என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    ஊட்டியில்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது
    • முதுமலை மறுகுடியமர்வு மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    இதில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டது. மேலும் முன்னதாக பெறப்பட்ட மனுக்கள் உரிய துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 89 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

    தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் செடிகளின் விபரங்களை விலையுடன் கூடிய காட்சி பதாகைகள் வைக்க வேண்டும்.

    பி.எம்.கிஷான் பயனாளிகளில் 13-வது தவணை தொகை பெற இயலாத காரணத்தால் பயனாளிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் கூடலூர் வட்டாரத்தில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க ேவண்டும் என்றும், முதுமலை மறுகுடியமர்வு மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    நீலகிரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை Nilgiris Tree Cutting Service என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர்(பொறுப்பு) ஷிபிலா மேரி, உதவி இயக்குநர்கள் சாம்சாந்த குமார்(ஊராட்சிகள்), இப்ராகிம்ஷா (பேரூராட்சிகள்) மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×