search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் நாள் கூட்டம்"

    • சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.
    • வேளாண் - உழவா் நலத் துறை சாா்பில் அமைக்கப்படவுள்ள கருத்துக் காட்சியிலும் பங்கேற்று பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வருகிற 23-ந்தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 23-ந்தேதி( வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். இதைத்தொடா்ந்து, விவசாயிகள் சங்கங்களில் இருந்து சங்கத்துக்கு ஒருவா் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

    மேலும் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் அமைக்கப்படும். ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் - உழவா் நலத் துறை சாா்பில் அமைக்கப்படவுள்ள கருத்துக் காட்சியிலும் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் கலெக்டர் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையிலும் மார்ச் 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 21-ந்தேதி வரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இரட்டை பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.

    விண்ணப்பங்களில் "ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

    தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையில் உள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.

    ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவா் வீதம் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.
    • ளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திரக் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதி( வெள்ளிக்கிழமை )காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்கும் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கிய பின்னா் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவா் வீதம் கோரிக்கைகளை தொகுத்து மாவட்ட கலெக்டரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

    மேலும், விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் இக்கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும். வேளாண்- உழவா் நலத் துறை மற்றும் வேளாண் சாா்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக் காட்சியிலும் விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வருகிற 24-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது.
    • தங்கள் குறைகள்,கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வருகிற 24-ந்தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. கூட்டத்திற்கு திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள்,கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
    • கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 30.12.2022 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டகலெக்டர் வளாக அறை எண்: 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறவுள்ளது . கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம்

    மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து விவசாயிகள் பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    • வெண்ணாம்பட்டி திருமண மண்டபத்தில் நேற்று போலீஸ் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தருமபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட போலீஸ் சார்பாக, தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி திருமண மண்டபத்தில் நேற்று போலீஸ் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    தருமபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் தலைமை வகித்தார். இதில், 53 மனுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 41 மனுதாரர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், 35 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் அண்ணாமலை, இளங்கோவன் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் ஸ்ரீதரன், ரவிக்குமார் ராதாகிரு ஷ்ணன், புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

    • உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்படுகிறது.
    • காலை 11 மணிக்கு உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.

    உடுமலை:

    உடுமலை, மடத்துக்குளம் தாலுகா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்படுகிறது. நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி காலை 11 மணிக்கு உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது. இக்கூட்டத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள்ளார். 

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் பங்கேற்ற ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.

    இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 475 மனுக்கள் வரப்பெற்றன.

    கூட்டத்தில் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், கடகத்தூர் உள்வட்டம், தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்களுக்கும் ரூ.2.23 லட்சம் மதிப்பீட்டி லான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி, வழங்கினார்.

    மேலும், கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த செல்வி மற்றும் மூக்கனூரைச் சேர்ந்த ராஜாத்தி ஆகிய இருவருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து, கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் கடந்த 27.9.2022 அன்று நடைபெற்ற கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தமிழகத்தில் கிராம சபைகளை வலுப்படுத்துதல் குறித்த கருத்தரங்கில் தருமபுரி மாவட்டத்திலிருந்து பங்கேற்ற நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், சிவாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ஆறுமுகத்திற்கும், அரூர் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தமலை ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணிக்கும் மற்றும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், ராமியனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாவுக்கும் சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அரசு முதன்மை செயலா ளரிடமிருந்து வரப்பெற்ற நற்சான்றிதழ்களை வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்தார்.

    கூட்டத்தில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, மொத்தம் 14 நபர்களுக்கு ரூ.3.59 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகள், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை மற்றும் கருத்தரங்கில் பங்கேற்ற ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது
    • முதுமலை மறுகுடியமர்வு மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    இதில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது. மேலும் முன்னதாக பெறப்பட்ட மனுக்கள் உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 89 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் செடிகளின் விபரங்களை விலையுடன் கூடிய காட்சி பதாகைகள் வைக்க வேண்டும்.

    பி.எம்.கிஷான் பயனாளிகளில் 13-வது தவணை தொகை பெற இயலாத காரணத்தால் பயனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் கூடலூர் வட்டாரத்தில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றும், முதுமலை மறுகுடியமர்வு மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    நீலகிரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை Nilgiris Tree Cutting Service என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர்(பொறுப்பு) ஷிபிலா மேரி, உதவி இயக்குநர்கள் சாம்சாந்த குமார்(ஊராட்சிகள்), இப்ராகிம்ஷா (பேரூராட்சிகள்) மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
    • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது

    அரியலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
    • மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்காணும் கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது என தெரிவிக்கப்படுகின்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசியர்களுக்கான ஒய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டமானது திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 24.11.2022 அன்று முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநர் ,சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதிய மற்றும் இதர ஓய்வூதிய பணப்பலன்கள் இதுநாள் வரையில் தங்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருப்பின், பணியாற்றிய துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ள தங்களது மனுவினை இரண்டு பிரதிகளில் மாவட்ட கலெக்டர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பல்லடம் சாலை, திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு 15.11.2022 அன்று மாலைக்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம். மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்காணும் கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது என தெரிவிக்கப்படுகின்றது.

    மேலும் ஓய்வூதியதாரர் அவர்தம் கோரிக்கைகளை சங்க கடிதம் மூலம் அல்லாமல் நேரடியாக விண்ணப்பம் அளிக்க வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    ×