search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட்மி நோட் 7"

    சியோமி நிறுவனத்தின் ரெட்மி சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியாக இருப்பதை உணர்த்தும் வகையில், மூன்று ஸ்மார்ட்போன்கள் சீனாவில் சான்று பெற்றுள்ளன. #Redmi7 #Smartphones



    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ஸ்மார்ட்போன் வெளியாகி ஒருமாதம் நிறைவுறாத நிலையில், அந்நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்போனினை வெளியிட் தயாராகி வருகிறது. 

    நேஷ்வில் சேட்டர் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் சீனாவின் கம்பல்சரி சர்டிஃபிகேட் வலைதளத்தில் M1901F7C, M1901F7E, மற்றும் M1901F7T என்ற மாடல் நம்பர்களுடன் மூன்று சியோமி ஸ்மார்ட்போன்கள் சான்று பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி வழங்குவதற்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போன்களில் 5V/2A சார்ஜிங் வசதி பிரபலமாக இருக்கும் நிலையில், மூன்று ஸ்மார்ட்போன்களும் ரெட்மி சீரிஸ் ஆக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    சியோமி நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் M18 என்ற மாடல் நம்பர் கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஸ்மார்ட்போன்கள் M19 என துவங்குவதை வைத்து பார்க்கும் போது மூன்று புதிய ஸ்மார்ட்போன்களும் 2019 ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
    மோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்களும் அமெரிக்க வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #motorola

     

    மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தற்சமயம் அமெரிக்காவின் FCC வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது.

    FCC வலைதளத்தில் லீக் ஆகியிருக்கும் விவரங்களின் படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் XT1962 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலின் படி என்.எஃப்.சி. வசதி கொண்ட மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் ஐரோப்பியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மட்டும் அறிமுகமாகும் என தெரிகிறது.

    கூடுதலாக XT1862-6 மாடல் நம்பர் கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து 91மொபைல்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: 91mobiles

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் எலெக்டிரானிக் காம்பஸ், என்.எஃப்.சி. (சில பகுதிகளில் மட்டும்), டூயல் பேன்ட் வைபை, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்கள் குறித்து அதிகளவு தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதனுடன் 6.0 இன்ச் 19:5:9 ஐ.பி.எஸ். எல்.சி.டி. பேனல், 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 12 எம்.பி. செல்ஃபி கேமரா, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
     
    முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர்டிராப் வடிவம் கொண்ட நாட்ச் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    மேலும் ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா பொருத்தப்பட்டு இருக்கும் என்றும், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் மோட்டோ லோகோவில் கைரைகே சென்சார் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. #motorola #smartphone
    ஒப்போ நிறுவனம் கடந்த வாரம் சீனாவில் அறிமுகம் செய்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. #OppoA7



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் புது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஒப்போ ஏ7 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் வெளியிடப்பட்டது. புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் நேபால் மற்றும் சீனாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 1520x720 பிக்சல் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பேக்கப் வழங்கும் 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    ஒப்போ ஏ7 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1520x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
    - டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி செல்ஃபி கேமரா
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் கிளேரிங் கோல்டு, கிளேஸ் புளு நிறங்களில் கிடைக்கும் நிலையில் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 
    இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #OPPOA7



    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் புது பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ ஏ7 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் முன்னதாக நேபால் மற்றும் சீனாவில் வெளியிடப்பட்டது. நேபாலில் ஏற்கனவே விற்பனையாகும் ஒப்போ ஏ7, சீனாவில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 1520x720 பிக்சல் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது.



    ஒப்போ ஏ7 சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1520x720 பிக்சல் டிஸ்ப்ளே
    - குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
    - 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி செல்ஃபி கேமரா
    - 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த கலர் ஓ.எஸ். 5.2
    - டூயல் சிம் ஸ்லாட், ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட்

    புதிய ஒப்போ ஏ7 ஸ்மார்ட்போன் கிளேரிங் கோல்டு, கிளேஸ் புளு நிறங்களில் கிடைக்கும் நிலையில் புன்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் லைவ் படங்களைத் தொடர்ந்து முதல் முறையாக பிரெஸ் ரென்டர்கள் வெளியாகி இருக்கிறது. #motorola



    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் ரென்டர்கள் ஆக்ஸடு மாத வாக்கில் இணையத்தில் லீக் ஆகியிருந்தது. இம்முறை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் பிரெஸ் ரென்டர்கள் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன் XT-1965 என்ற மாடல் நம்பருடன் அமெரிக்காவின் FCC மூலம் சான்று பெற்றிருக்கிறது.

    அந்த வகையில் புது ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. மோட்டோ ஜி6 போன்றே, மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனிலும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. டூயல் கேமரா சென்சார்களின் கீழ் காணப்படும் மோட்டோரோலா லோகோவின் கீழ் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் மோட்டோ ஜி7 மாடலின் கீழ் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.


