என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாய் கடித்து இறந்த மான்
ஏலகிரிமலை அடிவாரத்தல் நாய்கள் கடித்து மான் சாவு
- ஊருக்குள் புகுந்த மானை நாய்கள் விரட்டி குதறியது
- தண்ணீர் தேடி வருவதை தடுக்க நடவடிக்கை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரிமலை காப்பு காட்டில். மான், மயில், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கிறது.
அவ்வப்போது மான், மயில் உள்ளிட்ட உயிரினங்கள் மலை அடிவாரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நுழைகிறது. அப்போது நாய்கள் கடித்து மான்கள் இறந்து போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று பொன்னேரி அருகே மலை அடிவாரத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் மான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்தது.
அப்போது அங்கிருந்த நாய்கள் அதனை விரட்டி கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்தது. திருப்பத்தூர் வனத்துறையினர் அங்கு சென்று இறந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் அடக்கம் செய்தனர்.
Next Story






