search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance Redressal Day"

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 382 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை ஆணையாளர் (கலால்) ராம்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
    • மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்காணும் கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது என தெரிவிக்கப்படுகின்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசியர்களுக்கான ஒய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டமானது திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் 24.11.2022 அன்று முற்பகல் 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதிய இயக்குநர் ,சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதிய மற்றும் இதர ஓய்வூதிய பணப்பலன்கள் இதுநாள் வரையில் தங்களுக்கு கிடைக்கப்பெறாமல் இருப்பின், பணியாற்றிய துறை மற்றும் எந்த அலுவலர் மூலம் குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ள தங்களது மனுவினை இரண்டு பிரதிகளில் மாவட்ட கலெக்டர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், பல்லடம் சாலை, திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு 15.11.2022 அன்று மாலைக்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்கலாம். மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்காணும் கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது என தெரிவிக்கப்படுகின்றது.

    மேலும் ஓய்வூதியதாரர் அவர்தம் கோரிக்கைகளை சங்க கடிதம் மூலம் அல்லாமல் நேரடியாக விண்ணப்பம் அளிக்க வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.  

    ×