    புகைப்படம் நன்றி: MR Gizmo

    மோட்டோ ஜி7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் வசதி
    - ஆன்ட்ராய்டு 9.0 பை
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 12 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட் மற்றும் சில்வர் என மூன்று வித நிறங்களில் வெளியாகலாம் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் அல்லது ஜனவரி மாத வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #motorola #Smartphone



    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் வெற்றிகர மாடல்களாக இருக்கின்றன. அந்த வரிசையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனினை சத்தமில்லாமல் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    வெளியீடு குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் XT1965-2 எனும் மாடல் நம்பருடன் FCC வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி6 பிளஸே ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது.



    மோட்டோ பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டில் புதிய வழிமுறைகளை மோட்டோரோலா பின்பற்றி வருகிறது. மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதுவரை ரகசியமாக இருந்து வந்த நிலையில், FCC வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் டூயல் பேன்ட் (2.4 மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ்) டூயல்சிம் ஸ்லாட் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வேரியன்ட் மோட்டோ ஜி7 அல்லது மோட்டோ ஜி7 பிளஸ் என அழைக்கப்படலாம். 

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு, அதிக மெமரி மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். ஸ்மார்ட்போன் வெளியாகும் போது மோட்டோ ஜி7 மாடலில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    லெனோவோவின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியானதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போனின் சிறிய வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotoG7



    மோட்டோரோலாவின் புதிய மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக மோட்டோ ஜி6 சீரிஸ் இந்தியாவில் வெளியான நிலையில், அடுத்து மோட்டோ ஜி7, ஜி7 பிளஸ் மற்றும் ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்.

    மோட்டோ ஜி7 சிறப்பம்சங்கள் வெளியான நிலையில் ஸ்மார்ட்போனின் வீடியோ லீக் ஆகியுள்ளது. ஏற்கனவே வெளியான விவரங்களை பொருத்த வரை புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் போன்ற டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டூயல் கேமரா அமைப்பு கொண்டிருப்பது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து வெளியான படங்களில் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுவரை லீக் ஆகியிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் லீக் ஆன வீடியோவை கீழே காணலாம்..,


    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #MotoG7



    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக மோட்டோ ஜி7 மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனது. இதில் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் போன்ற டிஸ்ப்ளே நாட்ச் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படும் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெளியான படங்களில் மோட்டோ ஜி7 மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதுவரை லீக் ஆகியிருக்கும் சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. + 1080x2340 பிக்சல் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



    போர்த்துகீசு வலைதளத்தில் வெளியான விவரங்களில் மோட்டோ ஜி7 மாடலில் டூயல் பிரைமரி கேமரா, 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் செல்ஃபிக்களை எடுக்க 12 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

    மெமரியை பொருத்த வரை மோட்டோ ஜி7 மாடலில் 64 ஜி.பி.யும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் கைரேகை சென்சார், 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனினை மோட்டோரோலா நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஸ்மார்ட்போனின் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. 
    எல்.ஜி. நிறுவனம் தனது முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 என இந்த வாட்ச் அழைக்கப்படுகிறது. #LGWatchW7



    எல்.ஜி. நிறுவனம் வி40 தின்க்யூ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 ஸ்மார்ட்வாட்ச் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. 

    எல்.ஜி. நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக அமைந்திருக்கும் டபுள்யூ7 கூகுளின் வியர் ஓ.எஸ். மற்றும் வழக்கமான கடிகாரங்களில் உள்ளதை போன்ற முள் அமைப்பு கொண்டுள்ளது. குவார்ட்ஸ் அசைவுகளுடன், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சோப்ராட் எஸ்.ஏ. உடன் இணைந்து எல்.ஜி. உருவாக்கியிருக்கிறது. இதில் ஆல்டிமீட்டர், பாரோமீட்டர், ஸ்டாப்வாட்ச், டைமர் மற்றும் காம்பஸ் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டுள்ளது.

    வழக்கமான பயன்பாடுகளில் இரண்டு நாட்கள் வரையிலும், அனலாக்-ஒன்லி (analog-only) மோடில் வைத்தால் மூன்று முதல் அதிகபட்சம் நான்கு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என எல்.ஜி. தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் அம்சங்களை டிசேபிள் செய்த நிலையில், 100 நாட்கள் முதல் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு இயங்கும்.



    எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 சிறப்பம்சங்கள்:

    - 1.2 இன்ச் 360x360 பிக்சல் வட்ட வடிவம் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 2100 பிராசஸர்
    - 768 எம்.பி. LPDDR3 ரேம்
    - 4 ஜி.பி. eMMC
    - கூகுளின் வியர் ஓ.எஸ்.
    - டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP68)
    - அசைவுகள்: 2 ஹேன்ட்ஸ் குவார்ட்ஸ் மூவ்மென்ட் / மைக்ரோ கியர்பாக்ஸ்
    - புளூடூத் 4.2 LE, வைபை, யு.எஸ்.பி. டைப்-சி 2.0
    - சென்சார்கள்: 9-ஆக்சிஸ் (கைரோ/ அக்செல்லோமீட்டர்/ காம்பஸ்), பிரெஷர் சென்சார்
    - 240 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 கிளவுட் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வழக்கமான 22 எம்.எம். வாட்ச் பேன்ட்களுடன் பொருந்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் எல்.ஜி. வாட்ச் டபுள்யூ7 விலை 450 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.33,250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #GalaxyA7



