என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    சிறப்பு அலங்காரத்தில் அறம்வளர்த்த நாயகி அம்மன் காட்சியளித்ததையும், ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • கோவிலில் இன்று ஆடிப்பூர பெருவிழா கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
    • பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் கோவில் அமைந்துள்ளது.

    திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் மடத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் இன்று ஆடிப்பூர பெருவிழா கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    இதனை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு நந்தி பகவான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, அலங்கார தீபங்கள், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    பின்னர் கொடி மங்கள வாத்யங்கள் இசையுடன் மூலவர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்திற்கு கொண்டு வரப்பட்டன.

    விநாயகர், சண்டிகேஸ்வரர், அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் தனித்தனி சப்பரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்கள்.

    இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு விபூதி, திரவியம் பொடி, மஞ்சள்பொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது,

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்யங்கள்.

    சிவகணங்கள் இசைக்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டன.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×