search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு அணிகள் ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’
    X

    நான்கு அணிகள் ஒருநாள் கிரிக்கெட்- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’

    நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா ‘ஏ’வை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’.
    இந்தியா ‘ஏ’, இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா ‘ஏ’ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 31.4 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர் 34 ரன்களும், டிரெவிஸ் ஹெட் 28 ரன்களும் சேர்த்தனர். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுக்களும், கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. டாப் வீரர்கள் ரவிக்குமார் சமரத் (4), சூர்யகுமார் யாதவ் (15), சஞ்சு சாம்சன் (0), ஷ்ரேயாஸ் அய்யர் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ‘ஏ’ அணி 29 ரன்கள் அடிப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்ககு அம்பதி ராயுடு உடன் குருணால் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. குருணால் பாண்டியா 49 ரன்களும், அம்பதி ராயுடு ஆட்டமிழக்காமல் 62 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ 38.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×