search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Alangudi"

  • குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது.
  • தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும்.

  1. இது சூரியனுக்கு சுமார் 48,00,00,030 கி.மீ. தூரத்திற்க்கு அப்பால் உள்ளது.

  2. இது தன்னைத்தானே 9 மணி 55 நிமிடங்களில் சுற்றுகிறது.

  3. குரு புத்திரகாரன் என அழைக்கப்படுகிறது.

  4. மந்திரம், ஞாபகசக்தி, வேதமந்திர சாஸ்திர அறிவு,யானை,குதிரை போன்ற வாகன அந்தஸ்த்து, பணம், அனைத்திற்கும் காரகன் ஆகிறார்.

  5. குரு பார்வை கோடி புண்ணியம். இவரின் பார்வையால் அனைத்து தோஷமும் நீங்கும்.

  6. குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும்.

  7. குரு தோஷங்கள் விலகிட ஆலங்குடி சென்று வழிபடலாம்.

  8. 24 நெய் தீபங்கள் ஏற்றி 24 முறை மவுன வலம் வரவேண்டும்.

  9. குரு பகவானுக்கு வியாழக்கிழமையில் அபிஷேகம் செய்வித்து மஞ்சள்நிற வஸ்திரம் வெண்முல்லை ஆகியவற்றால் அலங்காரம் செய்து எலுமிச்சம் பழம் அன்னம் நிவேதிக்க வேண்டும்.

  10. சுபகிரக வரிசையில் முதன்மையாக பேசபடும் குருபகவான் ஆட்சி வீடுகள் மீனம், தனுசு. உச்ச வீடு கடகம், நீச்ச வீடு மகரம்.

  11. குருபகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு இணைந்து 6,8,12 வது இடங்களில் மறைவு பெறாமல் அமைந்தால் ராஜயோகம் கிடைக்கும். கோடிஸ்வர யோகம் அமையும்.

  12. மேதைகளையும், ஞானிகளையும் உருவாக்குவது குருபகவான். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும்.

  13. பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ- சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.

  14. குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும்.

  15. ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார்.

  16. அறிவு வாய்ந்த குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.

  17. பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வியாழன் தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி ஆவார்.

  18. தலைமை தாங்குவது குரு பலத்தால் ஏற்படும்.

  19. திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும்.

  20. வடக்குத் திசை குருவிற்கு உரியது.

  21. பிரம்மன் இவருக்கு அதி தேவதை. இந்திரன் பிரத்யதி தேவதை.

  22. புஷ்பராகம் குருவிற்கு உகந்த ரத்தினம்.

  23. ஒரு ராசியை கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்ளும் குரு பகவான் பன்னிரெண்டு ராசிகளையும் கடக்க பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன.

  24. குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும் உலவும் போது சந்திரன் மக நட்சத்திரத்தில் வந்து குருவை தொட்டுவிட்டால் அன்று தான் மகாமகம். இது மருவி மாமாங்கமாகி விட்டது. இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வரும். வடநாட்டில் கும்பமேளா என்று நடப்பது போல தமிழ்நாட்டில் மகாமக விழா நடத்தப்படுகிறது.

  25. குரு பகவான் ஆங்கிரச முனிவருக்கும், சிரத்தா தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு தாரை என்ற மனைவி உண்டு.

  26. ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் பெற்ற குருவிற்கு பரத்வாஜர் என்ற மகனும் இருந்தார். குருவைப்பற்றி புராணத்தில் பல கதைகள் உள்ளன.

  28. காசிக்கு சென்று ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாறாயிரம் ஆண்டுகள் சிவபெருமானை நோக்கி குரு தவம் செய்தார். இவர் தவத்தை மெச்சிய சிவபெருமான் கிரக மண்டலத்தில் இவருக்கு இடம் கொடுத்ததாக வரலாறு.

  29. குருவிற்கு பிரஹஸ்பதி என்றும், வியாழன் என்றும், மந்திரி என்றும், அரசன் என்றும் பல பெயர்கள் உண்டு.

