search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா மழை"

    • கேரளாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இடுக்கி நீர்த்தேக்கத்தின் செருதோணி அணை, முல்லை பெரியாறு, இடை மலையாறு, பாணாசுர சாகர், கக்கி, பம்பா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய அணைகள், ஆறுகளில் உபரி நீர் பாய்ந்து வருவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு அணைகளும் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒடிசா கடற்கரை அருகே புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    நாளை (11-ந் தேதி) வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு கன மழையின் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பலத்த காற்று வீசும். இதனால் அலைகள் வேகமாக எழ வாய்ப்புகள் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    கேரளாவில் கடந்த 31-ம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால் 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை என்றும். 58 வீடுகள் முழுமையாகவும், 412 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

    • கேரளாவில் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
    • பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக நிவாரண முகாம்களாக பள்ளிகள் மாற்றப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் மகாராஷ்டிராவின் தெற்கு கடற்கரையிலிருந்து கேரளாவின் வடக்கு கடற்கரை வரை நீண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கிழக்கு மத்திய அரபிக்கடலில் சூறாவளி சுழற்சி உருவாகி உள்ளது.

    இதனால் கேரளாவில் வருகிற 10-ந் தேதி வரை மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு, ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய 6 மாவட்டங்கள், வயநாட்டில் தொழில்முறை கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், குடியிருப்புப்பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் நடைபெறும்.

    பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய இடங்களில் தற்காலிகமாக நிவாரண முகாம்களாக பள்ளிகள் மாற்றப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழையால் வீடுகளை இழந்தவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • கர்ப்பிணி பெண்களை மீட்டு வந்த குழுவினரை வருவாய் துறை மந்திரி பாராட்டினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையால் கேரளாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் இடுக்கி அணை, அருவிக்கரை, மலம்புழா உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இடுக்கி அணை அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஒரு சில அடிகளே உள்ளதால் அணை கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதுபோல சுமார் 22 அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும் மழை வெள்ளம் காரணமாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் வெள்ளம் கரையை தாண்டி சாலைகளிலும் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபோல தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். மழை, வெள்ளம் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததில் சுமார் 36 வீடுகள் முழுமையாகவும், 282 வீடுகள் பகுதி அளவிலும் இடிந்துள்ளது.

    மழையால் வீடுகளை இழந்தவர்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 342 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 12 ஆயிரத்து 195 பேர் தங்கியுள்ளனர்.

    மேலும் மலைகிராமங்களில் தவிப்பவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் நிவாரண முகாம்களுக்கு அழைத்து வருகிறார்கள். இதற்காக 11 பேரிடர் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

    நேற்று சாலக்குடியில் உள்ள காட்டுக்குள் 3 கர்ப்பிணி பெண்கள் தவித்து கொண்டிருப்பதாக பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் வந்தது. அவர்கள் நள்ளிரவு நேரத்திலும் அங்கு சென்று வனத்துறையினர் உதவியுடன் 3 பெண்களையும் மீட்டு வந்தனர்.

    கர்ப்பிணி பெண்களை மீட்டு வந்த குழுவினரை வருவாய் துறை மந்திரி பாராட்டினார்.

    மலம்புழா அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
    • இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து உள்ளது.

    இதனால் இடுக்கி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணைக்கு நீல நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கேரளாவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதன் காரணமாக மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே மழைக்கு வீடு இடிந்ததும், வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர்.

    மலையோர மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. இதையடுத்து இந்த பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதற்காக மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

    • ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
    • மழை நேரத்தில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ஆலுவாவில் உள்ள கோவிலை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கேரளாவில் கடந்த 3 நாட்களில் மட்டும் 12 பேர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே கேரளாவில் அடுத்த 72 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    இந்த பகுதிகளில் சுமார் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. மீதமுள்ள 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

    ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுபோல தாழ்வான பகுதிகளில் வசிப்போர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்குவதற்காக 95 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன.

    இதுவரை இந்த முகாம்களில் சுமார் 2219 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முதல் மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

    கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    எனவே மழை நேரத்தில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கிடையே நடுக்காணி-நிலம்பூர் சாலையில் இரவு 9 மணி முதல் காலை 9 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
    • கேரளாவில் ஜூன் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 251.8 மி.மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும்.

    இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறைய தொடங்கியது. பின்னர் பல மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.

    ஜூன் மாதம் 2 வாரங்கள் முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விபரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இதில் கடந்த 2 வாரங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

    கேரளாவில் ஜூன் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 251.8 மி.மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 108.7 மி.மீட்டர் அளவுக்கே மழை பெய்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் பெய்த மழை அளவை விட மிகவும் குறைவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் நிர்மூலமாகிப் போயுள்ளது. #KeralaRains #KeralaFlood
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 

    எனவே 33 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் இன்று காலை வரையில் 24 மணி நேரத்தில் 38.11 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 12 மாவட்டங்களுக்கு கடும் அபாய எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. 



    தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக கண்ணூர், கோழிக்கோடு மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. 

    இன்று வெள்ளம், நிலச்சரிவு போன்ற மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. இடுக்கி, முல்லைப்பெரியாறு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தை சூழ்ந்துள்ளது. 

    ஓடுபாதை மற்றும் சுற்றுவட்டார இடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதால் விமான நிலையம் 18–ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக மாநிலத்தில் வெள்ள நிலவரம் மிகவும் மோசமாகியுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு கூடுதல் உதவிகளை செய்யும்படி கேரள அரசு கோரிக்கையை விடுத்து வருகிறது. கேரளாவில் மீட்புப் பணிக்காக மத்திய அரசு கூடுதலாக ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், படகுகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, பினராய் விஜயன் கோரிக்கையை விடுத்துள்ளார். 



    இதற்கிடையே பினராய் விஜயனிடம் பேசிய பிரதமர் மோடி, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் குறித்து அம்மாநில முதல்வரிடம் கேட்டறிந்தேன், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். 

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரளாவிற்கு 4 தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவை அனுப்பியுள்ளது. கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

    ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு புனேவில் இருந்து 4 தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஒவ்வொரு பிரிவிலும் 45 வீரர்கள் இருப்பார்கள். ஏற்கனவே இடுக்கி, எர்ணாகுளம், பாலகாடு, ஆழபுலா, கோழிக்கோடு, வயநாடு, திரிச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 14 பிரிவுகள் நிலை நிறுத்தப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி வருவதால், மக்கள் துன்புற்று இருக்கும் நிலையில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. #KeralaFloods #Onam
    திருவனந்தபுரம்:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைகள் திறப்பால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து மேலும் வெள்ளக்காடாக பல்வேறு இடங்கள் காணப்படுகிறது. இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்தது.

    மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரூ.100 கோடி உடனடியாக அனுப்பப்படும் என அறிவித்தார். முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண நிதி அளிக்குமாறு முதல்வர் பினராயி விஜயனும் கோரிக்கை விடுத்திருந்தார்.


    ஓணம் கொண்டாடம் (கோப்புப்படம்)

    இந்நிலையில், கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம் நாளை தொடங்குகிறது. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த பண்டியை அரசின் சார்பாக பல இடங்களில் நடத்தப்படும். மழை வெள்ளத்தால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அரசின் சார்பில் நடத்தப்படும் ஓணம் பண்டியை ரத்து செய்யப்பட்டு அந்த பணம் நிவாரண நிதிக்கு பயன்படுத்தப்படும் என பினராயி விஜயன் இன்று அறிவித்துள்ளார். 
    கேரளாவில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 12-ம் தேதி பார்வையிட உள்ளார். #KeralaFloods #KeralaRain #RajnathSingh
    சென்னை:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 28-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

    இந்நிலையில், கனமழை பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்நிலையில், வரும் 12-ம் தேதி கேரளா செல்ல உள்ள ராஜ்நாத் சிங், மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.

    பின்னர், அம்மாநில முதல்வர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மீட்பு பணிகள் குறித்து கேட்டறிய உள்ளார். 
    கேரளாவில் கனமழையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மாநிலத்துக்கு ரூ.5 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #EdappadiPalanisamy
    சென்னை:

    தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 
    கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளி தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ரவீந்திரநாத் அறிவித்துள்ளார்.

    கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை இன்று திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மழை வெள்ள நிவாரனங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.5 கோடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
    ×