search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரு பகவான்"

    • திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
    • வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.

    திட்டை திருத்தலம் கோயிலும் எதிரே திருக்குளமும் என அழகுற அமைந்துள்ளது.

    ஒருவருக்கு திருமணம் நடக்கவேண்டுமெனில் குருவின் பார்வை வேண்டும்.

    குருவருள் வேண்டும். குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

    இதைத்தான் புராணமும் தெரிவிக்கிறது.

    ஆனானப்பட்ட உமையவள், சிவனாரை மணம் புரிய வேண்டினாள்.

    குரு பார்வை வேண்டும் என்பதை அறிந்தாள்.

    திட்டை எனும் திருத்தலத்துக்கு வந்தாள்.

    தேவ குருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள்.

    இதன் பலனாக குருவின் பார்வை கிடைக்கப்பெற்றாள்.

    சிவனாரைத் திருமணம் புரிந்தாள் என விவரிக்கிறது புராணம்.

    திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

    வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.

    விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும்.

    வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது.

    • மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான்.
    • மஞ்சள் நிற ஆடையை தானம் செய்யுங்கள்

    திட்டை குருபகவானை வியாழக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் வந்து தரிசியுங்கள்.

    குருவின் பார்வை நம் மீது பட்டாலே போதும்... குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்.

    நல்ல படிப்பிருந்தும் வேலை இல்லை என்று வருந்துவோர், அதிக சம்பளம் இல்லையே என்று கலங்குவோர், உரிய வயது வந்தும் திருமணம் இன்னும் கைகூடவில்லையே என்று கண்ணீர் விடுபவர்கள், திட்டை வசிஷ்டேஸ்வரர் திருத்தலத்துக்கு வந்து, தனிச்சந்நிதியில் அருள் பாலிக்கும் குரு பகவானை வணங்கி வழிபடுங்கள்.

    தரிசித்துப் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

    குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். குருவின் பார்வை கிடைக்கப் பெறுவீர்கள்.

    இதுவரை இருந்த குழப்ப நிலையெல்லாம் மாறும்.

    மனதில் தைரியமும் புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் தந்தருளுவார் குரு பகவான்.

    மஞ்சள் நிற ஆடையை தானம் செய்யுங்கள்

    வியாழ பகவானுக்குரிய நாளாகிய வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம்.

    நீராடி மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும்.

    குருபகவானுக்கும் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்களும் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

    கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட்ட பின்னர், மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம்.

    மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம்.

    கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

    • 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம்.
    • உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

    நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம்.

    அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம்.

    திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.

    அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

    தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான்.

    தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார்.

    கயிலாயநாதரும் சந்திரனின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.

    திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவ பெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன்.

    இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப் பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார்.

    24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம்.

    உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

    • இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
    • நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு.

    நவக்கிரகங்களில் மகத்தான சுப பலம் கொண்டவர் குரு.

    தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர்.

    மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர்.

    எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

    இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

    நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர் வியாழ பகவான் எனப்படும் குரு.

    மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு.

    இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும் குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

    இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட யோகம் தரும் அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    • இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம்.
    • ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர். தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர்.

    திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.

    ஆக, பாடல் பெற்ற திருத்தலம் எனும் பெருமையைப் பெறுகிறது, திட்டை.

    ஆனால், திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு எப்போது வந்தார், என்ன விளையாடல் நிகழ்ந்தது என்பன போன்ற தகவல்கள் பெரிய புராணத்தில் குறிப்பிடப் படவில்லை.

    இந்தத் தலத்தின் பெருமைகளை, ஸ்ரீலோக நாயகி சமேத ஸ்வயம்பூ தேஸ்வரர் புராணக் குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது.

    சோழ தேசத்தின் மிகத் தொன்மையான, அழகிய, அற்புதமான ஆலயங்களில், தென் குடித்திட்டை திருத்தலமும் ஒன்று!

    இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம்.

    ஆம், சுவாமி தான்தோன்றீஸ்வரர்.

    தானே தோன்றி தன் இருப்பை வெளிப்படுத்தியவர்.

    திருக்கயிலாயம், காசி, திருக்காஞ்சி, சிதம்பரம் முதலான பல தலங்களில் சிவனார், மக்களுக்கு அருள் செய்ய சுயம்பு மூர்த்தமாக, தானே வெளிப்பட்டார் என்கின்றன புராணங்கள்.

    அந்த வகையில், சுயம்புமூர்த்தமாக திட்டையிலும் தோன்றினார் சிவனார்.

