search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையன்"

    • திண்டிவனம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • டீக்கடை ஒன்றில் சந்தேகப்படும்படியான நபர் நீண்ட நேரமாக நின்றார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலை, மன்னார் சாமி கோவில் அருகே பிரம்மதேச போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த டீக்கடை ஒன்றில் சந்தேகப்படும்படியான நபர் நீண்ட நேரமாக நின்றார். அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதனையடுத்து அந்த நபரை பிரம்மதேசம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சென்னை அசோக் நகரை சேர்ந்த வெங்கடேசன் என்கின்ற கலச வெங்கடேசன்(36), என்பதும் இவர் திண்டிவனம் உட்கோட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து பல ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் மரக்காணம் சாலை அண்ணா நகர், மயிலம், கூட்டேரிப்பட்டு, வெள்ளிமேடு பேட்டை, ரோஷனை உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • காரணம்பேட்டையில் இருந்து முத்தாண்டிபாளையத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.
    • போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையை சேர்ந்த கோபால் மனைவி பிரிசில்லா, (வயது 35) இவர் பல்லடம் அருகே முத்தாண்டிபாளையம் என்ற இடத்தில் மருந்துக் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 18-ந்தேதி காரணம்பேட்டையில் இருந்து முத்தாண்டிபாளையத்திற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

    ஆறாக்குளம் என்ற இடம் அருகே செல்லும் போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரை வழிமறித்து அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னலென மறைந்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரிசில்லா தங்கச்சங்கிலியை வழிப்பறி செய்தது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து துப்பு துலக்கினர். அப்போது இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கோவை மாவட்டம், மதுக்கரை, சரஸ்வதி நகரைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் பிரசன்ன ராஜ்( வயது, 21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1/2 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான கோவை மாவட்டம், மதுக்கரை, சரஸ்வதி நகரைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் மோகன சூர்யா ( வயது 20 ) என்பவரை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில், அவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை புதூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தலைமறைவான வாலிபரை போலீசார் சிறிது நேரத்தில் பிடித்தனர்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக வாலிபர்கள் இரண்டு பேரை போலீசார் பிடித்தனர்.

    பிடிபட்ட இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாலிபர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் கன்னியாகுமரி சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது போலீஸ் பிடியிலிருந்து ஒருவர் தப்பி சென்றதாக தெரிகிறது. உஷாரான போலீசார் அந்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டனர். தலைமறை வான வாலிபரை போலீசார் சிறிது நேரத்தில் பிடித்தனர்.

    பிடிபட்ட நபரை மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பிடிபட்ட இரண்டு பேருக்கும் நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் திருட்டு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பு இருப் பது தெரிய வந்துள்ளது.

    இவர்கள் வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
    • லட்சுமி திருப்பூர் சென்று விட்டு இரவு வேலம்பட்டி வந்து அங்கிருந்து ராமம்பாளையத்திற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ராமம்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் சென்று விட்டு வேலம்பட்டி வந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து ராமம்பாளையத்திற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் நடத்திய விசாரணையில் திருடு போனது கவரிங் நகை என்பது தெரிய வந்தது.தொடர்ந்து கொள்ளையனை தேடி வருகின்றனர். 

    • ஈரோட்டில் போலீசார் வாகன சோதனையில் மோட்டார்சைக்கிள் கொள்ளையன் சிக்கினார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அவரை நிறுத்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    போலீஸ் விசாரணையில் அவர் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த முருகன் (27) என்பதும் அவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் திருடி கொண்டு வந்ததும் தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு முனிசிபல் காலனியில் வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை முருகன் திருடியது தெரியவந்தது.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த போது தான் முருகன் போலீசார் வாகன சோதனையில் சிக்கினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

    அவர் மீது ஏற்கனவே இதுபோன்ற பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×