search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருணால் பாண்டியா"

    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    வீரர்கள் விவரம்:-

    இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், டி'ஆர்கி ஷார்ட், அலெக்ஸ் கேரி, பென்மெக்டர்மட், ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரிவ் டை, ஆடம் ஜம்பா, பெரென்டோர்ப், ஸ்டேன்லேக்.



    டி ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆர்கி ஷார்ட் 7 ரன் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் கிறிஸ் லின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆரோன் பிஞ்ச் 24 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். கிறிஸ் லின் 20 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 37 ரன்கள் விளாசினார். இரண்டு பேரையும் குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.

    4-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார். குறிப்பாக குருணால் பாண்டியா பந்தில் சிக்சராக விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.



    10 ஓவரில் 75 ரன்கள் சேர்த்திருந்த ஆஸ்திரேலியா 15 ஓவரில் 135 ரன்கள் சேர்த்தது. 16-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் குவித்தது. குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #AUSvIND #ViratKohli
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை நடக்கிறது. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இதில் 1. ரோகித் சர்மா, 2.தவான், 3. லோகேஷ் ராகுல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பந்த்,  6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. சாஹல், 9. குல்தீப் யாதவ், 10, புவனேஸ்வர் குமார், 11. பும்ரா, 12. கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.



    இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் கலீல் அகமதிற்கு இடம் கிடைக்காது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் குருணால் பாண்டியா அல்லது சாஹல் ஆகியோரின் ஒருவருக்கு இடம் கிடைக்காது.
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். #indvwi #rohitsharma

    கொல்கத்தா:

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்தான் எடுக்க முடிந்தது.

    ஆலன் அதிகபட்சமாக 27 ரன் எடுத்தார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், கலீல் அகமது, பும்ரா, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தினேஷ் கார்த்திக் 34 பந்தில் 31 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), குருணால் பாண்டியா 9 பந்தில் 21 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். ஒஷானே தாமஸ், பிராத் வெயிட் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    பந்துவீச்சுக்கு நேர்த்தியான இந்த ஆடுகளத்தில் பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த பிட்சில் ரன் சேஸ் செய்வது சவாலனதே. ஆனாலும் பேட்ஸ்மேன்கள் சில பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் புதுமுக வீரர் தாமஸ் அபாரமாக பந்து வீசினார். அவரது திறமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.


    குருணால் பாண்டியா மிகவும் அற்புதமான திறமை வாய்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். இக்கட்டான நேரத்தில் அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ அதை செயல்படுத்தக்கூடியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி லக்னோவில் நாளை நடக்கிறது. இதில் வென்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. #indvwi #rohitsharma 

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 110 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது.

    இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தெர்வு செய்தார். இந்திய அணியில் குருணால் பாண்டியா, கலீல் அஹமது ஆகியோர் அறிமுகமானார்கள். புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 5. மணிஷ் பாண்டே, 6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. குல்தீப் யாதவ், 9. உமேஷ் யாதவ் 10. பும்ரா, 11. கலீல் அஹமது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷாய் ஹோப், 2. ராம்தின், 3. ஹெட்மையர், 4. பொல்லார்டு, 5. டேரன் பிராவோ, 6.  ரோப்மேன் பெவோல், 7. பிராத்வைட், 8. ஆலன், 9. கீமோ பால், 10. பியர், 11. தாமஸ்.

    ஷாய் ஹோப், ராம்தின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் முதல் இரண்டு ஓவரில் தலா 8 ரன்கள் அடித்தது. இதனால் அதிக ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உமேஷ் யாதவ் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தில் ராம்தின் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் ஹெட்மையர் களம் இறங்கினார். அணியின் ஸ்கோர் 22 ரன்னாக இருக்கும்போது ஷாய் ஹோப் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். 28 ரன்கள் இருக்கும்போது ஹெட்மையர் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.



    அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோர் தவழ ஆரம்பித்தது. பொல்லார்டு 14 ரன்னிலும், டேரன் பிராவோ 5 ரன்னிலும், ரோவ்மேன் பொவேல் 4 ரன்னிலும், பிராத்வைட் 4 ரன்னிலும் வேளியேறினார்கள். குருணால் பாண்டியா அறிமுக போட்டியில் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பொல்லார்டை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 4 ஒவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

    8-வது வீரரா களம் இறங்கிய ஆலன் 20 பந்தில் 27 ரன்கள் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 110 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. குருணால் பாண்டியா, கலீல் அஹமது அறிமுகம். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 6.30 மணிக்கு சுண்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தெர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குருணால் பாண்டியா, கலீல் அஹமது அறிமுகமாகியுள்ளனர். புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 5. மணிஷ் பாண்டே, 6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. குல்தீப் யாதவ், 9. உமேஷ் யாதவ் 10. பும்ரா, 11. கலீல் அஹமது.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குருணால் பாண்டியா அறிமுகம் ஆக வாய்ப்புள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு தொடங்குகிறது. இதற்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    டோனி மற்றும் விராட் கோலி அணியில் இடம் பெறவில்லை. டோனிக்குப் பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக பணியாற்ற இருக்கிறார். விராட் கோலிக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் அல்லது மணிஷ் பாண்டு களம் இறங்க வாய்ப்புள்ளது.

    12 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 5. மணிஷ் பாண்டே, 6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. குல்தீப் யாதவ், 9. புவனேஸ்வர் குமார், 10. பும்ரா, 11. கலீல் அஹமது. 12. சாஹல்.
    இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதே உச்சக்கட்ட இலக்கு என குருணால் பாண்டியா தெரிவித்துள்ளார். #KrunalPandya
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்பவர் ஹர்திக் பாண்டியா, இவரது அண்ணன் குருணால் பாண்டியா. இருவரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது பிரபலம் ஆனார்கள்.

    ஹர்திக் பாண்டியா சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். ஆனால் குருணால் பாண்டியாவிற்கு இன்னும் இடம்கிடைக்கவில்லை. இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் சிறப்பாக பேட்டிங்கும் செய்து வருகிறார்.

    இதனால் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதே உச்சக்கட்ட இலக்கு என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குருணால் பாண்டியா கூறுகையில் ‘‘என்னுடைய உச்சக்கட்ட இலக்கே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான். நான் ஒவ்வொரு தொடராக சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மேட்ச் ஒன்று கூட சொல்லலாம். நான் தொடர்ச்சியாக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். நான் என்ன விரும்புகிறனோ, அதை பெறுவேன்.

    இறுதியாக அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும். தற்போது நான் சென்று கொண்டிருக்கும் வழியில், நான் அந்த உயரத்தை எட்டுவேன் என்று நம்புகிறேன்’’ என்றார்.
    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா ‘ஏ’வை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 31.4 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 34 ரன்களும், டிரெவிஸ் ஹெட் 28 ரன்களும் சேர்த்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுக்களும், கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. டாப் வீரர்கள் ரவிக்குமார் சமரத் (4), சூர்யகுமார் யாதவ் (15), சஞ்சு சாம்சன் (0), ஷ்ரேயாஸ் அய்யர் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ‘ஏ’ அணி 29 ரன்கள் அடிப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்ககு அம்பதி ராயுடு உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குருணால் பாண்டியா 49 ரன்களும், அம்பதி ராயுடு ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 38.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்துள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் குருணால் பாண்டியா இடம் பிடித்துள்ளார். #ENGvIND
    மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்திருந்தார்.

    பயிற்சியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக டி20 போட்டியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரும், இடதுகை பேட்ஸ்மேனும் ஆன குருணால் பாண்டியா இடம்பிடித்துள்ளார். இவர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் ஆவார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.



    குருணால் பாண்டியா இந்திய அணியில் இடம் பிடித்தால் இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்களுக்கு அடுத்தபடி களம் இறங்கும் சகோதரர்கள் இவர்கள் ஆவார்கள்.
    ×