search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடியேற்றம்"

    • புனித சவேரியார் உருவம் பதித்த கொடியையும், மலர்களையும் வடக்கு மற்றும் தெற்கு ஊர் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
    • காலை 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடை யும். இதேபோல இந்த ஆண் டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.15 மணிக்கு ராஜாவூர் பங்கு இறைமக்களால் திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து 8 மணிக்கு அறுகுவிளை பங்கு இறைமக்கள் திருப்பலி நடத்தினர்.

    பின்னர் மாலை 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்துக்கான மலர்களை ராஜாவூர் மக்க ளும், அறுகுவிளை மக்களும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடி யேற்றத்துக்கு வந்த கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் ரூபசுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேராலய பீடத்தில் கொடி யேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் சகாய ஆனந்த் மந்திரித்து சிலுவை பதித்த கொடியையும், புனித சவேரியார் உருவம் பதித்த கொடியையும், மலர்களையும் வடக்கு மற்றும் தெற்கு ஊர் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    அதன் பிறகு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின் னர் அவருடைய தலை மையில் பேராலய வளாகத் தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சி யில் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த், பேராலய பங்குத் தந்தை பஸ்காலிஸ், இணை பங்குத்தந்தை ஜெனிஷ் கவின், பங்கு பேரவை துணை தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளா ளர் ராபின் மற்றும் அருட் சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருவிழாவானது டிசம்பர் 4-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் 9-வது நாளான 2-ந்தேதி மாலை 6.10 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு தேர்ப் பவனி நடைபெறும்.

    தொடர்ந்து 3-ந்தேதி மாலை 6.10 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலை மையில் நடக்கிறது. பின்னர் இரவு 10 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். விழாவின் இறுதி நாளான 4-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, 8 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    • கோவிலில் இன்று ஆடிப்பூர பெருவிழா கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
    • பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் கோவில் அமைந்துள்ளது.

    திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் இன்று ஆடிப்பூர பெருவிழா கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    இதனை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு நந்தி பகவான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அலங்கார தீபங்கள், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    பின்னர் கொடி மங்கள வாத்யங்கள் இசையுடன் மூலவர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்கள்.

    இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள்பொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது,

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்யங்கள்.

    சிவகணங்கள் இசைக்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டன.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றப்பட்டது.
    • புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகாசிவராத்திரி விழா விமரிசை யாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான விழா நாளை (11-ந்தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை அதிகாலையில் 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதன் பின்னர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் அபிஷேகங்கள் ராமநாதசாமிக்கு நடை பெறும். பின்னர் காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் ராமநாதசாமி சன்னதிக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடி யேற்றப்படும்.

    12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மாசி மகா சிவராத்திரியில் தினசரி ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை வழிபாடுகள் நடைபெறும்.

    மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி ராமநாதசாமி-பர்வதவர்த்தினி அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் கோவிலின் உபகோவிலான கெந்தமாதன பர்வத வர்த்தினி அமைந்துள்ள மண்டகப் படியில் எழுந்த ருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    மகாசிவராத்திரியன்று (18-ந்தேதி) இரவு வெள்ளி ரதம் புறப்பாடும், 19-ந் தேதி தேரோட்டமும் நடை பெறும்.

    20-ந் தேதி அமாவாசை யை முன்னிட்டு ராமநாத சாமி-பர்வத வர்த்தினி அம்மன் உள்பட பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து புறப்படாகி காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.

    • யாழை பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
    • வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் வரலாற்று சிறப்புடையது.இந்த கோவிலில் யாழைப் பழித்த மொழியம்மை என்று அழைக்கப்படும் வேதநாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார். சரஸ்வதிக்கும் இந்த அம்மனுக்கும் வீட்டின் ஒளி சிறந்ததா அல்லது அம்மனின் குரலோசை சிறந்ததா என போட்டி ஏற்பட்டு வீணையின் ஒலியைவிட அம்மனின் குரலோசை இனிமையாக இருந்ததால் சரஸ்வதி வீணை இல்லாமல் தனி சன்னதி கொண்டுள்ளார்.

    வேத நாயகி அம்மனுக்கு ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதற்காக நேற்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, சமஸ்தார்கள் கயிலைமணி வேதரத்தினம் ,கேடிலியப்பன், உபயதாரர்கள் தேவி, பாலு, ராஜேந்திரன், ஓதுவார் மூர்த்தி, பரஞ்சோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பிரம்மோற்சவ விழாவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும். 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம்செய்ய ப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவுரிராஜ பெருமாள், பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி, வருகிற 17-ம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 18-ம் தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×