search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Baghavan"

    • குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
    • கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    வியாழன்-குருபகவான்

    குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள்.

    குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.

    நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி.

    இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.

    ''நவகிரகங்களிலேயே மிகவும் விரும்பப்படுபவராகவும் இயற்கைச் சுபராகவும் திகழ்பவர் குரு பகவான் (வியாழன்)

    அளவிலும் மற்ற கிரகங்களைவிட பெரிய கிரகமாகவும் முழுசுபராகவும் திகழ்பவர்.

    கானகத்தில் பெரிதான யானையும் கடலில் பெரியதான திமிங்கிலமும் குருவின் ஆதிபத்தியம் பெற்றவை.

    ஜோதிட சாஸ்திரத்தில் எந்த கிரகம்

    கெட்டுப்போயிருந்தாலும் குருவோ சுக்கிரனோ இவர்கள் இருவரில் ஒருவர் நன்றாக இருந்தாலும் ஜாதகர் சோடை போகாமல் நன்றாக இருப்பார்.

    குரு பலம் பெற்று இருந்தால் ஜாதகருக்கு குரு தசை நடக்கும்போது புகழடையச் செய்வார்.

    குரு பகவான் தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய ஆறு லக்னக்காரர்களுக்கும் யோகமான பலன்களைத் தருவார்.

    குருவே தனக்காரகனாகவும் புத்திரக்காரகனாகவும் இருக்கிறார். சந்ததி விருத்திக்கும் இவரே காரணம்.

    வாழ்வதற்குத் தேவையான பண வரவுக்கும் இவரே பொறுப்பாகிறார்.

    மஞ்சள் நிறத்துக்கு அதிபதியாக இருப்பதால், குரு வலுத்திருப்பவர்கள் தங்கம் அதிகமுள்ளவர்களாகவும் செல்வந்தராகவும் இருப்பார்கள்.

    ×