search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deer death"

    • வண்ணிப்பாக்கம் பகுதியில் இறந்த நிலையில் புள்ளிமான் கிடந்தது.
    • வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றினர்.

    மீஞ்சூரை அடுத்த வண்ணிப்பாக்கம் பகுதியில் இறந்த நிலையில் புள்ளிமான் கிடந்தது. இதுகுறித்து ஊராட்சி தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் மீஞ்சூர் போலீசுக்கும், கும்மிடிப்பூண்டி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றினர். தண்ணீர் தேடி வந்த போது நாய்கள் கடித்ததில் புள்ளிமான் இறந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • ஊருக்குள் புகுந்த மானை நாய்கள் விரட்டி குதறியது
    • தண்ணீர் தேடி வருவதை தடுக்க நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரிமலை காப்பு காட்டில். மான், மயில், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கிறது.

    அவ்வப்போது மான், மயில் உள்ளிட்ட உயிரினங்கள் மலை அடிவாரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நுழைகிறது. அப்போது நாய்கள் கடித்து மான்கள் இறந்து போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று பொன்னேரி அருகே மலை அடிவாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்தது.

    அப்போது அங்கிருந்த நாய்கள் அதனை விரட்டி கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்தது. திருப்பத்தூர் வனத்துறையினர் அங்கு சென்று இறந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் அடக்கம் செய்தனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு ஆகிய இடங்கள் முந்திரி காடுகள் உள்ள வன பகுதியாகும்.

    இங்கு ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது கோடை காலம் என்பதால் அங்குள்ள நீர்நிலைகள்வறண்டு விட்டன. எனவே குடிநீருக்காக மான்கள் ஊருக்குள் வருகின்றன. அப்படி அவை வரும் போது நாய்கள் மான்களை துரத்தி கடிக்கின்றன.

    இந்நிலையில் நேற்று தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று வழி தவறி ஊருக்குள் புகுந்து விட்டது. மானை கண்ட நாய்கள் துரத்தி சென்று மானை கடித்தன. இதில் அந்த மான் பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து இறந்த மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

    சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் பொதுமக்கள் வனப்பகுதியில் வன உயிரினங்கள் தாகத்தை தீர்த்துக் கொள்ள அரசு தண்ணீர் வசதி செய்து தர வேண்டு மென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாராபுரம்-காங்கயம் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம்- காங்கயம் ரோட்டில் குட்டைகாடு என்ற இறந்து அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்து கிடந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வாகனம் மோதி இறந்த மானை மீட்டு எடுத்து சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    ×