  30. குரு பகவான் தமிழகத்தில் திருச்செந்தூர், பாடி, தென்குடி திட்டை ஆகிய மூன்று தலங்களுக்கு சென்று ஈஸ்வரனை பூஜித்து பேறு பெற்றதாக கூறப்படுகிறது.

  • ஆலங்குடியில் கலையரங்கம் இடிக்கப்பட்டது
  • 1973 -ம் ஆண்டு கட்டப்பட்டது

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 1973 -ம் ஆண்டு கட்டப்பட்ட கலையரங்கத்தில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர். இந்நிலையில் ஆலங்குடியின் அடையாளமாக திகழ்ந்த இந்த கலையரங்கம் சிதிலமடைந்ததால் அதிகாரிகளின் வழிகாட்டல்படி பேரூராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ஆலங்குடிக்கு ஒரு அடையாளம் என்றால் அது கலையரங்கம்தான். அந்த கலையரங்கத்தை சொன்னாலோ ஆலங்குடி நினைவிற்கு வரும். இந்த கலையரங்கத்தால் நாங்கள் ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்களை நேரில் பார்க்க நேர்ந்தது. தற்போது இந்த கலையரங்கம் இடித்து தரைமட்ட மாக்கப்்பட்டுள்ளதை பார்க்கும் போது மனது கஷ்டமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

  • ஆலங்குடி மாணவன் முதல் இடம் பிடித்துள்ளார்
  • மாநில அளவில் கலை பண்பாட்டு போட்டி

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பானவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் முருகானந்தம். இவர் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலை பண்பாட்டு கலாச்சார திருவிழா போட்டியில் முருகானந்தம் பங்கேற்று முதல் இடம் பிடித்து சாதனை படைத்தார். மாணவனை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் மற்றும் கிராமத்து மக்கள் பாராட்டினர்.

  • ஆலங்குடியில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது
  • 100 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்

  புதுக்கோட்டை

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெருங்கொண்டான் விடுதி ஊராட்சி கூலையன்விடுதி தனியார்மஹாலில் சமூக நல ன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலட்சுமி தமிழ்ச் செல்வன், புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ராமகிருஷ்ணன் சாமிநாதன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  • இதில் ஒருவரை ஒருவர் கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.
  • இருதரப்பி–னரும் வலங்கைமான் போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர்.

  நீடாமங்கலம்:

  திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோவில் உள்ளது.கோவிலை் சுற்றியுள்ள அகழியை தூர்வாரும் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த நிதியில் மேற்கொண்டார். தூர்வாரும் பணியின்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்தது.இதில் ஒருவரை ஒருவர் கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இருதரப்பி–னரும் வலங்கைமான் போலீசில் தனித்தனியே புகார் அளித்தனர்.

  குருமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அப்பகுதியை சேர்ந்த முருகையன், பிரபாகரன், சக்தி, ஐயப்பன், ரகுராம், குட்டி தினேஷ்், மோகன், அன்புமணி ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சக்தி, ஐயப்பன், குட்டி தினேஷ், முருகையன் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

  அதே போன்று மற்றொரு தரப்பை சார்ந்த ஐயப்பன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கட்ட பிரபு , லெனின், சரத்குமார், பிரசாத், கார்த்தி, குருமூர்த்தி, அஜித், விஜய், விக்னேஷ், அருண்குமார் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

  இச்சம்பவம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

  ஆலங்குடி:

  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு ஆகிய இடங்கள் முந்திரி காடுகள் உள்ள வன பகுதியாகும்.

  இங்கு ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் அங்குள்ள நீர்நிலைகள்வறண்டு விட்டன. எனவே குடிநீருக்காக மான்கள் ஊருக்குள் வருகின்றன. அப்படி அவை வரும் போது நாய்கள் மான்களை துரத்தி கடிக்கின்றன.

  இந்நிலையில் நேற்று தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்து விட்டது. மானை கண்ட நாய்கள் துரத்தி சென்று மானை கடித்தன. இதில் அந்த மான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

  சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் பொதுமக்கள் வனப்பகுதியில் வன உயிரினங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள அரசு தண்ணீர் வசதி செய்து தர வேண்டு மென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ×