search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனிப்பெயர்ச்சி விழா"

    • 700 ஆண்டுகள் பழமையானது அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்.
    • திருமண கோலத்தில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கடலோரப் பகுதி, சேதுபாவாசத்திரம். இந்த ஊரின் அருகே உள்ள விளங்குளம் என்ற இடத்தில் 700 ஆண்டுகள் பழமையான அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில், மாந்தா - ஜேஸ்டா ஆகிய இரண்டு மனைவிகளுடன் திருமண கோலத்தில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

     சூரிய பகவானின் மகன்களான சனீஸ்வரருக்கும், எமதர்மராஜனுக்கும் சிறு வயதில் பகை இருந்தது. அதனால் சனியின் காலில் எமதர்மராஜன் அடிக்க, சனியின் காலில் ஊனம் ஏற்பட்டது. அந்தக் கால் ஊனத்துடன் மன அமைதி தேடி, பூலோகத்தில் அமைந்த புனிதத் தலங்களை தரிசித்து வந்தார், சனி பகவான். சுரைக்காய் குடுவையை ஏந்தி பிச்சை பெற்று, அதில் கிடைக்கும் தானியங்களை சமைத்து அன்னதானமாக அளித்து வந்தார்.

    ஒரு நாள் விளாமரங்கள் அடர்ந்த இந்த பகுதிக்கு வந்தார், சனி பகவான். அப்போது ஓரிடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே பல கோடி யுகங்களாக மறைந்திருந்த `பூச ஞான வாவி' என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேல் எழுப்பி கரை சேர்த்தது. இது நடந்தது சித்திரை மாத வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனிக்கிழமையும் சேர்ந்த ஒரு தினமாகும். இதனால் சனி பகவானின் ஊனம் நிவர்த்தியானதாக தலவரலாறு சொல்கிறது.

    சனி பகவான் விழுந்த பள்ளத்தில் நீரூற்றாக வெளிப்பட்ட ஞான வாவி, குளமாக மாறியதால், இந்த கிராமம் 'விளம்குளம்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதுவே மருவி `விளங்குளம்' என்றானது. ஊனம் நீக்குதல், திருமணத்தடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்தக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    அதுமட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை திருநாளில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. சனிப் பெயர்ச்சி அன்றும் இங்கே விசேஷ பூஜைகள் செய்யப்படும்.

    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
    • விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று (புதன்கிழமை) மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு (கடந்த சனிப்பெயர்ச்சி 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.) சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்தநிலையில், விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கான குடிநீர், கழிவறை, அன்னதானம், இலவச பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு, தரிசனத்திற்கான ஆன்லைன் மற்றும் கட்டண டிக்கெட், இலவச தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

    குறிப்பாக, நளன் குளம் வாயிலிலிருந்து இலவச தரிசனம் வரிசை தொடங்குகிறது. வி.ஐ.பி. தரிசனம், யானை மண்டபம் வழியாகவும், 1,000 ரூபாய் டிக்கெட் கோவில் ராஜகோபுரம் வழியாகவும், 600 டிக்கெட் தெற்கு வீதி வழியாகவும், 300 டிக்கெட் மேற்கு வீதி மற்றும் நளன் குளம் எதிர் வாயில் வழியாகவும் செல்கிறது. கோவிலைச்சுற்றி ஆன்லைன் மற்றும் கட்டண தரிசனம் டிக்கெட் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டில், புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடும் வருவது போல் ஏற்பாடு செய்யப்படுள்ளது. வழி தவறினாலும், கியூ ஆர் கோடு மூலம் உரிய இடத்திற்கு சென்று சேரலாம்.

    வாகன நிறுத்துமிடத்திலிருந்து பக்தர்களை இலவச பஸ் மூலம் கோவிலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக 26 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. பஸ் நிறுத்தம் இடத்திலும் 120-க்கு மேற்பட்ட நகரும் கழிவறை வசதிகளும், 212-க்கு மேற்பட்ட நிரந்தர கழிவறை வசதிகள் உள்ளது. பக்தர்கள் வரிசையாக செல்லும் இடத்தில் தண்ணீர், பிஸ்கட், அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முக்கியமாக, இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணிவரை என 24 மணிநேரமும் கோவில் நடை மூடாமல் விடிய, விடிய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 162 கண்காணிப்பு கேமராக்கள், மெகா எல்.இ.டி. டிவி வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    புதுச்சேரியிலிருந்து 1500 போலீசாரும், உள்ளூர் போலீசார் சுமார் 300 பேரும், இதுதவிர அப்த மித்ரா, தன்னார்வலர்களும் என சுமார் 2000 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். பக்தர்களின் அவசர மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், விநாயாக மிஷன் மற்றும் மீனாட்சி மிஷன் தனியார் மருத்துவமனை குழு ஏற்பாடு செய்துள்ளோம்.

    அதேபோல், இவர்கள் நளன் குளத்தில் குளிக்க, சிறப்பு ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சனிபெயர்ச்சிக்கு வருகை தந்து, மிக எளிமையாக தரிசனம் செய்து செல்லலாம்.

    • சனிப்பெயர்ச்சி விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கிழக்கு நோக்கிய முகமாக தனி சன்னதி கொண்டு சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

    2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இந்தாண்டு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் ரூ.1,000, ரூ.600 மற்றும் ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500, சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300, சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு ரூ.300 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருநள்ளாறுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் காரைக்கால் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், சந்தைதிடல், பஜன்கோ வேளாண் கல்லூரி, செல்லூர் வி.ஐ.பி. நகர், அத்திப்படுகை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இ-ஆட்டோ சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருநள்ளாறுக்கு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு புதுவை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து செல்லும் வகையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 1,400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

    மேலும் பக்தர்கள் புனித நீராடும் நளன் குளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோவில் வளாகம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன.

    சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக நாளை மறுநாள் (புதன்கிழமை) முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் 20ம் தேதி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. அப்போது சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    இந்நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காரைக்காலில் வரும் 20-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி, கல்லூரி உள்பட அனைத்து அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • சனீஸ்வரபகவானுக்கு சனி பெயர்ச்சி விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் சனீஸ்வர பகவானுக்கு என்று ஒரு தனி சன்னதி உள்ளது.

    அங்கு அமைந்துள்ள சனீஸ்வர பகவானுக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று மதியம் 1.06 நிமிடத்திற்கு சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து மூலவருக்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    இதில் பவானி, குமாரபாளையம், லட்சுமி நகர், காலிங்கராயன் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறிய நிலையில் வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று மதியம் 1.06 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி இடம் பெயர்ந்ததை தொடர்ந்து பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு இந்த சனி பெயர்ச்சி விழா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். 

    ×