search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "guru"

  • கல்விச் செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும்.
  • ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள்.

  நாம் பிறக்கையில் எதையும் கொண்டு வருவது இல்லை. இறக்கையில் கொண்டு போவதும் இல்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் காத்திருக்கும் ஆசிரியர் உறவே முக்கியமான, முதன்மையான உறவு. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும் சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறை கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடங்களிலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூட கூறலாம்.

  மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். அதில் `ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணிமொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கி அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணரவைப்பார்கள் ஆசிரிய பெருமக்கள்.

  இன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் முன் எப்போதையும் விட இப்போது மாணவர்களை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலக்கி வைக்காமல் அவர்களின் திறமைகளை தனித்தன்மைகளை காட்ட வழிவகுக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு பாதையமைத்து கொடுக்கின்றனர்.

  மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வான் உயரப் பறந்து வெற்றி சாதனைப் படைக்கின்றனர். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்து விடாது.

  மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், கல்வியிலும், உணவு-உறக்கம் மறந்து உழைத்த உழைப்பையும், சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும் பெற்ற வேதனைகளையும் பார்த்தால் அவனால் சாதனையாளனாக வர வாய்ப்பில்லாமல் போகலாம். தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்ற ஊக்கத்தையும், உணர்வுகளையும் ஆசிரியர் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளர்களாக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஒருவிதத்தில் ஒளிந்திருக்கிறது.

  உழைத்து வளர்த்த திறமையை, தகுதியை தக்க தருணத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து வழிகாட்டி மேம்படுத்துபவர் ஆசிரியர். மாணவர்களுக்கு குண நலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொது நலம், தலைமைத்தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று போன்றவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தும் இக்காலக்கட்டத்தில் குழித்தோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று, குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்து சொல்ல கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பதுப்போல, இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார்.

  இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கை சிக்கலுக்கு தீர்வுகாண முடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை திறமைக்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டும் ஆசனாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகின்றனர்.

  ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராய கூடியவர்கள் மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தை சீரழித்து விடும். சேவை என கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திற்கும் முதன்மையானதாகவும், சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.

  • கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.
  • சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும்.

  நவக்கிரக தோஷ பரிகாரங்கள்

  1. சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்த்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி ,யாகத்தீயை எழுப்பி கோதுமை சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சவுராட்டிர ராகத்தில் சூரிய கீர்த்தனைகளைப் பாடி பிராத்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

  2. சந்திர பகவானுக்குத் திங்கட்கிழமையில் அபிஷேகம் செய்வித்து வெள்ளை வஸ்த்திரம் முத்துமாலை வெள்ளலரி என்பவற்றால் அலங்காரம் செய்து சந்திர மந்திரங்களை ஓதி எருக்கஞ்சமித்தினால் யாகத் தீயை எழுப்பி பச்சரிசி, பாலண்மை, தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து, அர்ச்சனை செய்து, தூப தீய நைவேத்தியம் கொடுத்து, அசாவேரி ராகத்தில் சந்திர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரக் கிரக தோஷம் நீங்கும்.

  3. அங்காரக பகவானுக்கு செவ்வாய்கிழமைகளில் அபிஷேகம் செய்துவித்து சிவப்பு வஸ்திரம் பவழம் சிவப்பு அலரி என்பவற்றால் அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை ஓதி கருங்காலி சமித்தினால் யாகத்தீயை எழுப்பித்த வரம் பருப்புப் பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, சுருட்டி ராகத்தில் அங்காரகக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அங்காரக கிரக தோஷம் நீங்கும்.

  4. புதபகவானுக்குப் புதன்கிழமையில் அபிஷேகம் செய்வித்துப் பச்சை வஸ்திரம் மரகமணி வெண்தாமரை என்பவற்றால் அலங்காரம் செய்து, புதன் மந்திரங்களை ஓதி நாயுருதி சமித்தால் யாகத் தீயை எழுப்பிப் பாசிப்பயத்தம் பருப்புப்பொடி அன்னத்தை ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து, நாட்டக்குறிச்சி ராகத்தில் புதன் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் புதக்கிரகதோஷம் நீங்கும்.