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அறிமுகமான கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் தற்சமயம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது. 24 எம்.பி. பிரைமரி சென்சார், f/1.7 அப்ரேச்சர், 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 120 டிகிரி வைடு லென்ஸ், 5 எம்.பி. மூன்றாவது கேமரா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 24 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் செல்ஃபி ஃபோக்கஸ், ப்ரோ லைட்டிங் மோட் மற்றும் ஏ.ஆர். எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 



    சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7885 14nm பிராசஸர்
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா
    - 5 எம்.பி. மூன்றாவது கேமரா, f/2.2, டெப்த் கேமரா
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - டால்பி அட்மோஸ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போன் புளு, பிளாக், கோல்டு மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,990 என்றும், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.28,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஆன்லைன் விற்பனை செப்டம்பர் 26 மற்றும் 27 தினங்களில் துவங்க இருக்கும் நிலையில், ஆஃப்லைன் விற்பனை மையங்களில் செப்டம்பர் 29-ம் தேதி விற்பனை செய்யப்பட இருக்கிறது. #GalaxyA7 #Smartphones
    சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. #GalaxyA7



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் தற்சமயம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது. 24 எம்.பி. பிரைமரி சென்சார், f/1.7 அப்ரேச்சர், 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 120 டிகிரி வைடு லென்ஸ், 5 எம்.பி. மூன்றாவது கேமரா லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களை எடுக்க 24 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் செல்ஃபி ஃபோக்கஸ், ப்ரோ லைட்டிங் மோட் மற்றும் ஏ.ஆர். எமோஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 



    சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
    - 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
    - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7
    - 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா
    - 5 எம்.பி. மூன்றாவது கேமரா, f/2.2
    - 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - டால்பி அட்மோஸ்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போன் புளு, பிளாக், கோல்டு மற்றும் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 349 யூரோ இந்திய மதிப்பில் ரூ.29,385 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளில் கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்தியாவில் மிகவிரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #GalaxyA7 #Smartphones
    ஹூவாய் துணை பிரான்டு ஹானர் தனது ஸ்மார்ட்போன் மாடலை ஃபிளாஷ் முறையில் ரூ.1 விலையில் விற்பனை செய்கிறது. #Honor9N



    ஹூவாய் துணை பிரான்டு ஹானர் தனது ஸ்மார்ட்போனினை அனைத்து விலை பிரிவுகளிலும் விற்பனை செய்து வருகிறது. மற்ற சீன நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 

    இந்நிலையில், ஹானர் 9என் ஸ்மார்ட்போன் இன்று காலை 11.45 மணிக்கு ரூ.1 என்ற மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வருகிறது. இதே போன்று ஹானர் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனும் விற்பனை செய்யப்படுகிறது. 



    ஹானர் 9N ரூ.1 விற்பனை விவரங்கள்:

    இந்தியாவில் ரூ.11,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் ஹானர் 9N ஸ்மார்ட்போன் இன்று காலை மட்டும் ரூ.1 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த விற்பனை நடைபெறுகிறது. ஹானர் 9N ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட் விற்பனைக்கு கிடைக்கிறது.

    விற்பனையில் கலந்து கொள்ள முதலில் ஹானர் இந்தியா வலைத்தளம் சென்று அக்கவுன்ட் ஒன்றை உருவாக்க வேண்டும். பின் உங்களது முகவரியை ப்ரோஃபைலில் சேர்க்க வேண்டும். ரூ.1 ஃபிளாஷ் விற்பனை சரியாக காலை 11.45 மணிக்கு துவங்கும். விற்பனையில் குறைந்த எண்ணிக்கையிலான யூனிட்கள் மட்டுமே கிடைக்கும்.

    வெற்றிகரமாக ஸ்மார்ட்போனினை பெற்றவர்கள், ஆன்லைனில் ரூ.1 கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியதும், ஹானர் 9N ஸ்மார்ட்போன் பயனர் வழங்கிய முகவரிக்கு அனுப்பப்படும். 



    ஹானர் 9N சிறப்பம்சங்கள்:

    - 5.84 இன்ச் 1080x2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் கிரின் 659 சிப்செட்
    - மாலி T830-MP2 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ்
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - ரைட் மோட், பார்டி மோட்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    ஹானர் 7எஸ் 

    இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12.00 மணிக்கு நடைபெறுகிறது. வாடிக்கையாளர்கள் ஹானர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஹானர் 7எஸ் ஸ்மார்ட்போனினை வாங்கிட முடியும். 



    ஹானர் 7எஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 TFT ஃபுல் வியூ டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF
    - 5 எம்பி முன்பக்க கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி எல்.டிஇ, வைபை, ப்ளூடூத்
    - ஃபேஸ் அன்லாக்
    - 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    ×