    அப்படியான சிவ தலங்களில் 22-வது திருத்தலம் தென்குடித்திட்டை.

    தலம், தீர்த்தம், மூர்த்தம்... விசேஷங்கள்!

    பல பெருமைகளைத் தாங்கி நிற்கிறது தென்குடித்திட்டை திருத்தலம்.

    வசிஷ்டர் இங்கு வந்து ஆசிரமம் அமைத்து, இறைவனை வழிபட்டு, தவமிருந்த புண்ணிய பூமி இது.

    எனவே இந்தத் தலம் வசிஷ்டாஸ்ரமம் எனும் பெயரைப் பெற்றது.

    வசிஷ்ட முனிவர், கிருதயுகத்தில் பலாசவனம் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

    இந்தத் தலத்துக்கு! ஸ்ரீபைரவர், திரேதா யுகத்தில் இந்தத் தலத்தின் மகிமையை உணர்த்தும் வகையில், சம்யாகவனம் என்று இந்தத் தலத்தைப் போற்றி சொல்லியிருக்கிறார்.

    துவாபர யுகத்தில், வில்வ வனமாகத் திகழ்ந்த இந்தத் தலத்தை வில்வவனம் என்றே அழைத்துள்ளார் சேஷ பகவான்.

    • இங்கு நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள குரு காத்திருக்கிறார்.
    • அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்து, கோவிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார்.

    குருபகவானுக்குரிய மற்றொரு சிறப்பான தலம் திட்டை.

    தென்குடித் திட்டை திருத்தலத்தைத்தான் எல்லோரும் திட்டை என்று சொல்கிறார்கள்.

    திட்டை எனும் சொல் மருவியே திட்டு என்றானது.

    அதாவது திட்டை என்றால் மேடு என்று பொருள்.

    பக்தர்களாகிய நம்மை, மேட்டுக்குக் கொண்டு வருவேன் என்பதை, இப்படியொரு தலத்தில் அமர்ந்து கொண்டு, சூசகமாக சொல்கிறார் தென்னாடுடைய சிவனார்.

    இங்கு நமக்கெல்லாம் ராஜ யோகம் முதலான சகல யோகங்களையும் தந்து அருள குரு காத்திருக்கிறார்.

    ஒரு கோவிலில், கோபுர வாசல் வழியே உள்ளே வந்து, பலிபீடம், கொடிமரம், நந்தியெல்லாம் கடந்து, மகா மண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் பார்த்துக் கொண்டே, அங்கே இருக்கிற விநாயகரையும் துவார பாலகர்களையும் தரிசித்தபடியே, கருவறைக்கு அருகில் வருவோம்.

    அங்கே கருவறையில் இருக்கிற தெய்வமே மூலக் கடவுள். மூலவர்.

    அவரின் திருநாமத்தைக் கொண்டே அந்தக் கோவில் அழைக்கப்படும்.

    கல்வெட்டுகளிலும் குறிப்புகளிலும் அறநிலையத்துறை பதிவுகளிலும் மூலவரின் பெயரைக் கொண்டே கோவில் குறிக்கப்பட்டிருக்கும்.

    ஆனால், அந்த மூலவரின் சாந்நித்தியத்தையும் கடந்து, மக்களின் மனங்களில் பரிவார தெய்வமாகத் திகழ்பவர் அப்படியே பதிந்துவிடுவார்.

    அவரே அந்த ஆலயத்தின் நாயகனாகத் திகழ்ந்து, கோவிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார்.

    தமிழ் கூறும் நல்லுலகில், இப்படி பரிவாரக் கடவுளே, பரிகாரக் கடவுளாகவும், பலன் தரும் தெய்வமாகவும் நின்று அருள்பாலிக்கிற ஆலயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    அந்த வகையில், திட்டை திருத்தலமும் முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம்.

    இங்கே, மக்களின் மனங்களில் இடம் பிடித்த, குரு பகவானே முதன்மையாக வழிபடப்படுபவராக உள்ளார்.

    தமிழகத்தில் குரு பகவான் குடிகொண்டு அருள்பாலிக்கும் தலங்களில், திட்டை முக்கியமான தலம் ஆகும்.

    • ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.
    • குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது.

    ஒரு ஜாதகத்தில் குரு கெட்டுப் போயிருந்தால், அந்த ஜாதகர் ஒழுக்க நெறிகளைக் கைவிடுதல், பெரியோர் சொல் கேளாமை, தெய்வ நிந்தனை, உறவினருடன் பகை, பொய் கூறல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்.

    தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்கள் அளவுக்கு அதிகமாக நடைபெறவும் குரு பகவானுக்கு செய்யும் பரிகார முறைகள் உதவும்.

