஓடியது புதுச்சேரி மாநிலம் குருவிநத்தத்தை சேர்ந்த தவமுருகன் என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பாலித்தீன் பைகளில் 60 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரி யவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து திருகுமரனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தவமுருகனை தேடி வருகின்றனர்.






