என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் சாந்தி பெற்று கொண்ட போது எடுத்தபடம்.
தருமபுரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 நபர்களுக்கு ரூ.3.59 லட்சம் மதிப்பிலான இலவச பட்டாக்கள், மாதாந்திர உதவித்தொகை -உத்தரவு ஆணைகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
- கருத்தரங்கில் பங்கேற்ற ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது.
இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 475 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்தில் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், கடகத்தூர் உள்வட்டம், தாளநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்களுக்கும் ரூ.2.23 லட்சம் மதிப்பீட்டி லான இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் சாந்தி, வழங்கினார்.
மேலும், கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த செல்வி மற்றும் மூக்கனூரைச் சேர்ந்த ராஜாத்தி ஆகிய இருவருக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் கடந்த 27.9.2022 அன்று நடைபெற்ற கிராம ஊராட்சி தலைவர்களுக்கு தமிழகத்தில் கிராம சபைகளை வலுப்படுத்துதல் குறித்த கருத்தரங்கில் தருமபுரி மாவட்டத்திலிருந்து பங்கேற்ற நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், சிவாடி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ஆறுமுகத்திற்கும், அரூர் ஊராட்சி ஒன்றியம், தீர்த்தமலை ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணிக்கும் மற்றும் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், ராமியனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாவுக்கும் சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அரசு முதன்மை செயலா ளரிடமிருந்து வரப்பெற்ற நற்சான்றிதழ்களை வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்தார்.
கூட்டத்தில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, மொத்தம் 14 நபர்களுக்கு ரூ.3.59 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணைகள், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை மற்றும் கருத்தரங்கில் பங்கேற்ற ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.