    வியாழனன்று குரு ஓரையில் நல்ல நேரத்தில் குருவிற்கு உரிய கோலத்தை வடகிழக்கு திசையில் வரைந்து, அதன் மேல் முல்லை மலர்கள் பரப்பிக் குரு யந்திரத்தை வைத்து அதற்கு முல்லை மலர் சூட்டி சந்தனப் பொட்டிட்டுப் பொன்னிறத்தட்டில் கடலை வைத்துத் தூப தீபம் காட்டிக் குரு காயத்ரியை 108 முறை மன ஒருமையுடன் கூறினால் குருவால் ஏற்பட்ட தீய பலன்கள் விலகும்.

    நல்ல பலன்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்.

    வியாழக்கிழமையன்று வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடுதல், குருவுக்கு உரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுதல் நல்லது.

    வியாழனன்று குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மஞ்சள் நிற ஆடை அணிவித்து புஷ்பராகம் வெண் முல்லை மலர்களால் அலங்கரித்து குருவுக்குரிய மூல மந்திரத்தினை ஓதி, அரச சமித்தினால் வேள்வி செய்து, கடலை பொடி அன்னத்தால் ஆகுதி செய்து, அஷ்டோத்திர அர்ச்சனை தூப தீப நெய்வேத்தியம் ஆகியவற்றைச் செய்து அடானா ராகத்தில் குருவுக்குரிய கீர்த்தனைகளைப் பாடி வணங்கக் குருக் கிரக தோஷம் நீங்கும்.

    மஞ்சள் நிற ஆடையை உடுத்துவது புஷ்பராகமணியை அணிவது, மஞ்சள் நிற ஆடை, கடலை தானியம் ஆகியவற்றைத் தானம் செய்வது வியாழக்கிழமை களில் விரதங்களை மேற்கொள்வது ஆகியவற்றால் குரு தோஷப் பரிகாரங்களைச் செய்யலாம்.

    எட்டுத் திசைகளுள் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே வியாழனுக்குரிய திசையாகக் கருதப்படுகின்றது.

    ஆலங்குடி மற்றும் திட்டை திருத்தலங்கள் குருபகவானுக்கு உரிய தலங்களாகும்.

    இங்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும்.

    • இவருடைய மனைவியர் தாரை, சங்கினி ஆகியோர் ஆவர்.
    • பரத்வாஜர் யமகண்டன், கசன் ஆகியோர் இவருடைய புதல்வர்கள் ஆவர்.

    இந்திரனின் அமைச்சராகவும் தேவர்களின் குருவாகவும் திகழும் வியாழன் பிரம்மதேவரின் புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும் வசுதா தேவிக்கும் பிறந்த குழந்தைகளுள் ஏழாவதாக பிறந்த சிறப்பினை உடையவராவார்.

    இவருடைய மனைவியர் தாரை, சங்கினி ஆகியோர் ஆவர்.

    பரத்வாஜர் யமகண்டன், கசன் ஆகியோர் இவருடைய புதல்வர்கள் ஆவர்.

    குருவின் ஆட்சி வீடுகள் தனுசு, மீனம், மூலதிரிகோண ராசி தனுசு, உச்ச வீடு கடகம்.

    நீச்ச வீடு மகரம் ஆகும். மேஷம் சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியன நட்பு வீடுகள்.

    ரிஷபம், மிதுனம் துலாம் பகை வீடுகள்.

    சூரியன், சந்திரன் நண்பர்கள்.

    புதன் சுக்கிரன் பகைவர்கள்.

    சனி, ராகு, கேது சம நிலையினர்.

    • ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.
    • குரு பார்வை பெற்ற, சேர்க்கைப் பெற்ற கிரகங்கள், நன்மை தரும்.

    குரு என்னும் வியாழ பகவானை தேவகுரு என்றும், நுண்ணறிவு மிக்கவராகையால் 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள்.

    ஜோதிடத்தில் குரு பகவானை புத்திகாரகன் என்று சொல்வார்கள்.

    குரு நன்றாக அமைந்திருந்தால் நல்ல பிள்ளைகள், அவர்களால் முன்னேற்றம், மகிழ்ச்சி ஆகியவற்றைத் தருவர்.

    கம்பீரமான தோற்றம், சிறந்த குரல் வளம், புகழ், சன்மானம், நல்ல வீடு, வாகனம், நல்ல நண்பர்கள், சுற்றம், தெய்வ காரியங்களில் வெற்றி போன்ற பலன்களையும் குரு தர வல்லவர்.

    குரு பார்வை பெற்ற, சேர்க்கைப் பெற்ற கிரகங்கள், நன்மை தரும்.

    கோச்சார ரீதியாக ஜென்ம ராசியில் இருந்து குரு 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களுக்கு வருகையில் நன்மை உண்டாகும்.

