search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தையில்"

    • பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு
    • நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பகுதியில் செயல்பட்டு வரும் கனகமூலம் சந்தை பழமை வாய்ந்த சந்தையாகும். இந்த சந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு புதிதாக 250-க்கு மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது.

    தற்போது சந்தையில் உள்ள 125-க்கும் மேற்பட்ட கடைகளில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். 120-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாகவே இருந்து வருகிறது. டெபாசிட் உயர்வு மற்றும் வாடகை அதிகமாக உள்ளதால் கடைகள் முழுமையாக செல்ல வில்லை என்று வியாபாரி கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. காலியாக கிடக்கும் கடைகளை மாநகராட்சி சார்பில் ஏலம் இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ஆனால் பலமுறை நடவடிக்கை மேற்கொண்டும் ஏலம் செல்லவில்லை. இந்த நிலையில் வடசேரியில் ரூ.55 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் மூன்று மாடியில் வணிக வளாகமும் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து வடசேரி கனகமூலம் சந்தை பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் வடசேரி கனகமூலம் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். மாநகராட்சி சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுவதால் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மாநகராட்சி மேயர் மகேசை சந்தித்து கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு பஸ் நிலையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ததால் தற்போது எதுவும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் வியா பாரிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து வடசேரி அண்ணா சிலையையொட்டியுள்ள சந்தையின் ஓரத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    பந்தல் போடப்பட்ட நிலையில் போலீசார் உண்ணா விரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பந்தல் அமைக்க கூடாது என்று தெரிவித்தனர். இதையடுத்து போடப்பட்ட பந்தல் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வியாபாரிகள் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மொத்த சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சந்திரன், குமரி கனகமூலம் சந்தை வியாபாரிகள் சங்கத் தின் தலைவர் கண்ணன், குமரி மாவட்ட வணிகர் சங்கத்தின் தலைவர் நாகராஜன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கி னர்.

    ஆர்ப்பாட்டத்தில் காய்கறி வியாபாரிகள் ஏராள மானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்தை மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அனைவரும் சந்தையில் உள்புறத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வடசேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
    • உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று ஆவணி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 1013 விவசாயிகள், பல்வேறு வகையான 4924 காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 247.293 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 55,282 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.69, 11, 292 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
    • ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தபோது நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது.

    இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    பள்ளிகள் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடை களுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் மொத்த விற்பனை 25 சதவீதம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    ×