search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    புகைப்படம் நன்றி: mr gizmo
    X
    புகைப்படம் நன்றி: mr gizmo

    மோட்டோ ஜி7 இந்திய வெளியீட்டு விவரங்கள்

    மோட்டோ ஜி7 பிளே, மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் விவரங்களும் அமெரிக்க வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது. #motorola

     

    மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விவரங்கள் தற்சமயம் அமெரிக்காவின் FCC வலைதளத்தில் லீக் ஆகியுள்ளது.

    FCC வலைதளத்தில் லீக் ஆகியிருக்கும் விவரங்களின் படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் XT1962 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலின் படி என்.எஃப்.சி. வசதி கொண்ட மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் ஐரோப்பியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மட்டும் அறிமுகமாகும் என தெரிகிறது.

    கூடுதலாக XT1862-6 மாடல் நம்பர் கொண்ட மோட்டோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து 91மொபைல்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியன்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: 91mobiles

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் எலெக்டிரானிக் காம்பஸ், என்.எஃப்.சி. (சில பகுதிகளில் மட்டும்), டூயல் பேன்ட் வைபை, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்கள் குறித்து அதிகளவு தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இதனுடன் 6.0 இன்ச் 19:5:9 ஐ.பி.எஸ். எல்.சி.டி. பேனல், 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 12 எம்.பி. செல்ஃபி கேமரா, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, டர்போ சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
     
    முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர்டிராப் வடிவம் கொண்ட நாட்ச் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    மேலும் ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா பொருத்தப்பட்டு இருக்கும் என்றும், எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் மோட்டோ லோகோவில் கைரைகே சென்சார் பொருத்தப்பட்டு இருக்கும் என கூறப்பட்டது. #motorola #smartphone
    Next Story
    ×