    குருபகவானுக்கு அரசன், ஆசான், ஆண்டளப்பான், சிகண்டீ சன், சித்தன், சீவன், சுந்தரப்பொன், சுரகுரு, தேவமந்திரி, பிரகஸ்பதி, பீதகன், பொன், மந்திரி, மறையோன், வியாழன், வேதன், வேந்தன் என்று வேறு பெயர்களும் உண்டு.

    தனுசு, மீன ராசிகளுக்கு அதிபதியான இவருக்கு உரிய அதிதேவதை பிரம்மன், நிறம் - மஞ்சள், வாகனம்-மீனம், தானியம் - கடலை, மலர்- வெண்முல்லை, ஆடை- மஞ்சள் நிற ஆடை, புஷ்பராகமணி, உணவு- கடலைப் பொடி அன்னம், ஆபரணம்- அரசன் சமித்து, தங்க உலோகம் ஆகியன ஆகும்.

    • திருமணத்தடை நீங்க-திருமணஞ்சேரி
    • மேல் படிப்பில் வெற்றிபெற-திருப்பதி மூகாம்பிகை அம்மன், வடிவுடை அம்மன்.

    பரிகார திருக்கோவில்கள்

    திருமணத்தடை நீங்க:

    திருச்செந்தூர், திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, மாயவரம், மேதா தட்சிணா மூர்த்தி.

    குழந்தை பாக்கியத்திற்கு:

    ஆலங்குடி, சென்னை திருவுடை அம்மன், இருக்கன்குடி மாரியம்மன், தென்குடித் திட்டை குரு பகவான்.

    மேல் படிப்பில் வெற்றிபெற:

    திருப்பதி மூகாம்பிகை அம்மன், திருவொற்றியூர் வடிவுடை அம்மன்.

    தொழில் செழிக்க, வியாபாரம்பெருக:

    ஆலங்குடி, திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி, பட்டமங்கலம் குரு தட்சிணாமூர்த்தி.

    வழக்கில் ஜெயிக்க, செய்வினை ஒழிய:

    அனுமந்தபுரம் வீரபத்ர சுவாமி, வெக்காளி அம்மன், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி, பண்ணாரி அம்மன்.

    ஆன்மிகத்தில் தெளிவு வர:

    திருவண்ணாமலை, திருவாலங் காடு, பிள்ளையார்பட்டி, மதுரை மீனாட்சி திருவலிதாயம் தட்சிணாமூர்த்தி.

    கடன் பிரச்சனை நீங்க:

    மாங்காடு காமாட்சி, மதுரை பாண்டி கோவில், சுசீந்திரம் தாணுலிங்கேஸ்வரர், திருவனந்தபுரம் ஆற்றுகரை அம்மன்.

    புதிய தொழில் கிடைக்க, வருமானம்பெருக:

    திருப்பதி, சென்னை காளிகாம்பாள், கீழ ஈரால் காமாட்சி அம்மன், நெல்லை ஆழ்வார்திருநகரி வாமன அவதார திருக்கோவில்.

    • குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
    • கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    வியாழன்-குருபகவான்

    குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள்.

    குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

    நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி.

    இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.

    ''நவகிரகங்களிலேயே மிகவும் விரும்பப்படுபவராகவும் இயற்கைச் சுபராகவும் திகழ்பவர் குரு பகவான் (வியாழன்)

    அளவிலும் மற்ற கிரகங்களைவிட பெரிய கிரகமாகவும் முழுசுபராகவும் திகழ்பவர்.

    கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    ஜோதிட சாஸ்திரத்தில் எந்த கிரகம்

    கெட்டுப்போயிருந்தாலும் குருவோ சுக்கிரனோ இவர்கள் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தாலும் ஜாதகர் சோடை போகாமல் நன்றாக இருப்பார்.

    குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.

    குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கும் யோகமான பலன்களைத் தருவார்.

    குருவே தனக்காரகனாகவும் புத்திரக்காரகனாகவும் இருக்கிறார். சந்ததி விருத்திக்கும் இவரே காரணம்.

    வாழ்வதற்குத் தேவையான பண வரவுக்கும் இவரே பொறுப்பாகிறார்.

    மஞ்சள் நிறத்துக்கு அதிபதியாக இருப்பதால், குரு வலுத்திருப்பவர்கள் தங்கம் அதிகமுள்ளவர்களாகவும் செல்வந்தராகவும் இருப்பார்கள்.

    • கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
    • சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

    நவக்கிரக தோஷ பரிகாரங்கள்

    1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

    2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

    3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

    4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.

    5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

    6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

    7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

    8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

    9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும். 

    ×