search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்
    X

    இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன்

    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #motorola #Smartphone



    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அந்நிறுவனத்தின் வெற்றிகர மாடல்களாக இருக்கின்றன. அந்த வரிசையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனினை சத்தமில்லாமல் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    வெளியீடு குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் XT1965-2 எனும் மாடல் நம்பருடன் FCC வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளஸ் மற்றும் மோட்டோ ஜி6 பிளஸே ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது.



    மோட்டோ பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டில் புதிய வழிமுறைகளை மோட்டோரோலா பின்பற்றி வருகிறது. மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதுவரை ரகசியமாக இருந்து வந்த நிலையில், FCC வலைதளத்தில் ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் டூயல் பேன்ட் (2.4 மற்றும் 5 ஜிகாஹெர்ட்ஸ்) டூயல்சிம் ஸ்லாட் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சர்வதேச வேரியன்ட் மோட்டோ ஜி7 அல்லது மோட்டோ ஜி7 பிளஸ் என அழைக்கப்படலாம். 

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு, அதிக மெமரி மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம். ஸ்மார்ட்போன் வெளியாகும் போது மோட்டோ ஜி7 மாடலில் ஆன்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×