என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் போலீஸ் சார்பாக   மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    தருமபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. 

    தருமபுரியில் போலீஸ் சார்பாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • வெண்ணாம்பட்டி திருமண மண்டபத்தில் நேற்று போலீஸ் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தருமபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் தலைமை வகித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட போலீஸ் சார்பாக, தருமபுரி அடுத்த வெண்ணாம்பட்டி திருமண மண்டபத்தில் நேற்று போலீஸ் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    தருமபுரி மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் தலைமை வகித்தார். இதில், 53 மனுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 41 மனுதாரர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், 35 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    இதில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் அண்ணாமலை, இளங்கோவன் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் ஸ்ரீதரன், ரவிக்குமார் ராதாகிரு ஷ்ணன், புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×