search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • புனித சவேரியார் உருவம் பதித்த கொடியையும், மலர்களையும் வடக்கு மற்றும் தெற்கு ஊர் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
    • காலை 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடை யும். இதேபோல இந்த ஆண் டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.

    விழாவின் முதல் நாளான நேற்று காலை 6.15 மணிக்கு ராஜாவூர் பங்கு இறைமக்களால் திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து 8 மணிக்கு அறுகுவிளை பங்கு இறைமக்கள் திருப்பலி நடத்தினர்.

    பின்னர் மாலை 6 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்துக்கான மலர்களை ராஜாவூர் மக்க ளும், அறுகுவிளை மக்களும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடி யேற்றத்துக்கு வந்த கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் ரூபசுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேராலய பீடத்தில் கொடி யேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் சகாய ஆனந்த் மந்திரித்து சிலுவை பதித்த கொடியையும், புனித சவேரியார் உருவம் பதித்த கொடியையும், மலர்களையும் வடக்கு மற்றும் தெற்கு ஊர் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    அதன் பிறகு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின் னர் அவருடைய தலை மையில் பேராலய வளாகத் தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சி யில் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த், பேராலய பங்குத் தந்தை பஸ்காலிஸ், இணை பங்குத்தந்தை ஜெனிஷ் கவின், பங்கு பேரவை துணை தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளா ளர் ராபின் மற்றும் அருட் சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருவிழாவானது டிசம்பர் 4-ந்தேதி வரை நடக்கிறது. விழாவின் 9-வது நாளான 2-ந்தேதி மாலை 6.10 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 10.30 மணிக்கு தேர்ப் பவனி நடைபெறும்.

    தொடர்ந்து 3-ந்தேதி மாலை 6.10 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலை மையில் நடக்கிறது. பின்னர் இரவு 10 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். விழாவின் இறுதி நாளான 4-ந்தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, 8 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    Next Story
    ×