  5. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள் நிற வஸ்திரம் புஷ்பராகமணி, வெண்முல்லை என்பவற்றால் அலங்காரம் செய்து குரு மந்திரங்களை ஓதி அரசஞ்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி கொத்து கடலைப் பொடி அன்னம் எலுமிச்சை பழ அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீய நைவேத்தியம் கொடுத்து அடாணாராகத்தில் குரு கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் குருக்கிரக தோஷம் நீங்கும்.

  6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, வெள்ளை வஸ்த்திரம் வைரக்கல் வெண்தாமரை மலர் என்பவற்றால் அலங்காரம் செய்து சுக்கிர மந்திரங்களை ஓதி அத்தி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி மொச்சைப் பொடியன்னம் தயிரன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, பரசுராகத்தில் சுக்ர கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சுக்கிரக் கிரகதோஷம் நீங்கும்.

  7. சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்த்திரம், நீலக்கல் நீலோற்பலம் (கருங்குவளை) என்பவற்றால் அலங்காரம் செய்து, சனிபவகானின் மந்திரங்களை ஓதி வன்னி சமித்தினால் யாகத்தீயை எழுப்பி, எள்ளுத்தானியம், எள்ளுப்பொடி அன்னம் என்பனவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து நல்ல எண்ணைத் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, யதுகுல காம்போதி ராகத்தில் சனிபகவான் கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆர்த்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சனிக்கிரஹ தோஷம் நீங்கும்.

  8. ராகு பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம் கோமேதக மணி நீலமந்தாரை இலுப்பைப்பூ என்பவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஓதி அறுகம் புல்லால் யாகத்தீயை எழுப்பி உளுந்து தானியம் உளுத்தம் பருப்புப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூபதீப நைவேத்தியம் கொடுத்து, ராகப்பிரியா ராகத்தில் கீர்த்தனைகளைப் பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ராகுக் கிரகதோஷம் நீங்கும்.

  9. கேது பகவானுக்கு ஏதாவதொரு கிழமையில் செய்வித்து, பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லிமலர் என்பவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதித் தருப்பையினால் யாகத்தீயை எழுப்பிப் கொள்ளுதானியய் கொள்ளுப்பொடி அன்னம் என்பவற்றால் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்துச் சண்முக பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளைப் பாடிப் பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கேதுக்கிரகதோஷம் நீங்கும். 

  • குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது.
  • தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும்.

  1. இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 கி.மீ. தூரத்திற்க்கு அப்பால் உள்ளது.

  2. இது தன்னைத்தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது.

  3. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது.

  4. மந்திரம், ஞாபகசக்தி, வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து, பணம், அனைத்திற்கும் காரகன் ஆகிறார்.

  5. குரு பார்வை கோடி புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.

  6. குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும்.

  7. குரு தோஷங்கள் விலகிட ஆலங்குடி சென்று வழிபடலாம்.

  8. 24 நெய் தீபங்கள் ஏற்றி 24 முறை மவுன வலம் வரவேண்டும்.

  9. குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள்நிற வஸ்திரம் வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து எலுமிச்சம் பழம் அன்னம் நிவேதிக்க வேண்டும்.

  10. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச்ச வீடு மகரம்.

  11. குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இணைந்து 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம் கிடைக்கும். கோடிஸ்வர யோகம் அமையும்.

  12. மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.

  13. பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

  14. குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும்.

  15. ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார்.

  16. அறிவு வாய்ந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.

  17. பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார்.

  18. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும்.

  19. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.

  20. வடக்குத் திசை குருவிற்கு உரியது.

  21. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை.

  22. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.

  23. ஒரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்ளும் குரு பகவான் பன்னிரெண்டு ராசிகளையும் கடக்க பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.

  24. குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் உலவும் போது சந்திரன் மக நட்சத்திரத்தில் வந்து குருவை தொட்டுவிட்டால் அன்று தான் மகாமகம். இது மருவி மாமாங்கமாகி விட்டது. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும். வடநாட்டில் கும்பமேளா என்று நடப்பது போல தமிழ்நாட்டில் மகாமக விழா நடத்தப்படுகிறது.

  25. குரு பகவான் ஆங்கிரச முனிவருக்கும், சிரத்தா தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு தாரை என்ற மனைவி உண்டு.

  26. ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் பெற்ற குருவிற்கு பரத்வாஜர் என்ற மகனும் இருந்தார். குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன.

  28. காசிக்கு சென்று ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாறாயிரம் ஆண்டுகள் சிவபெருமானை நோக்கி குரு தவம் செய்தார். இவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு.

  29. குருவிற்கு பிரஹஸ்பதி என்றும், வியாழன் என்றும், மந்திரி என்றும், அரசன் என்றும் பல பெயர்கள் உண்டு.

  30. குரு பகவான் தமிழகத்தில் திருச்செந்தூர், பாடி, தென்குடி திட்டை ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று ஈஸ்வரனை பூஜித்து பேறு பெற்றதாக கூறப்படுகிறது.

  • வியாழன் தோறும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும்.
  • தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி.

  நவகிரகங்களில் ஒருவரான குரு எனப்படும் வியாழ பகவானுக்கு ஜோதிட நூல்களில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாதகப்படி குருவின் பார்வை பட்டால் தான் திருமணம், குழந்தை செல்வம், சிறந்த பதவி, செல்வச்சிறப்பு ஆகியவை ஏற்படும்.

  ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இல்லாமல் இருந்தாலோ, கொடூரமானவராக இருந்தாலோ, கோசார ரீதியாகக் கெட்டவரானாலோ குரு தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டும். வியாழன் தோறும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும்.

  தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தட்சிணாமூர்த்தியை தரிசித்து பூஜித்து தியானித்து அர்ச்சனை முதலியவை செய்தால் குரு தோஷம் விலகும் என்று சூரியனார் கோவில் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  தோஷம் நீங்க பூஜை செய்ய மிகச்சிறப்பான இடம் ஆலங்குடி. குருதோஷத்துக்கு ஆலங்குடி பரிகாரத்தலம் என்று அதன் தலபுராணமும் குறிப்பிடுகிறது. குருபகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்து மஞ்சள் நிற வஸ்திரம், புஷ்பராகமணி, வெண்முல்லை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட குரு பகவானை வணங்க வேண்டும்.

  அரசமர சமித்துகளால் ஹோமம் செய்து கடலைப்பொடி அன்னத்தால் அல்லது எலுமிச்சை ரச அன்னத்தால் ஆகுதி செய்து வேள்வியை முடிக்க வேண்டும். கொத்துக்கடலையில் அவருக்கு மாலை அணிவிக்க வேண்டும். குரு கீர்த்தனைகளை அடாணா ராகத்தில் பாடி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இவற்றால் குரு தோஷம் நீங்கும்.

  • குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா 22-ந் தேதி நடக்கிறது.
  • காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை நடக்கிறது.

  சோழவந்தான்

  மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சித்திரரத வல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார்.அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

  ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு குரு பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்து குரு பகவானை தரிசித்து செல்வார்கள்.

  இந்த ஆண்டு வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) குருபெயர்ச்சி விழா தொடங்குகிறது. அன்று காலை 10.45 அளவில் லட்சார்ச்சனை நடக்கிறது. 22-ந் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.

  அன்று இரவு 9மணி அளவில் யாகசாலை தொடங்கி 11.24 மணிக்குள் பரிகார மகாயாகம், மஹா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடை பெறுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

  விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் பாலமுருகன், தக்கார் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், தீயணைப்பு நிலைய அலுவலர் ரூபன் ஆகியோர் விழா ஏற்பாடு களை ஆய்வு செய்து வருகின்றனர்.

  குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவான்.
  நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவான்.

  குரு யோகம் பெற்றால், வணங்காதவர்களை கூட இருகரம் கூப்பி வணங்க வைத்துவிடும். கட்டுமஸ்தான உடல்வாகு தரக்கூடியவர் குரு. நிரந்தரமான வெற்றி மகுடத்தை சூட்ட வைப்பவர். மறைந்த பின்பும் சிலையாக இருந்து மரியாதை செய்ய வைப்பவர். விசுவாசம் மிக்க உறவுகள் மனைவி, குழந்தைகள் கொடுப்பார். உயிரை கொடுக்கும் நண்பர்களை தருபவர்.

  ஒருவர் ஜாதகத்தில் குரு யோகம் பெற்றிருந்தால், அந்த நபரை அரசியலில் உயர் பதவிகள் தேடி வரும். சட்ட நுணுக்கம் தெரிவதும், கோவில் வேத ஆகம விதிப்படி பூஜை புணஸ்காரம் செய்யும் நுணுக்கமான கலைகள் கற்று இருப்பதற்கு குருவே காரணம். வழக்குகள் சாதகமாக அமைய வைப்பது குருவே. அரண்மனை போன்ற வீடு அமைவதும், அதனை அனுபவிக்கும் பாக்கியம் தருவதும் குரு தான்.

  எல்லா இன்பங்களையும் துறந்து துறவரம் மேற்கொள்ளும் வைராக்கியமான மனதை கொடுப்பவரும் குரு தான். எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லக்கூடிய, மன உறுதியைத் தருபவர். உடலையே மறைக்கும் அளவில் தங்கம் தரக்கூடியவர். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கும் பாக்கியம் தருபவர். விருதுகள் பெற வைப்பது குருவே; செய்த தர்மங்களால் துன்பங்கள் வராமல் காத்து நிற்கும் புண்ணியத்தைத் தருபவரும் குருவே. குழந்தைகள் மேன்மை அடைந்து அவர்கள் மூலம் ஆதாயம் பெற வைப்பதும் குருவே, மனக்கவலை இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை தருவதும் குரு பகவான் தான்.

  காரகன் - புத்திரர்கள்

  தேவதை - பிரம்மன்

  தானியம் - வெள்ளை கொண்டைக் கடலை

  உலோகம் - பொன்

  நிறம் - மஞ்சள்

  குணம் - சாத்வீகம்

  சுபாவம் - சவுமியர்

  சுவை - தித்திப்பு

  திக்கு - வடக்கு

  உடல் அங்கம் - வயிறு

  தாது - மூளை

  நோய் - வாதம்

  பஞ்சபூதம் - ஆகாயம்

  பார்வை நிலை - தான் நின்ற ராசியில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை முழு பார்வையும், 3, 10 ஆகிய இடங்களை கால் பங்கும், 4, 8 ஆகிய இடங்களை முக்கால் பங்கும் பார்க்கிறார்.

  பாலினம் - ஆண்

  உபகிரகம் - எமகண்டன்

  ஆட்சி ராசி - தனுசு, மீனம்

  உச்ச ராசி - கடகம்

  மூலத்திரிகோண ராசி - தனுசு

  நட்பு ராசி - மேஷம், சிம்மம், விருச்சிகம்

  சமமான ராசி - கும்பம்

  பகை ராசி - ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம்

  நீச்ச ராசி - மகரம்

  திசை ஆண்டுகள் - பதினாறு ஆண்டுகள்

  ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - ஒரு வருடம்

  நட்பு கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்

  சமமான கிரகங்கள் - சனி, ராகு, கேது

  பகையான கிரகங்கள் - புதன், சுக்ரன்

  அதிக பகையான கிரகம் - சுக்ரன்

  இதர பெயர்கள் - ஆசான், பிரகஸ்பதி, அரகுரு மறையோன், அந்தணன், அரசம், தட்சணன்

  நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி 
  ×